கடைசிக் கால சுவிசேஷபணி Jeffersonville, Indiana, USA 62-0603 1நன்றி, சகோ. ஆர்மன். சிறிது நேரம் ஜெபத்திற்காக நாம் தலை வணங்குவோம். நாம் தலை வணங்கியிருக்கும்போது, விசேஷித்த வேண்டுகோள் இருந்து, அதை கையுயர்த்தி தெரிவிக்க விரும்புகிறவர் யாராகிலும் உண்டா? கர்த்தர் இவைகளைக் காண்கிறார். அது உறுதி. அவர் அதை அருளுவாரென நம்புகிறேன். 2எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்கு மாத்திரமே இன்று காலை நாங்கள் கூடியுள்ளோமே தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல. நாங்கள் ஏற்கனவே அவருடைய பிரசன்னத்தை இங்கு உணர்ந்துவிட்டதற்காக நன்றி செலுத்துகிறோம். அவர் எங்களை சந்திக்கிறார் என்னும் நிச்சயமுடைய வர்களாயிருக்கிறோம். ஏனெனில், “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்திலே கூடியிருக்கிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்” என்பதே அவர் வாக்குத்தத்தம். இப்பொழுது கர்த்தாவே, கைகளை உயர்த்தி அறிவிக்கப்பட்ட இந்த விண்ணப்பங்களின் மீது உமது ஆசீர்வாதங்களை வேண்டும்கிறோம். அந்த கரத்தின் கீழுள்ள இருதயத்தில் என்ன உள்ளதென்று உமக்குத் தெரியும். அவை ஒவ்வொன்றுக்கும் நீர் பதிலளிக்குமாறு ஜெபிக்கிறேன். ஆராதிக்க இன்று கிடைத்த தருணத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சபைக்காகவும், ஜனங்களுக்காகவும், எங்களைப் போன்ற விலையேறப்பெற்ற விசுவாசத்தைப் பெற்றுள்ள சகோதரருக்காகவும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்மை சேவிக்க வேண்டுமென்று எங்கள் இருதயத்திலுள்ள விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக்கொள்கிறோம். வேதத்தில் நீர் கூறியுள்ளதும் ஆசாரியர்களுக்காக மாத்திரமே வைக்கப்பட்டிருந்ததுமான அந்த மறைவான மன்னாவினால் எங்களைப் போஷியும். நாங்கள் தேவனுடைய ஆசாரியர்களாயிருந்து ஆவிக்குரிய பலியை, அதாவது அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை செலுத்துகிறோமென்று கற்பிக்கப்பட்டுள்ளோம். மீதியான இந்த ஆராதனையில் ஜீவ அப்பத்தை எங்களுக்குப் பிட்டுக் கொடுத்து எங்களை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். 3நமது பெரிய குடும்பம் இன்று காலை மீண்டும் வந்திருப்பதைக் காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடன் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்த ஞாயிறு காலையன்று தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து இங்கு வந்து எங்களுடன் கூடியுள்ள அந்நியர்களுக்கு இதை கூற விரும்புகிறேன். எங்களுக்கு ஸ்தாபனம் கிடையாது. நாங்கள் ஒன்று கூடுகிறோம். அவ்வளவுதான், தேவனில் விசுவாசம் கொண்டுள்ள ஜனங்களாகிய நாங்கள், கர்த்தரை ஆராதிப்பதற்கென ஒன்றுகூடி, தேவனிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை ஏறெடுத்து, எங்கள் அறிக்கைகளை அவரிடம் செய்கிறோம். ஒவ்வொரு ஞாயிறன்றும், ஒவ்வொரு நாளும் நாங்கள் பாவ விமோசன ஸ்தலத்தின் (Purgatory) வழியாக செல்கிறோம். அதாவது, அவருடைய பரிசுத்த ஆவியினால், எங்கள் ஆத்துமாக்களிலிருந்து எங்கள் பாவங்கள் நீங்க சுத்திகரித்துக்கொண்டு (Purge), எங்களுக்குத் தெரிந்த வரையில் தேவ பக்தியுள்ளவர்களாக இக்காலத்தில் வாழ முயன்று, எந்த நேரத்திலும் அவருடைய பிரசன்னமாகுதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் அதை எதிர்பார்க்கிறோம். 4இன்று நமக்கு நீண்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது. இன்று காலை நமக்கு ஞாயிறு பள்ளி ஆராதனை, இன்றிரவு மிகவும் விசேஷித்த நிகழ்ச்சி ஒன்றுள்ளது. எனது அருமை நண்பர் சகோ. ஜோசப் போஸ் (Bro. Joseph Boze) நமக்கு அந்நியர் அல்ல, ஆனால் அவர் முதன் முறையாக நமது சபைக்கு வருகிறாரென்று எண்ணுகிறேன்... நான் பிரயாணம் செய்துள்ள முழு உலகிலுமே, நான் ''மாதிரி சபைகள்“ என்றழைக்கும் இரு சபைகள் எனக்குள்ளன. அவைகளில் ஒன்று இல்லினாயிலுள்ள சிக்காகோவில் இருக்கும் சகோ. ஜோசப் போஸ்ஸின் பிலதெல்பியன் சபையாகும். மற்றது லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டில் இருக்கும் சகோ. ஜாக் மூர் அவர்களின் சபை. நான் அடிக்கடி இந்த சபைகளுக்கு சென்றிருப்பதால், என் மிஷனரி பயணத்திலிருந்து வீடு திரும்பின போது ஒருவர், ”சகோ. பிரன்ஹாமுடன் தொடர்பு கொள்ள ஜெபர்ஸன் வில்லுக்கு தொலைபேசியில் கூப்பிட வேண்டாம், சிக்காகோவில் கூப்பிடுங்கள். அவர் அங்கில்லையென்றால் ஷ்ரீவ் போர்டில் கூப்பிடுங்கள்'' என்றார். நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. 5ஜோசப் சிக்காகோவை விட்டு சென்று விட்டார். அவர் சிக்காகோவை விட்டுச் செல்லப் போகிறார் என்பது முதலில் எங்களுக்கு மிகவும் வேதனையாயிருந்தது. ஆனால் ஜெபம் செய்த பிறகு அது தேவன் அவருக்கு கொடுத்த அழைப்பு என்று அறிந்துகொண்டோம். இந்த என் நண்பர் ஆப்பிரிக்காவிலுள்ள டாங் கனிகா, கென்யா, உகண்டா பகுதிகளில் மகத்தான ஊழியத்தைச் செய்து சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டங்களில் எங்களால் இயன்றவரை எல்லா வகையிலும் அவரைத் தாங்க வேண்டுமெனும் உணர்ச்சி எங்களுக்குள்ளது. தேவனுக்குச் சித்தமானால், வரப்போகும் ஜனவரி மாதத்தில், ஆப்பிரிக்கா முழுவதிலுமுள்ள அவருடைய பள்ளிகளில் அவருடன் கூட இருக்க நான் முடிவு செய்திருக்கிறேன். பிறகு அங்கிருந்து நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வோம். இன்றிரவு அவர் சபைக்கு ஆற்றும் சொற்பொழிவில், இதைக் குறித்து உங்களிடம் அதிகமாக கூறுவார். இன்று பிற்பகல் எட்டு மணிக்கு, முன் நிகழ்ச்சிகள் முடிந்தவுடனே அவர் பேசுவார் என்று நினைக்கிறேன். அவரிடம் ஒரு திரைப்படம் உள்ளது. அதை காண நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அது ஆப்பிரிக்காவிலுள்ள அவருடைய பள்ளிகளைக் குறித்ததாகும் - சில ஆண்டுகளுக்குள் கர்த்தர் அவருக்கு என்ன செய்துள்ளார் என்பதைக் குறித்து. அந்த படத்தை நான் கண்ட போது, அது எனக்கு அதிக உற்சாகமாயிருந்தது. ஏனெனில் தேவனுடைய சித்தத்தை அறிந்து அவர் வைக்கும் ஸ்தானத்தில் செயல்படும் ஒரு மனிதனுக்கு தேவன் என்ன செய்ய முடியும் என்பதை அது காண்பிக்கிறது. அதை கண்டு கொள்ள அநேக ஆண்டுகளாக அவர் காத்திருந்து, தேவன் காட்டின வழியில் அவர் நடந்து கொண்டிருக்கிறார். உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வாருங்கள். அதன் முதற் பகுதி மிகவும் சிறியது. 6உங்களில் அநேகருக்கு, ஜோசப் நகைச்சுவை கொண்டவர் என்பது தெரியும். அவருடைய திரைப்படத்தை நான் காணுவேன் என்று அவர் நினைத்தார். எனவே ஓரிரவு அவர் வெளியே சென்று ஒரு சிங்கத்தை படமெடுத்தார். ஆப்பிரிக்காவில் சிங்கங்கள் நிறைய உள்ளன. எனவே ஜோசப் சென்று ஒரு சிங்கத்தை படமெடுத்தார். அது மிகவும் அழகாயுள்ளது, தாய்சிங்கம் இரையைக் கொன்ற பின்பு, தாயும் குட்டியும் இரையைத் தின்றன. தாய்சிங்கம் இரையின் தோலை உரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது சிங்கக் குட்டி அதன் பின்னால் சென்று, அதை மறுபடியும் கொல்வது போல் பாவனை செய்கிறது சிறுவர்கள் அதைக் கண்டு ரசிப்பார்கள் என்பது உறுதி. திரைப் படத்தின் முதல் பகுதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு இது இடம் பெறுகின்றது. நேரத்தோடு வாருங்கள். 7இதை நான் கூறும்படியாக கேட்டுக் கொள்ளப்படவில்லை. இதை நான் கூறவும் விரும்பவில்லை. ஜோசப்புக்கு இதைக் குறித்து ஒன்றும் தெரியாது. ஆனால் இன்றிரவு சகோ. ஜோசப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அவருடைய வெளி நாட்டு ஊழியத்திற்கென ஒரு காணிக்கையை அளிக்கலாமென்று நினைக்கிறேன். கர்த்தராகிய இயேசு வரப்போகிறாரென்று நாம் விசுவாசிக்கிறோம். வெளிநாட்டு ஊழியத்திற்கெனவோ, அல்லது சுவிசேஷ ஊழியர்களுக்காக சிறிது பணம் சேமித்து வைத்திருந்தால், உங்கள் காசோலையை இன்றிரவு ஜோசப் போஸ் என்னும் பெயரில் எழுதித்தாருங்கள் (சகோ. பிரன்ஹாம் B-0-z-e என்று அவருடைய பெயரை எழுத்துக் கூட்டுகிறார் - தமிழாக்கியோன்). அது சரிதானே? ஜோசப்போஸ். அது... சகோ. ஜோசப் எனது நெருங்கிய நண்பர். அவர், அவருடைய அறிவுக்கு எட்டின வரை தேவனுடைய ராஜ்யத்துக்காக அதை செலவிடுவார். 8எனவே, நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்பாக அவரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன், அவர் ஒரு சில வார்த்தைகள் பேசட்டும். காலை ஆராதனையை அவர் எடுத்துக் கொள்ளும்படி முயன்று பார்த்தேன், அவர் மறுத்து விட்டார். எனவே இன்றிரவு எட்டு மணிக்கு அவர் பேசுவார், அல்லது அவர் விரும்பும் எந்த நேரத்திலாகிலும், திரைப்படம் காண்பதற்காக அதற்கான கருவி இங்கு பொருத்தப்படும். திரை இங்கு வைக்கப்படும். இப்பொழுது சபைக்கு இதை கூறி, என் அருமை நண்பர் சகோ. ஜோசப் போஸ்ஸை சபைக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். சகோ. போஸ் (சகோ. போஸ் எட்டு நிமிடங்கள் பேசுகிறார் - ஆசி). சகோ. ஜோசப், நன்றி. அது மிகவும் அருமையானது. இது ஸ்வீடனும் ஐயர்லாந்தும் ஒன்றாக இணைதல். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் புகழுரைக்காக நன்றி, சகோ. ஜோசப் அவரைக் குறித்து நானும் அதையே கூறமுடியும். ஆப்பிரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் அவருடைய மகத்தான ஊழியத்திற்காக நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அதைக் குறித்து இன்னும் அதிகமாக அவர் இன்றிரவு நம்மிடம் கூறுவார். 9பில்லி வெளியே சென்று, சகோ. நெவிலோ அல்லது வேறு யாரோ... பின்பாகத்தில் ஒலி சரியாக இல்லை. அல்லது பின்னாலிருப்பவர்களே, நான் பேசுவது நன்றாகக் கேட்கிறதா? இல்லை, அவர்களுக்கு நன்றாகக் கேட்கவில்லை. ஒலிபெருக்கும் கருவியை சரிபடுத்துவீர்களா? அதை அவர் செய்வதற்காக நாம் காத்திருக்கும் இந்நேரத்தில்; என் மருமகள் (niece) டான்னாவும் (Donna) அவள் கணவர் டெட்டியும் (Teddy) தங்கள் சிறு பையனை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்ய விரும்புவதாக அறிகிறேன். டான்னா, சிறுவனை இப்பொழுது கொண்டு வருவாயானால்... பியானோ வாசிக்கும் சகோதரி எங்கே என்று பார்க்கலாம். அவர்கள் இங்கிருக்கிறார்களா? 10இதுவா? சரி, ஐயா. அது நல்லது. சரி... நான் தவறான இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் தான் தவறான இடத்தில் நின்று கொண்டிருந்தேன். (சகோ. பிரன்ஹாம் ஒலி பெருக்கிக் கருவியை சரி படுத்துபவருடன் பேசுகின்றார் - தமிழாக்கியோன்) சிறுவர்களை பிரதிஷ்டை செய்யும்போது நாம் வழக்கமாக பாடும் பாடல் ஒன்றுண்டு. அது, “கொண்டு வாருங்கள், சிறுவர்களை இயேசுவினிடம் கொண்டு வாருங்கள்” என்னும் பாடலாகும். அநேக சபைகள் சிறுவர்கள் மேல் தண்ணீர் தெளிக்கின்றன. அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினால் பரவாயில்லை. வேறு சிலர் அம்முறையைக் கையாண்டு, அதை ஞானஸ்நானம் என்றழைக்கின்றனர். அவர்கள் அதை ஞானஸ்நானம் என்றழைக்க விரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாமோ வேதம் கூறியுள்ள விதமாகவே அதை கைக்கொள்ள விரும்புகிறோம். வேதத்துடன் நிலைத்திருக்க விரும்புகிறோம். வேதத்தில், புதிய ஏற்பாட்டில், அவர்கள் சிறு பிள்ளைகளை இயேசுவினிடம் கொண்டு வந்தபோது, அவர்களை அவர் ஆசீர்வதித்து, ''சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத். 19: 14; மாற் 10:14) என்றார். நாங்கள் அதைத்தான் பின்பற்றுகிறோம். போதகரும் நானும் இங்கு நின்று கொண்டு குழந்தையை கையிலேந்தி, பிரதிஷ்டை ஜெபத்தை கர்த்தரிடம் ஏறெடுக்கிறோம். பின்பு அவர்கள்... 11ஒரு குழந்தைக்கு, அது பிறக்கும்போது உள்ள பாவத்தை தவிர்த்து, வேறு பாவமில்லையென்பதே எங்கள் கருத்து. நாம் அனைவருமே பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகில் வந்தோம். இயேசு கல்வாரியில் மரித்தபோது, அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்தார். ஒரு குழந்தை பிறக்கலாம், அல்லது பிறக்கும் முன்பே மரித்து போகலாம். அல்லது கணக்கு கொடுக்கும் வயது வருவதற்கு முன்பே மரித்தும் போகலாம். அப்படியானால் அதற்கு பாவமே கிடையாது. இயேசு உலகத்தின் பாவங்களைப் போக்கினார். ஆனால் அது போதிய வயதை அடைந்து பாவம் செய்யும்போது, அது பாவத்தை அறிக்கையிட்டு, அதன் பின்பு பாவமன்னிப்புகென்று ஞானஸ்நானம் பெறவேண்டும். பார்த்தீர்களா? ஆனால் இப்பொழுதோ அது மிகவும் வயது குறைந்ததாயுள்ளது. 12இந்த அருமையான, பழைய பாடலை நாம் எல்லோரும் பாடுவோம்: என்னால்...? முடியுமா இல்லையாவென்று தெரியவில்லை. உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் பாவ இடங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் சிறு பிள்ளைகளை இயேசுவினிடம் கொண்டு வாருங்கள். அவனுக்கு என்ன பெயர்? டெட்டி ஜூனியர். சரி ஐயா. இந்த இளம் தம்பதிகளை இன்று காலை இங்கு இந்த அருமையான சிறு டெட்டியுடன் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தேவன் அவனை அபரிமிதமாய் ஆசீர்வதித்து, வரப்போகும் உலகத்தில் அவனுக்கு நித்திய ஜீவனையும், இங்கு நீடிய ஆயுளையும் அருளுமாறு ஜெபிக்கிறோம். அவனை ஒரு நிமிடம் நான் தூக்கலாமா? இவன் தான் சிறுவன் டெட்டி ஆர்னால்ட். உங்கள் எல்லோருக்கும் இவன் தந்தை டெட்டியைத் தெரியும். அவர் என்... சபையிலுள்ள இந்த சகோதரன் என் சகோதரனின் மகள் டான்னாவை மணந்தார். அவர்களுக்கு இந்த சிறுவன் பிறந்தான், புதிதாக வந்தவன். இது உங்களுடைய இரண்டாம் குழந்தை. மற்றவள் சிறு பெண், இல்லையா? இவன் பொலிவுடன் காணப்படுகின்றான். சிறுவர்களை கையிலேந்தும் போது, அவர்கள் கழுத்தை உடைத்துவிடுவேனோ என்னும் அச்சம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அவர்கள் மிருதுவானவர்கள், உடைத்து விடுவேனோ என்றும் அச்சம். ஒரு தாய் தன் குழந்தையை இவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் கொண்டு வருவதை எண்ணிப் பாருங்கள். அவரே இன்று காலை நம்மைப் போல் இங்கு நின்று கொண்டிருப்பாரானால், இந்த தாய் அவரிடம் விரைந்தோடி. அவருடைய கரங்களை இந்த குழந்தையின் மேல் வைத்து ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொண்டிருப்பாள். அப்பொழுது தந்தையின் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளியிருக்கும். அவர்களுடைய இணைப்பின் விளைவாக தேவன் இவனை அருளினார் என்று நாமறிவோம். இப்பொழுது அவர்கள், தேவனுக்கு அவர்களுடைய பாராட்டுதலைத் தெரிவிக்கும் வகையில், இந்த குழந்தையை தேவனிடம் திரும்பக் கொடுக்க விரும்புகின்றனர். இப்பொழுது நாம் தலை வணங்குவோம். 13எங்கள் பரலோகப் பிதாவே, உமது உதாரணத்தை நாங்கள் பின்பற்ற முயல்கிறோம். பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளை உம்மிடம் கொண்டு வந்தபோது. நீர் உமது கரங்களை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்தீர். இப்பொழுது பரலோகப் பிதாவே, இந்த இளம் தம்பதிகள் டெட்டி ஆர்னால்ட் ஜூனியர் என்னும் இச்சிறுவனை பெற்றுக் கொண்டு, தங்கள் குடும்பத்தில் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். எனவே பரலோகப்பிதாவே, உமது ஆசீர்வாதங்கள் இந்த பிள்ளையின் மேல் தங்கும்படி வேண்டிக் கொள்கிறோம். உமது ஞாபகார்த்தமாகவும், நீர் எங்களுக்கு அளித்துள்ள வாக்கின்படியும் எங்கள் கரங்களை அதன் மேல் வைக்கிறோம். உமது மகத்தான வார்த்தையின் ஞாபகார்த்தமாக, நாங்கள் எங்கள் கைகளை ஜனங்களின் மேல் வைக்க வேண்டுமென்று நீர் கூறியுள்ளீர். சிறு டெட்டியை நீர் ஆசீர்வதியும். தேவனே, அவனுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல சுகத்தையும் தரவேண்டுமென்று ஜெபிக்கிறோம். கூடுமானால் கர்த்தருடைய வருகையைக் காண அவன் உயிர்வாழட்டும். அவனுடைய தந்தைக்காகவும் தாய்க்காகவும் இப்பொழுது ஜெபிக்கிறோம். இக்குழந்தையை வளர்ப்பதன் மூலம் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. நாளை என்று ஒன்று இருக்குமானால், அவனை நீர் சுவிசேஷத்திற்கு போதகராக்கி, மானிடருக்கு நீர் வாக்களித்துள்ளவைகளை - அதாவது ஜீவனையும், பரிபூரண ஜீவனையும் - அவனுக்கு அருளுவீராக. இப்பொழுது சிறு டெட்டி ஆர்னால்டை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். டான்னா, டெட்டி, தேவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை அருளி, அநேக ஆசீர்வாதங்களினால் உங்களை ஆசீர்வதிப்பாராக; சிறு டெட்டியையும். ஏனெனில் அவர் உங்களை நேசிக்கிறார். 14ஓ, அவர்கள் மிக அழகானவர்கள்... இந்த சிறு பிள்ளைகள். எனக்கு எல்லோரையும் பிரியம். ஆனால் நான் நினைக்கிறேன். சிறு பிள்ளைகளும் வயோதிபர்களும்; உங்களுக்கு வயதாகும் போது. வயோதிப ஆண்களும் வயோதிப பெண்களும், தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் பயணம் செய்து இந்நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். காணப் பரிதாபம் தோன்றுகிறது. அவர்களை நாம் தள்ளிவிடக் கூடாது. அவர்கள் தெருக்களைக் கடக்கும்போது, நின்று உதவி செய்யுங்கள். அது உங்கள் தந்தையாகவோ தாயாகவோ இருக்குமானால்? பாருங்கள்? அவர்கள் வேறு யாருடைய தந்தையோ தாயோ. எனவே அவர்களை மதியுங்கள். அவர்கள் ஒருக்கால் மெள்ள, நீண்ட நேரம் பேசலாம். நீங்கள் கேட்க விரும்பாதவைகளை அவர்கள் பேசலாம், ஆனால் நீங்களும் ஒரு நாள் முதிய பருவத்தை அடையக்கூடும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எனவே அவர்களை எப்பொழுதுமே மதியுங்கள். 15இந்த சிறுவர்களை யார் கொடுமையாக நடத்த முடியும்? நீங்கள் அப்படி ஒருக்காலும் செய்யக்கூடாது. இயேசு, “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்'' என்றார். (மத் 18:10) அவர்களுக்கு ஒரு தேவதூதன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பிறந்த முதற்கு உங்கள் வாழ்க்கை பூராவும் அவன் உங்களுடன் தங்கியிருக்கிறான். நீங்கள் இரட்சிக்கப்படும் போது, அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளது. அது உங்களை வழி நடத்தி, நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காண்பிக்கிறது. 16எனக்கு தெரிந்தவர்களைக் காண நான் கூட்டத்தில் நோக்கிக் கொண்டிருக்கிறேன். நான் தவறாகக் கூறவில்லையென்றால், சிக்காகோவிலிருந்து வந்துள்ள ஒரு சகோதரியைக் காண்கிறேன். சிக்காகோவின் பிரதிநிதித்துவம் உள்ளது, வீட்டிலுள்ளது போன்ற உணர்ச்சியைத் தருகின்றது. சகோதரி பெக்கின்பாஃக், இன்னும் மற்றவர்கள் அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு வந்துள்னர். இன்று காலை சகோ. ககோதரி காக்ஸை காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. பிறகு சார்லி, நெல்லி; அவர்களை எங்களுக்குத் தெரியும். சகோதரி காக்ஸ், ரானி இங்கு எங்கோ இருக்கிறாரென்று நினைக்கிறேன். எங்கள் போதகர் சகோதரரில் ஒருவரான சகோ. வில்லர்ட்க்ரேஸ் இருக்கிறார். இன்னும் அநேகம் பேர். அவர்களை கண்டு பிடித்து அவர்களையெல்லாம் அழைக்க என்னால் முடியவில்லை. 17பின்னால் சகோ. ஈவான்ஸையும் சகோதரி ஈவான்ஸையும் காண்பதில் மகிழ்ச்சி. ஒருவகை விஷப் பாம்பினால் (rattlesnake) ஒருவர் கடிக்கப்பட்டார் என்று நான் உங்களிடம் முன்பு கூறினவர் இவரே; கர்த்தர்... சகோ. ஈவான்ஸ், மற்றவர்கள் உங்களை காணத்தக்கதாக, உங்கள் கையையுயர்த்துவீர்களா... நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்த நிலப்பாம்பு அவரைக் காலில் கடித்தது. நான் கைகளை அவர் மேல் வைத்து ஜெபித்தேன், அது ரணமாகவும் கூட இல்லை. அதன் பிறகு அது அவரை ஒன்றுமே செய்யவில்லை. ''அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; தேள்களின் மேலும் சர்ப்பங்களின் மேலும் நடப்பார்கள்; அது அவர்களை சேதப்படுத்தாது... என் நாமத்தின் மேல் விசுவாசமாயிருப்பவர்களை'' என்று வேதம் கூறியுள்ளது - என்ன அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளதென்றும், அவர்கள் என்ன செய்வார்களென்றும், நீங்கள் மாத்திரம் பயப்படாமலிருந்தால் 18ஒருவர் தன் கையொப்பமிட்ட காசோலையை உங்களுக்குத் தருகிறாரென்று வைத்துக் கொள்வோம் அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் ஜேபியில் போட்டுக் கொண்டிருந்தால், அதனால் ஒரு பயனும் இல்லை, அதை நீங்கள் வங்கியில் கொடுத்து பணம் பெற வேண்டும். அது போன்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் இயேசு என்னும் நாமத்தை கையொப்பமாகக் கொண்டுள்ளது. அதற்கு பரலோக வங்கி பொறுப்பேற்றுள்ளது, அதற்கான தொகை கல்வாரியில் செலுத்தப்பட்டது. அங்கு நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமானோம். எனவே தேவன் வாக்களித்துள்ள எந்த ஒரு வெகுமதியையும் காசாக்க பயப்படாதீர்கள். இதை மாத்திரம் ஞாபகம் கொள்ளுங்கள், அவர் அதை வாக்களித்தார், அது உங்களுடையது. அவர் அக்கினி ஜுவாலைகளை அவிப்பதையும், இரத்தத்தை நிறுத்துவதையும், பிசாசின் கொடுமைகளை போக்குவதையும், சத்துருக்களைத் துரத்துவதையும், புற்று நோயைச் சுகப்படுத்துவதையும் அநேக மணி நேரத்துக்கு முன்பு மரித்துப் போனவர்களை மருத்துவரின் முன்னிலையில் உயிரோடெழுப்புவதையும் நான் கண்டிருக்கிறேன். என்னுடைய சிறிய பலவீனமான ஊழியத்திலேயே அநேக முறை இவைகளைக் கண்டிருக்கிறேன். காட்டு மிருகங்கள் அசையக் கூடாதபடிக்கு சாதுவாக்கப்பட்டதையும், இது போன்ற அநேக காரியங்களைக் கண்டிருக்கிறேன். எனவே அவர். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவர்... அவர் எப்பொழுதாவது தேவனாயிருந்திருந்தால், இப்பொழுதும் தேவனாயிருக்கிறார். அவர் ஒரு போதும்... அவர் தேவனாயிராவிட்டால், அவர் எப்பொழுதுமே தேவனாயிருந்ததில்லை. ஏனெனில் அவர் தேவனாயிருக்க, அவர் முடிவற்றவராயிருக்க வேண்டும், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும், அவர் சர்வவல்லமையும் பொருந்தினவராயும், எங்கும் பிரசன்னராயும் இருக்க வேண்டும். ஓ, அவர் தேவனாயிருக்கிறார் பரிபூரணத்தின் பரிபூரணமே தேவன். 19சில நேரங்களில் இந்த ஞாயிறு பள்ளி பாடங்களைக் கற்பித்து முடிக்கும் போது, நான்கு, மணி ஆகிவிடுகின்றது. சில ஞாயிறுகளுக்கு முன்பு நான் ஆறுமணி நேரம் இங்கிருந்தேன். உங்களை நான் பயமுறுத்தவில்லையென்று எண்ணுகிறேன். இன்று காலை நான் அவ்வளவு நேரம் எடுப்பேன் என்று கூறவில்லை. ஐந்தரை மணிநேரம் மாத்திரம்தான், இல்லை விளையாட்டுக்கு சொன்னேன். நான் சிறிது காலம் உங்களுடன் இருக்கமாட்டேன். நாங்கள் விர்ஜினியாவுக்கும், கரோலினா வரைக்கும் வடரோலினா தென்கரோலினாவுக்கும் - பிறகு மேற்கு கடற்கரைக்கும், அதற்கப்பாலும், பிறகு கனடாவுக்கும் அலாஸ்காவுக்கும் சென்று திரும்பி வருவோம். பின்பு கர்த்தருக்கு சித்தமானால், ஆப்பிரிக்காவுக்குச் சென்று ஜோசப்பை சந்தித்து, தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வோம். 20அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் எங்களுக்கு ஒரு மகத்தான கூட்டம் இருந்தது. அது சில மணி நேரத்துக்குள், ஆப்பிரிக்காவின் போக்கு முழுவதையுமே மாற்றி அமைத்துவிட்டது. அப்பொழுது தேவன் செய்த அற்புதங்கள் செய்தித்தாள்களின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டன. முதலாம், இரண்டாம், மூன்றாம் பக்கங்கள் முழுவதுமே கூட்டங்கள் பற்றிய கட்டுரைகளை மாத்திரம் கொண்டதாயிருந்தன. நான் முதலில் அங்கு சென்றபோது, யாருமே ஒத்துழைக்கவில்லை. கூட்டங்களுக்கு செல்லும் ஒருவருக்கு அவர்கள் பெட்ரோல் கூட விற்க மறுத்தனர் இவரைப் போன்ற மூடபக்தி வைராக்கியம் கொண்டவரைப் பார்த்ததுண்டா?'' என்றனர். ஆனால் அடுத்த நாள் அவருக்கு பெட்ரோலை இலவசமாகக் கொடுக்க முன் வந்தனர். பாருங்கள்? அந்த வித்தியாசத்தை பார்த்தீர்களா? நான்... ஏதோ ஒன்று நடந்தது. அவர் ஒரு மிருகக் குட்டியை (cub) கொஞ்சிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒருவர் “எங்கு போகின்றீர்கள்?'' என்று கேட்டார். “நான் ஜோஹன்னஸ் பர்க் செல்கிறேன்” என்றார். அவர், “ஓ, நீங்கள் வியாபாரியா?” “இல்லை, நான் சகோ. பிரன்ஹாமை காண கூட்டத்திற்கு செல்கிறேன்'' ''நீங்கள் அதைக் காட்டிலும் புத்திசாலியைப் போல் அல்லவா காண்கிறீர்கள்?'' அவர், “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன். நான் கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்” என்றார். ''அப்படியானால் வேறெங்காவது சென்று பெட்ரோல் வாங்கிக் கொள்ளுங்கள்.'' எனவே அடுத்த நாள் திரும்பி வரும்போது, அதற்கும் டிரான்ஸ்வாலுக்கும் இடையே, பெட்ரோல் நிறைக்கும் இடம் அது ஒன்றுதான். அவர் அதைக் கடந்து பெட்ரோல் நிறைக்கும் அடுத்த இடத்துக்கு செல்ல முயன்ற போது இவர் ஓடிப்போய் அவரைப் பிடித்து, ''இங்கு வாருங்கள், இங்கு வாருங்கள்'' என்றழைத்தார். எல்லா செய்தித்தாள்களும், முன் பக்கத்திலும் இரண்டாம் பக்கத்திலும், நமது கர்த்தர் செய்தவைகளை நிறைய வெளியிட்டிருந்தன. எனவே நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 21ஒரு சிறு கூட்டத்திற்காக நாங்கள் கெள பாலஸுக்கு (Cow Palace) செல்கிறோம். உங்கள் நண்பர்கள் யாராகிலும் அங்குண்டா? அங்கு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை உள்ளது. மேற்குக் கடற்கரையிலுள்ள செளத்கேட் (Southgate) என்னுமிடத்தில் மேற்கத்திய மாடுகளின் கண்காட்சி நடைபெறுகிறது. நான் வெதர்பி தொழிற்சாலை வழியாகச் செல்கின்றேன். என்னைப் போன்று யாராகிலும் உங்களுக்கு துப்பாக்கிகளின் மேல் பிரியமிருந்தால், நீங்கள் அதற்கருகில் இருக்க நேரிட்டால், உங்களுக்கு விருப்பமானால் என்னுடன் கூட அந்த தொழிற் சாலைக்கு வாருங்கள். பகல் நேரத்தில் அவர்கள் பல இடங்களுக்கு செல்வார்கள் நீங்கள் காடலினா தீவுக்குச் செல்லலாம், அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும். ஆண்களும் பெண்களும் உங்கள் பிள்ளைகளுடன் டிஸ்னிலான்டுக்கு (Disney land) செல்லலாம். அவரும் நமது குழுவில் ஒரு அங்கத்தினராக நம்முடன் வருகிறார். எனவே நீங்களும் வாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல தருணம் இருக்குமென்று அறிவேன். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் அவிசுவாசிகளின் கண்களைத் திறந்து அவர்களை கிறிஸ்துவில் இரட்சிக்கும்படி ஜெபியுங்கள். 22நாம் இப்பொழுது வேதத்திலிருந்து சில வார்த்தைகளை வாசிக்கப் போகிறோம். ஏனெனில் அப்படி செய்வது எனக்குப் பிரியம். சில வேத வாக்கியங்களையும் இன்று காலை சிறிது நேரம் கற்பிப்பதற்கென சில குறிப்புகளையும் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். இன்றைய இரவு ஆராதனையை நினைவு கூருகிறேன். இந்த வாரம் தனியார் பேட்டிகளில் என்ன நடந்ததென்று உங்களிடம் கூற எனக்கு விருப்பம். ஆனால் எனக்கு நேரமில்லை. அந்த பேட்டிகளுக்காக காத்திருக்கும் பட்டினத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள சிலர் இன்று காலை இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். இந்த வாரம் எப்படியாவது விரைவில் முடிக்க முயல்வோம். நாங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, அதற்காக காத்திருக்கும் அனைவருக்கும். நாம் முடித்துவிடலாம். 23இப்பொழுது நாம் சுவிசேஷங்களின் பாகத்திற்கு வேதாகமத்தை திருப்புவோம். மாற்கு 16ம் அதிகாரம். இன்றைய என்னுடைய பொருள் முடிவுகால சுவிசேஷகம்'' என்பதாம். நாம் மாற்கு 16ம் அதிகாரத்தில் 14ம் வசனம் தொடங்கி வாசிப்போம்: அதன் பின்பு பதினொருவரும் போஜன பந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: (“விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்று ஆங்கில வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது) என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால், நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். மாற் 16:14 - 20 24இதன் பேரில் எவ்வளவோ கூறமுடியும். இதுவே கர்த்தர் தமது சபைக்கு கொடுத்த கடைசி கட்டளை. நான் இங்கு கீழே பார்க்க நேர்ந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்... சகோ. வெஸ்ட், சிறிது நேரத்துக்கு முன்பு உங்கள் பெயரை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன் - ஜார்ஜியாவிலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ளவர். உங்கள் பெயர் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அங்கு அமர்ந்திருக்கும் மற்றொரு சகோதரர் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வரவில்லை. அப்படிப்பட்ட அநேகர் இங்குள்ளனர் உங்களை வேண்டுமென்று அசட்டை செய்வதாக எண்ண வேண்டாம். உங்கள் பெயர் உடனடியாக ஞாபகத்துக்கு வருவதில்லை . 25முடிவு கால சுவிசேஷத்தைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். செய்தித்தாளை படிக்க அறியும் எவரும்... வானம் கறுத்து அந்தகாரப்படுகின்றது, மேகங்கள் தோன்றுகின்றன என்பதை நாம் காணும்போது, மழை பெய்யப் போகின்றது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். அதை நாம் காற்றில் உணருகிறோம். தூரத்தில் மின்னல் கொடிபடர்ந்து, காற்று பலமாக அடிக்கும் போது, புயல் வரப்போகிறதென்றும், விரைவில் மழை பெய்யுமென்றும் அறிகிறோம். அது போன்று, செய்தித்தாளைப் படிக்க இயலும் எவரும், தேசங்களின் நிலையைக் கண்டு, ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை அறிந்து கொள்வர். ஒருவர் தோளில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, யுத்தத்துக்காக எல்லா விதமான போராயுதங்களையும் வைத்துக் கொண்டு, எவ்வித உடன்பாடுமின்றி ஒருவரோடொருவர் விவாதம் செய்து கொண்டு, மாநாடுகளில் காலணிகளால் உதைத்தும், மேசையைக் கையால் பலமாக குத்துவதையும் காணும் போது, ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். அது ஜனங்களுக்கு அத்தகைய உணர்ச்சியை அளிக்கிறது. உலகம் என்று நாம் அழைக்கும் அந்த வெளிப்புற உலகம், அழிவு வரப்போகிறதென்றும், இந்த அணுசக்தி காலத்தில் அணு ஆயுதங்கள் வெடிக்கலாம் என்னும் உணர்வைப் பெற்றுள்ளது. ஆனால் கிறிஸ்தவனோ அது கர்த்தருடைய வருகையின் அடையாளம் என்பதை அறிந்திருக்கிறான். பாருங்கள்? ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் மூலம் நீங்கள் எதை காண்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஏனெனில் அந்த நேரத்தில் என்ன நேரிடுமென்று நமது கர்த்தர் நமக்கு திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். அந்த வேளையும் நாழிகையும் நாம் அறியாமல் போனாலும், ஏதோ ஒன்றை இப்பொழுது நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். 26சில நாட்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் நான் கண்ட ஒரு ஆட்டுக்குட்டியைக் குறித்து இங்கு கூறினேன். அது பட்டியிலிருந்து வெளியே விடப்பட்டு அமைதியாக புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று அதற்கு பயமுண்டானது. இந்த குட்டிக்கு என்ன நேர்ந்ததென்று நான் வியந்தேன். ஒரு செம்மறியாடு வழி தவறிவிட்டால் தானாகவே தன் இடத்திற்கு மீண்டும் வர அதற்கு தெரியாது. அது முழுவதுமாக வழி தவறிப் போய் விடும். ஆகையால் தான் கர்த்தர் நம்மை செம்மறியாடுகளுக்கு ஒப்பிடுகிறார், நாம் வழிதப்பினால், நம்மை மீண்டும் கொண்டு வர ஒருவருக்கு மாத்திரமே முடியும், அவர்தான் மேய்ப்பர். இந்த ஆட்டுக் குட்டி பட்டியிலிருந்து வெகுதூரம் அலைந்து சென்று, கதறிக் கொண்டிருந்தது. அந்த புல்லின் கீழ் பதுங்கியுள்ளதை நான் கவனித்தேன், ஆனால் அது கவனிக்கவில்லை. ஒரு ஆட்டுக் குட்டிகோ அல்லது செம்மறியாடுக்கோ, மானைப் போன்று மோப்பம் பிடித்து எதிரியை அறிந்து கொள்ளமுடியாது. ஆனால் அது மரணம் அருகிலுள்ளது என்னும் உணர்வைப் பெறும். அங்கு ஒரு சிங்கம் மெல்ல பதுங்கி வந்தது. அது ஆட்டுக் குட்டியை மோப்பம் பிடித்து, அதைக் கொன்று தின்ன அங்கு வந்தது. ஆட்டுக் குட்டிக்கு பயமெடுத்துக் கொண்டது. அதற்கு காரணம் தெரியவில்லை, ஆனால் மரணம் மிக அருகில் பதுங்கியுள்ளது என்பதால் அது பயந்தது. 27உலகமும் அதே போன்ற பயங்கொண்ட நிலையில் தற்பொழுது உள்ளதனால், அவர்கள் தெருவில் தொண்ணூறு மைல் வேகத்தில் காரோட்டி சென்று, மது கடைக்குள் நுழைந்து, இரண்டு மணி நேரம் மது அருந்தி விட்டு, வீடு செல்கின்றனர். அது பலமான தாக்குதல்... யாரிடமாவது நீங்கள் பேசினால், அவர்கள் கோபமடைகின்றனர். அன்றொரு இரவு நான் கூடாரத்தில் பேசிவிட்டு, சகோ. நெவிலுக்கு வந்திருந்த சில அழைப்புகளை நான் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதி ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். ஒவ்வொரு முறையும் நான் நர்ஸ் அல்லது டாக்டரிடம் பேசினபோது, அவர்கள், ''எனக்கு ஒன்றும் தெரியாது என்று கோபமாக பதிலளித்தனர். “என்ன நேர்ந்தது? எல்லோருமே கோபத்தை வெளிப்படுத்துகின்றனரே” என்று நினைத்தேன். மனோதத்துவ நிபுணர்கள் இப்பொழுது டாக்டர்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டியதாயுள்ளது. ஆனால் அதற்கு ஒரு வழியுண்டு. அது தான் கிறிஸ்து. 28கிறிஸ்தவன் அந்த நிலையில் இருக்கக் கூடாது, நாம் மகிழ்ச்சி கொண்டவர்களாய் கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்க வேண்டும். ஏனெனில் அது அருகாமையிலுள்ளது; கல்வாரியின் குளிர்ந்த காற்றை நம்மால் உணர முடிகின்றது. வாக்குத்தத்தம் செய்த பரலோகத்தின் தேவனை, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது புரிந்த அதே செயல்கள் கடைசி நாட்களில் திரும்பவும் வரும் என்னும் வாக்குத்தத்தத்தையும் நாம் காணும் போது, அது கண் கூடாக நிறைவேறுவதை நாம் காண்கிறோம். அது என்ன? மழை வரும்போது கிடைக்க பெறும் புத்துணர்ச்சியைப் போன்ற புத்துணர்ச்சியின் சுவாசமே. பாருங்கள்? மீட்பு சமீபமாயிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பாருங்கள்? ஏதோ ஒன்று நடக்க விருக்கிறது. உலகம் அதை காண்பதில்லை. அவர்கள், முன் காலங்களில் நடந்ததுபோல், இப்பொழுதும் அதை கேலி செய்கின்றனர். ஆனால் நாமோ அது அருகாமையில் வந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவோம். ஆகையால் தான் “முடிவு கால சுவிசேஷகம்” என்னும் பொருளை இன்று நான் தெரிந்து கொண்டேன். சிறிது காலத்திற்கு நான் இந்த கூடாரத்துக்கு வர முடியாது. நாங்கள் வெளிநாடுகளில் தேவனுடைய வார்த்தையுடன் சுவிசேஷ ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் போது, நாங்கள் எப்பொழுதுமே தேவனுடைய சித்தத்தில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். ஏனெனில் இயேசு தமது சபைக்களித்த முதலாம் கட்டளை, “நீங்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்பதாகும். அவருடைய கட்டளையும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதே. 29முதன் முறையாக அவர் யாரையாகிலும் நியமித்து வார்த்தையைப் பிரசங்கிக்க தேசம் முழுவதும் அனுப்பின போது அவர், ''வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்'' என்றார். அது மத்தேயு 10ம் அதிகாரம் (மத்10:8) - எழுபது பேரை இரண்டு இரண்டு பேராக அனுப்புதல். அதுவே அவர் தமது சபைக்குக் கொடுத்த முதலாம் கட்டளை. அவர் மகிமையில் ஏறெடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு தமது சபைக்கு அளித்த கடைசி கட்டளை, ''நீங்கள் உலகமெங்கும் போங்கள் என்பதாம். அவர் அப்பொழுதுதான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவர்கள் அநேகர் ஒருமித்து உட்கார்ந்து கொண்டிருந்தனர். உயிர்த்தெழுந்த தம்மை கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். பாருங்கள் அவர்கள் கர்த்தரைக் கண்டதாக சாட்சி பகர்ந்தனர். ஆனால் மற்றவர்களோ அதை நம்பவில்லை. அவர்களுடைய இருதயக் கடினத்தைக் குறித்து அவர்களைக் கடிந்து கொண்டார். அவர் மரித்திருக்கவில்லை, “உயிரோடிருக்கிறார்” என்பதைக் கண்ட ஜனங்களை அவர்கள் நம்பவில்லை. 30அவருடைய கிரியைகளை நீங்கள் காணும்போது, இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. நாம் ஏற்கனவே கர்த்தருடைய பிரசன்னமாகுதலைக் கண்டு அதற்கு சாட்சிகளாயிருக்கிறோம், இதை நினைவில் கொள்ளுங்கள், பிரசன்னமாகுதல் (appearing), வருகை (coming) என்பவை இரண்டு வித்தியாசமான சொற்கள். முதலில் பிரசன்னமாகி, பிறகு வருதல். இப்பொழுது பிரசன்னமாகுதல். இந்த கடைசி நாட்களில் அவர் ஏற்கனவே பிரசன்னமாகிவிட்டார். கடந்த சில வருடங்களாக நம்முடன் கூடவே இங்கு இருக்கிறார். அது அவருடைய வருகையின் அடையாளம். அவர் தமது சபையில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் பிரசன்னமாகி அது அவர் என்பதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்த ஆவி செய்வதாக நீங்கள் காண்பதை மனிதர் யாருமே செய்ய முடியாது. எனவே இது கர்த்தர் பிரசன்னமாகுதல். இப்பொழுது கவனியுங்கள், இரண்டு இடங்களிலும் “பிரசன்னமாகுதலும்” “வருகையும்''. 31அதை கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய இருதயக் கடினத்தைக் குறித்து அவர் கடிந்து கொண்டார், இன்றைக்கும் அவர் அதையே செய்வாரென்று எண்ணுகிறேன். பிறகு நாம்... அவர்கள்... அந்த ஜனங்களின் சாட்சியை அவர்கள் நம்பவில்லை. அதற்காக அவர் அவர்களை கடிந்து கொண்டார். அதன் பிறகு அவர், அவர்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்றும் கட்டளையைக் கொடுத்து, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் அவர் அவர்களுடன் இருப்பாரென்று வாக்களித்தார். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்''. 32இன்றைக்கு நாம் எழுத்து வடிவிலுள்ள வார்த்தையையும், கோட்பாடுகளையும் போன்றவைகளை உலகெங்கும் கொண்டு செல்ல முயல்கிறோம். சுவிசேஷகர்கள் எல்லாவிடங்களிலும் சென்றுள்ளனர். அங்கு நாம் செல்லும் போது என்னத்தைக் காண்கிறோம்? அவனுடைய பெயரையும் கூட படிக்கத் தெரியாத ஒரு சுதேசி தன் கையில் சுவிசேஷக் கைப்பிரதி (tract) ஒன்றை வைத்துள்ளதை, வலது கைக்கும் இடது கைக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது போன்று இதைக் குறித்தும் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இயேசு, ''நீங்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றாரே தவிர “வார்த்தையை கற்பியுங்கள்'' என்று கூறவில்லை. சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று தான் அவர் சொன்னார். சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வார்த்தையின் வல்லமையோடு வந்தது. அதை செய்யக்கூடிய ஒரே வழி, அவருடைய வார்த்தையை நிறைவேறச் செய்வதாகும். 33வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரையன்ட் என்பவர் டாரல் என்பவருடன் டார்வினின் தத்துவத்தைக் குறித்து விவாதித்ததை யாரும் புத்தகத்தில் படிக்கலாம். பாருங்கள்? டார்வீன் கூறினதையே டாரல் கூற முடிந்தது. அவ்வாறே வேதம் கூறினதையே வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரையன்ட் கூற முடிந்தது. அது தான் அந்த விவாதம். ஆனால் இந்த விஷயத்தில் தேவன் தமது ஜனங்களின் மத்தியில் வந்து, அவருடைய வார்த்தை வெளிப்பட்டுள்ளதை நிரூபிக்கிறார். அதை நீங்கள் செய்யக்கூடிய ஒரே வழி, ஒரு கைப்பிரதியின் மூலமாக அல்ல, பரிசுத்த ஆவி உங்கள் வழியாய் கிரியை செய்வதன் மூலம். உங்கள் ஜீவன் அவருடைய ஜீவனாகிவிடுகிறது. அவர் உங்களுக்குள் இருக்கிறார். 34அஞ்ஞானிகள் விக்கிரகத்தை வழிபடும் போது. அதற்கு மூன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து, அவர்களுடைய தெய்வம் அந்த விக்கிரகத்துக்குள் வந்து அதன் மூலம் அவர்களுடன் பேசுவதாக நம்புகின்றனர். ஆனால் அது தேவன் யாரென்பதற்கு முரணாயுள்ளது. தேவன் விக்கிரகங்களுடன் தொடர்பு கொள்வதில்லை. நீங்களே அவருடைய கருவி. நீங்கள் தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழும்போது, அவர் உங்களுக்குள் வந்து ஜனங்களுடன் பேசுகின்றார். அதுதான் வித்தியாசம். அவர் ஜீவனுள்ள நபருக்கு ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். உயிரற்ற விக்கிரகத்துக்கு உயிரற்ற தெய்வமாக அவர் இல்லை, அவர் ஜீவனுள்ள ஒருவனுக்கு ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். அவர் வேதத்தில் கூறியுள்ளதற்கு நீங்கள் சாட்சிகளாக விளங்குகிறீர்கள். அது இக்காலத்துக்குரியது. கவனியுங்கள், ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்று அவர் இங்கு கூறியுள்ளது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே என்று பலர் கூறுகின்றனர். 35ஆனால் இன்றைக்கோ, ஒரு நல்ல சபை அங்கத்தினன் போதகருடன் கைகுலுக்குகிறான் என்று நாம் கூறுகின்றோம். அவன் தனது பெயரை மெதோடிஸ்டு சபையிலிருந்து பாப்டிஸ்டு சபைக்கும், பாப்டிஸ்டு சபையிலிருந்து மெதோடிஸ்டு சபைக்கும் மாற்றி, ஒரு நல்ல வாழ்க்கையை நடத்துகிறான். மிஷனரிகளாகிய நாம், கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளும் இந்த அமெரிக்கர்கள் வாழும் வாழ்க்கையுடன் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத ஒரு மேலான வாழ்க்கையை அஞ்ஞானிகள் வாழுவதைக் காண்கிறோம். நல் வாழ்க்கை மாத்திரமே முக்கியம் என்றால், அந்த அஞ்ஞானிகளும் கூட, விக்கிரகத்தை வழிபட்டாலும், மற்றவர்களைப் போல் இரட்சிக்கப்பட்டுள்ளனர் என்றுஅர்த்தமாகிவிடுகிறது. அவர்களுடைய நல்நடத்தையும், கிரியைகளும் நம்முடையவைகளைக் காட்டிலும் சிறந்தவைகளாயுள்ளதால், அவர்களுக்கு முன்னால் நாம் நிற்கவும் தகுதியற்றவர்கள். அது உண்மை. ஆனால் அதுவல்ல. “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்று இயேசு கூறினார். நாம் மறுபடியும் பிறக்க வேண்டுமானால், நாம் சாகிறதற்கு நம்மை அனுமதித்து, கிறிஸ்துவின் ஆவி உள்ளே வருவதற்கு விட்டு கொடுப்பதாம். அதன் பிறகு நீங்கள் உங்களுடையவர்களல்ல; அது கிறிஸ்து உங்களில் வாசம் செய்தல், பாருங்கள், பரிசுத்தஆவி. பவுல், நான் அது தினமும் சாகிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்றான். பாருங்கள். கிறிஸ்து 36ஜான் டில்லிங்கரின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று நான் கூறுவேனானால், நான் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நாடு கடத்தப்பட்டவனாயிருப்பேன். ஏனெனில் அவனுடைய ஆவி எனக்குள் வாசம் செய்கிறது. ஒரு ஓவியனின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று நான் கூறுவேனானால், ஓவியன் தீட்டும் படங்களை நானும் தீட்டுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதுபோன்று, நான் ஒரு கிறிஸ்தவன் என்று கூறி, கிறிஸ்துவின் ஆவி எனக்குள் அல்லது உங்களுக்குள் வாசம் செய்தால் அப்பொழுது நாம் கிறிஸ்து செய்த கிரியைகளையே செய்வோம். என்னை விசுவாசிக்கிறவன் “நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு யோவான் சுவிசேஷத்தில் கூறியுள்ளார். (யோவான் 14:12) பின்பு அவர் இங்கு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்றார். (மாற்16:17) 37ஆனால் விசுவாசிக்கிறவனை இந்த அடையாளங்கள் தொடராத காலம் ஒன்று இருந்தது. அது உண்மை. ஆனால் தீர்க்கதரிசி சகரியா புத்தகத்தில் ஒரு நாள் வரப்போகின்றது அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' என்று உரைத்துள்ளான். சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைகின்றது, அது மாறுவதில்லை, அது அதே சூரியன். இப்பொழுது பரிசுத்த ஆவியானவராகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வந்தபோது, அவர் கிழக்கில், கிழக்கத்திய மக்கள் மேல் உதித்தார். அது பகற்காலம்... அது கிழக்கிலிருந்து மேற்கே பிரயாணம் செய்தது: நாகரீகமும் சூரியனுடன் பிரயாணம் செய்தது. இப்பொழுது நாம் மேற்கு கடற்கரையில் இருக்கிறோம். நாம் இன்னும் தொடர்ந்து சென்றால் கிழக்கை அடைந்து விடுவோம். எல்லாமே அவருடைய வருகையை அறிவிக்கின்றது. நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம். எல்லாம் முடிந்துவிட்டதென்று எல்லாமே காண்பிக்கின்றது. 38தீர்க்கதரிசி அவ்வாறு கூறினான். எந்த ஒரு தீர்க்கதரிசனமும், இயேசு கூறினது போல, தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யப்படக் கூடாது. அது என்ன கூறுகிறதோ அதுதான் அதன் அர்த்தம். சாயங்காலத்திலே வெளிச்ச முண்டாகும். அப்படியானால் கிழக்கத்திய மக்களின் மேல் உதித்து, தமது கிரியைகளைக் காண்பித்து தமது ஆசீர்வாதங்களை அருளின அதே குமாரன்; ஒரு இருண்ட நாள் வருமென்றும், அது பகலும் அல்லாத இரவும் அல்லாத ஒரு மந்தாரமான நாளென்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சூரியனைக் காணமுடியாது, ஆயினும் அது போதிய வெளிச்சம் தரும், இப்பொழுது வெளிப்புறத்தில் எப்படியிருக்கின்றதோ, அது போன்று, ஒருக்கால் சிறிது இருட்டாக. நாம் சபையைச் சேர்ந்து கொள்வதற்கும் நமது பெயர்களை புத்தகங்களில் எழுதுவதற்கும் நமக்கு போதுமானவை இருந்து வந்துள்ளன. ஆனால் சாயங்கால நேரத்தில் அதே மகத்தான கிறிஸ்துவின் வல்லமை, கிழக்கில் முன்பு இருந்தது போலவே, இப்பொழுது சபையின் மேல் வரும். மேற்கில் அதே விதமாக இருக்கும். அதற்காகத் தான் நான் சாயங்கால சுவிசேஷத்தை குறித்து பேச எண்ணினேன். 39ஒவ்வொரு காலமும் அதன் செய்தியையும் செய்தியாளனையும் பெற்றிருந்தது. காலங்கள் தோறும், ஒவ்வொரு காலமும் அதன் செய்தியுடன் செய்தியாளனைக் கொண்டதாயிருந்தது. ஒவ்வொரு யுகத்திலும் தேவன், தமது செய்தியை அந்தந்த காலத்திற்கு கொண்டு வருவதற்கென பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரை ஒவ்வொரு முறையும் அனுப்பினார். இதற்கு ஆதாரமாக, நாம் பின் சென்று அங்கிருந்து தொடங்கலாம். தொடக்கத்திலே தேவனே செய்தியாளராக இருந்தார். அவர் ஆதாம், ஏவாளிடம், “நீங்கள் இதை புசிக்கலாம், ஆனால் இதை செய்யக் கூடாது'' என்றார். இதுவே செய்தியாயிருந்தது. ஆனால் மனிதன் அந்நேரத்துக்கான செய்தியை நிராகரித்த போது, அது மரணத்தை விளைவித்து, மானிட வர்க்கம் முழுவதையுமே குழப்பத்தில் ஆழ்த்தியது, செய்தி அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. அது தேவன் கூறினதை முற்றிலுமாக நிராகரித்தல் இல்லை என்பதை கவனம் கொள்ளுங்கள். அது தேவன் கூறினதை எடுத்துக் கொண்டு அதற்கு மேல் வெள்ளையடிப்பதாகும், அதை சிறிதளவு தவறாக எண்ணம் கொண்டு, சிறிதளவு இதனுடன் கூட்டி, சிறிதளவு இதிலிருந்து எடுத்துப் போடுதலாகும். 40வார்த்தையே சத்தியம் என்று நான் விசுவாசிக்கும் காரணம் அதுவே. நமது கோட்பாடுகளும் நமது ஸ்தாபனங்களும் வார்த்தையுடன் முழுவதுமாக ஒத்துப்போகாமல் இருக்குமானால் அவை தவறாகும், தேவன் தமது வார்த்தைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அது தவறாக எடுத்துரைக்கப்பட அனுமதிக்காதிருப்பாரனால்; அப்படி செய்வது எல்லா மரணத்தையும், எல்லா துன்பத்தையும், குழந்தைகளின் அழுகையையும், மரண ஊர்வலத்தையும், மலை பாகத்தில் கல்லறைகளையும், கூச்சலிட்டுக் கொண்டு செல்லும் நோயாளி ஊர்திகளையும், சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்தையும் வயோதிப நிலையையும் பட்டினியும், தொல்லையும் விளைவித்திருக்குமானால் அதற்கு நாம் மறுபடியும் தவறான அர்த்தம் கூறினால், அவர் நம்மை மன்னிப்பாரா என்ன? 41எனவே, பாருங்கள், கிறிஸ்தவ மார்க்கம் முக்கியமான ஒன்று, ஒரு வார்த்தையை தவறாக உபயோகித்ததன் விளைவாக ஆறாயிரம் ஆண்டு காலமாக தொல்லை நேர்ந்திருக்குமானால், நாம் வேறு ஒரு வார்த்தையையும் முன் காலத்தில் செய்தபடி தவறாக உபயோகிக்கக் கூடாது. அது வார்த்தையுடன் அப்படியே பொருந்த வேண்டும், யாருமே அதற்கு வியாக்கியானம் உரைக்கக்கூடாது. வார்த்தை என்ன கூறுகின்றதோ அது மாத்திரமே! அநேகர் ஒன்று கூடிக்கொண்டு, இதுதான் அர்த்தம் என்பார்கள். ஆனால் வார்த்தையோ “இதுதான் இது” என்கிறது. தேவன் உலகத்தை சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த சபையாயிருக்கும்? அவர் தேசத்தைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த தேசமாயிருக்கும்? அவர் உலகத்தை வார்த்தையைக் கொண்டு - வேதத்தைக் கொண்டு - நியாயந்தீர்ப்பார். ஏனெனில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். தேவனுடைய வார்த்தை மாம்சமானவர் தான் கிறிஸ்து. அது ஒரு மனிதரின் மூலமாக பேசப்பட்டது. 42வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் அவர் ஒருவன் இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அல்லது இதனோடு ஒரு வார்த்தை கூட்டினால், “அவனுடைய பங்கு ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்றார்” (வெளி. 22 : 18). எனவே பாருங்கள், இது, “இதை நான் விசுவாசிக்கிறேன், அதைக் குறித்து எனக்குத் தெரியாது” என்பதல்ல, நீங்கள் எல்லாவற்றையும் விசுவாசிக்க வேண்டும். ஒருக்கால் அதில் உறுதியாய் நிற்க உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய வழியில் குறுக்கே நிற்காதீர்கள். என் வாழ்க்கை முடிவடையும் போது, நானும் ஏனோக்கைப் போல் மரிக்காமல், பிற்பகல் ஒன்றில் நடந்து தேவனுடன் வீடு செல்வதற்கு எனக்கு விசுவாசம் இருந்தால் நலமாயிக்கும் என்று அடிக்கடி கூறியிருக்கிறேன். அப்படி செய்ய எனக்குப் பிரியம். ஆனால் அப்படிப்பட்ட விசுவாசம் எனக்கு இல்லாமல் இருக்குமானால், அத்தகைய விசுவாசம் கொண்டுள்ளவர்களின் வழியில் நான் குறுக்கே நிற்கமாட்டேன். பாருங்கள்? 43இப்பொழுது நாம் சாயங்கால நேரத்தில் இருக்கிறோம். காலங்கள் தோறும் தோன்றின செய்தியாளர்கள்... தொடக்கத்தில் ஒரு செய்தியாளள் அனுப்பப்பட்டபோது, இவருடைய வார்த்தையை தவறாக அர்த்தம் பண்ணுதல் அல்லது ஒரு வார்த்தையையும் கூட சந்தேகித்தல் முழு இழிவையும் தேவனிடமிருந்து நித்திய பிரிவினையையும் விளைவித்தது என்று நாம் காண்கிறோம் - இந்த செய்தியாளனின் வார்த்தையை தவறாக அர்த்தம் பண்ணுதல். முதலாம் செய்தியாளர் தேவனே. மற்ற செய்தியாளர் அனைவருமே தேவன் அவர்களின் மூலமாக தேவனுடைய வார்த்தையைப் பேசின நபர்கள். ஆனால் தொடக்கத்தில் அவரும், அவர் யாரிடம் பேசினாரோ அவனையும் தவிர வேறு யாருமில்லை. ஆனால் அவர் மனிதனைப் படைத்து அவனை மீட்டுக் கொண்ட பிறகு, தேவன் மனிதனின் மூலமாகவே பேசி வருகிறார். அவர் அதற்கென்று ஒரு இயந்திரத்தை உபயோகிப்பதில்லை, ஆனால் தன்னை தேவனுக்கு முற்றிலும் ஒப்புவித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மனிதனின் மூலம் அவர் பேசுகின்றார். 44நாம் எவ்வளவாக தீர்க்கதரிசிகளை ஒன்றன் பின் ஒன்றாய் நோக்கி, சிம்சோனை அடைந்து, தற்காலம் வரைக்கும் வரமுடியும்! அது எப்பொழுதுமே தேவனுடன் தனிப்பட்ட நபர் தொடர்பு கொள்ளுதலாகும். ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு செய்தியும் அதன் செய்தியாளனும் இருந்ததாக நான் கூறினேன். சிறிது பின்னணியைப் பெற, நாம் ஏதேன் காலத்துக்கு பிறகுள்ள காலத்தை எடுத்துக் கொள்வோம். (நோவாவின் காலம்) ஏதேன் காலத்துக்குப் பிறகு வந்தது. உலகமானது... நாம்... அன்றொரு இரவு கிளார்க்ஸ்வில் கூடாரத்தில் கடைசி கால அடையாளத்தைக் குறித்து பேசினேன், பிறகு வியாழன் இரவன்று இயேசுவுடன் அடையாளங்கண்டு கொள்ளப்படுதலைக் குறித்து, இன்று காலை கடைசி கால சுவிசேஷகன், மன்னிக்கவும் முடிவு கால சுவிசேஷகத்தை குறித்து. 45வெள்ளத்தினால் அழிவு ஏற்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு இன்று நமக்குள்ள நாகரீகத்தைக் காட்டிலும் சிறந்த நாகரீகம் இருந்ததாக நாம் காண்கிறோம். அவர்கள் அணுசக்தியை தங்கள் கட்டுக்குள் கொண்டிருந்தனர் என்று நினைக்கிறேன். அதுதான் உலகத்தை தன் சுழற்பாதையிலிருந்து அசைத்து மாற்றியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். நான் பிரிட்டனிலுள்ள பனிக்கட்டி வயல்களில் நின்று கொண்டு, ஐந்நூறு அடி ஆழம் தோண்டி, அடியிலிருந்து செடிகளை எடுப்பதை கண்டிருக்கிறேன். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு இந்த செடிகள் வளர்ந்தன. உலகம் ஒரு காலத்தில் நேராக நின்றது என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம், அறிந்திருக்கிறோம். அவர்கள் பொறியியலிலும் விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கினர். அவர்கள் கூர்நுனிக் கோபுரம், சிங்க உடலும் ஸ்திரீயின் முகமும் இறக்கைகளும் கொண்ட சிலைகள் (sphinx) ஆகியவைகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாயிருந்தனர். இன்று நம்மால் அவைகளை உருவாக்க முடியவில்லை. அந்த பளுவுள்ள கற்களை உயர கொண்டு செல்வதற்கு நம்மிடம் இயந்திரங்கள் கிடையாது. அது அணு சக்தியினால் தான் இயங்கியிருக்க வேண்டும். அதற்கு பெட்ரோல் சக்தி போதாது. மின்சார சக்தி போதாது, நம்முடைய காலத்தைக் காட்டிலும் அதிக புத்தி கூர்மை கொண்ட வேறொரு காலம் அது. 46அந்த காலத்தில் தேவன் நோவா என்னும் பெயர் கொண்டவனை அழைத்தார். அவன் ஒரு சாதாரண மனிதன். விவசாயி. அவனுடைய சந்ததியில் அவன் தேவ பக்தியாயிருந்த காரணத்தால் அவன் அழைக்கப்பட்டான் ''பேழையை உண்டாக்கு“ என்னும் அந்த விஷயத்தில் தேவன் அந்த ஒரே மனிதனுடன் தொடர்பு கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் பாவம் பெருகினதை நாம் காண்கிறோம். ”தேவகுமாரர்கள் மனுஷ குமாரத்திகளைக் கண்டார்கள்“ என்று வேதம் கூறுகின்றது. அதைக் குறித்து விவாதிக்கும் போது, விழுந்து போன தேவதூதர்கள் மாம்சத்தில் தேவகுமாரர்களாக தோன்றினதாக பல எழுத்தாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் எப்படி அவ்வாறு கருத முடியுமென்று எனக்குப் புரியவில்லை. அது சாத்தானை சிருஷ்டிகனாகச் செய்துவிடும். சாத்தான் சிருஷ்டிகன் அல்ல, அவன் சிருஷ்டிப்பை கெடுப்பவன் (Perverter), பாருங்கள். பொய் என்பது உண்மையை மாற்றிக் கூறுதலாம். விபச்சாரம் என்பது சரியான செயலை தவறான விதத்தில் புரிதல். பாருங்கள். பாவம் என்பது அதேதான் சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதை அவன் கெடுக்க முடியும். எனவே தேவகுமாரர்கள் என்பவர்கள் தேவனுடைய வம்சத்தில் ஆதாமின் வழியாக வந்த சேத்தின் புத்திரர்; மனுஷ குமாரத்திகள் சாத்தானின் வழியாக வந்த காயீனின் புதல்விகள். “அவர்கள் அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு”. 47இங்கு நாம் கவனிக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்களின் புகைப்படங்களைக் காணும் போது இப்பொழுது காணப்படும் பெண்களின் அழகு, முன்பிருந்த பெண்களின் அழகை எவ்வளவோ மிஞ்சிவிட்டது, நீங்கள் ஆதியாகமம் 6ம் அதிகாரத்தைப் படிப்பீர்களானால், அதைக் குறித்த ஒரு அழகான வர்ணனையை காணலாம். அவர்கள் செளந்தரியமுள்ளவர்களாயிருந்தனர். அதற்கு காரணம், அவர்களுடைய உடைகளும், நவீன போக்குமே. அது தான் அவர்களுடைய அழகை எடுத்துக் காண்பிக்கின்றது. என்னிடம் பெர்ல் வைட் (Pearl White) என்பவளின் புகைப்படம் ஒன்றுள்ளது. அவளுடைய இரகசிய காதலன் ஸ்காட் ஜாக்சன் என்பவன், அவளுடைய மார்பில் கத்தியைப் பாய்ச்சி அவளைக் கொன்று போட்டான். அப்பொழுது இந்த மகத்தான தேசம் அதிர்ச்சியுற்று, பெர்ல் வைட்டின் பாடலைப் பாடியது. அவள் அக்காலத்திலே உலகிலேயே தலைசிறந்த அழகி என்று கருதப்பட்டாள். ஆனால் இன்று தெருவில் செல்லும் சில பெண்களுடன் அவளை ஒப்பிட்டால், அவள் ஒன்று மேயில்லை. 48அல்லது க்ளாரா போ (Clara Bowe) என்பவளின் காலத்திற்கு சென்று பாருங்கள். அவள் தான் முதன் முதலாக தன் காலுறைகளை (Stockings) முழங்காலுக்கு கீழே சுருட்டி விட்டு “சுருட்டி விடுங்கள், பெண்களே, சுருட்டி விடுங்கள்'' என்று கூறி அவதூறை உண்டாக்கினாள். நான் சிறுவனாயிருந்த போது நடந்த அந்த சம்பவம் எனக்கு ஞாபகமுள்ளது. க்ளாரா போவின் புகைப் படத்தை இன்றைய அழகிகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பார்த்தீர்களா? அது முடிவு காலத்தின் அடையாளமாயுள்ளது. “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார். அவர்கள் படிப்படியாக ஆடைகளை குறைத்துக் கொண்டே வந்தனர், அது என்ன? காயீனின் புதல்விகள். ஆகையால் தான் நாம், அதைக் குறித்த சுவிசேஷ சத்தியத்தை எடுத்துக் கூறும்போது, பைத்தியக்காரர்களாகவும் மூடபக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் கருதப்படுகிறோம். அவர்கள் தொடர்ச்சியாக கெட்ட நடத்தையில் ஈடுபட்டு, தெருக்களில் இப்பொழுது நடந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுகின்றனர். நியாயத்தீர்ப்பின் நாளிலே இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை உணராமலிருக்கின்றனர். ஒரு ஸ்திரீ பாலுணர்ச்சியை தூண்டும் அளவுக்கு தவறாக உடுத்துவாளானால்; நீங்கள் உங்கள் கணவருக்கு, அல்லது உங்கள் மனதுக்கு இனியவனான பையன் நண்பனுக்கு (boy friend) லீலிப் புஷ்பத்தைப் போல் தூய்மையாக இருக்கலாம். ஆனால் தெருவில் செல்லும் ஒரு பாவி, நீங்கள் உடுத்தியுள்ள நிலையில் உங்களைக் காணும் போது, உங்களை இச்சிப்பான். ஏனெனில் உங்களை அந்த விதத்தில் நீங்கள் காண்பித்தீர்கள். 49பெண் பிள்ளைகளுக்கு சவுக்கடி அவசியமல்ல, அதை அனுமதிக்கும் தந்தைக்கும் தாய்க்குமே அது அவசியம். இது இளைஞனின் நெறி தவறுதல் (Juvenile delinquency) அல்ல, பெற்றோரின் நெறி தவறுதல் (parent delinquency) அது அநேகமாக பிரசங்க பீட நெறி தவறுதல் (pulpit delinquency) என்று கருதுகிறேன். ஏனெனில் தேவனுடைய வார்த்தை அதற்கு கண்டனம் தெரிவிக்கும் போது, அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே கூறாமல், அவர்கள் அவ்வாறு செய்ய விட்டுவிடுகின்றனர். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” (இறந்த காலம்) என்று வேதம் கூறுகின்றது (மத் 5:28). ஒரு பாவி விபச்சாரம் செய்த குற்றத்துக்கு பதிலுரைக்க நியாயாசனத்துக்கு செல்லும் போது, “யாருடன் விபச்சாரம் செய்தாய்?” என்னும் கேள்வி கேட்கப்படும். உங்களுடன் நீங்கள் அந்த செயலைப் புரியாமல் போனாலும், நீங்கள் குற்றவாளியென்று வேதம் தீர்க்கின்றது. அப்படியானால் அதற்கு யார் பொறுப்பு? ''ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று“. அதன் வினை! 50இன்று ஜெபர்ஸன்வில்லிலுள்ள பெண்களில் 99.9 சத விகிதம் பெண்கள் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாயுள்ளனர். முழு தேசமும் அந்நிலையில் தான் உள்ளது. ஏன்? ஜனங்களிடம் அதை எடுத்துக் கூறாமல், பிரசங்க பீடத்தில் கடமை தவறுதல். வீடுகளிலும் கடமை தவறி, வாலிபப் பெண்கள் அவ்வாறு தெருக்களில் நடந்து கொள்ள அனுமதித்தல், அவர்கள் ''அதனால் பரவாயில்லை“ என்கின்றனர். இதே நிலையைத் தான் நோவா தன் காலத்தில் சந்திக்க வேண்டியவனாயிருந்தான். மனுஷ குமாரத்திகள் செளந்தரியமுள்ளவர்களாய் இருந்தனர். தேவகுமாரர்கள் அவர்களைக் கண்டனர். பாருங்கள், இச்சை உண்டாகுகின்றது. ஆனால் நோவாவோ ஓ, அதைக் குறித்து மணிக்கணக்காக பிரசங்கம் செய்யலாம். நோவா நீதிமானும் தேவ பக்தியுள்ளவனும், நேர்மையுள்ளவனுமாயிருந்தான். அவன் இதற்கு விரோதமாக கூக்குரலிட்டான். அவர்கள் அவனை பைத்தியக்காரன் என்றழைத்தனர் பரியாசக்காரர்கள். அவர்கள் அவனைப் பரியாசம் செய்ததாக வேதம் கூறுகின்றது, ஆனால் அவனோ, ''புயல் அடித்து, தண்ணீர் வானத்திலிருந்து பொழியப் போகும் நாள் வரப் போகின்றது'', என்று எச்சரித்து வந்தான். அங்கு மழை நீர் இல்லை. அவனுடைய சுவிசேஷம் அக்காலத்து விஞ்ஞானத் தத்துவங்களுக்கு முன்பாக நிற்க முடியவில்லை. ஏனெனில் வானத்தில் மழை நீரே இல்லை. 51இன்றைக்கு, மதக்குழுக்கள் என்றழைக்கப்படும் நவீன குழுக்களின் விஞ்ஞானத் தத்துவம், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியை உணர்ச்சி வசப்படுதல் (emotion) என்று நிரூபிக்க முயல்கின்றது. பாருங்கள், அவர்களுடைய விஞ்ஞானத் தத்துவத்துக்கு ஏற்றுவாறு இது அமைந்திருக்கவில்லை. சரி, அப்படியானால் இந்த கேள்வியை அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களை மாற்றுவது எது? ஒரு குடிக்காரன் குடிப்பதை நிறுத்தச் செய்வது எது? ஒரு வேசி தன் பொல்லாத வாழ்க்கையை விட்டொழியச் செய்வது எது? செவிடரும், ஊமையரும், குருடரும் சுகம் பெறச் செய்வது எது? மரித்தோரை உயிரோடெழுப்புவது எது? இதற்கு விளக்கம் தாருங்கள். இது உணர்ச்சி வசப்படுத்தலா? உணர்ச்சி அதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. நிச்சயமாக. உயிருள்ள எதற்கும் உணர்ச்சியுண்டு. உணர்ச்சியில்லாத எதுவுமே மரித்துப் போனது. இப்படி கூறுவதை மன்னிக்கவும். உணர்ச்சியற்ற நமது மார்க்கத்தில் சிலவற்றை நாம் புதைத்து விட வேண்டுமென்று எண்ணுகிறேன். ஏனெனில் அது மரித்துப் போனது. இதற்கு எந்த உணர்ச்சியும் இல்லை. உணர்ச்சியில்லாத எந்த மார்க்கமும் புதைக்கப்பட வேண்டும். அது உணர்ச்சி பெற்றிருக்கின்றது! 52இயேசு பட்டினத்துக்குள் பிரவேசித்த போது, பிள்ளைகளும் எல்லோரும், அவருடைய நண்பர் அனைவரும், “ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தனர். அக்காலத்து மதத்தைச் சேர்ந்தவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது மிகவும் உணர்ச்சி வாய்ந்ததாயிருந்தது. அவர், ”இவர்கள் பேசாமலிருந்தால், கல்லுகளே கூப்பிடும் (லூக் 19:40) என்றார். பாருங்கள்? ஏதாவதொன்று சத்தமிட்டுக் கூப்பிட வேண்டும், ஏனெனில் இதில் ஜீவன் உள்ளது. நோவாவுக்கு பயங்கர தருணம் உண்டாயிருந்தது. முடிவில் ஒரு நாள் அவனுக்கு சோதனை நேர்ந்தது. தேவனுடன் செல்பவர் அனைவருக்கும் சோதனைகள் வருகின்றன. உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுகின்றது. அவருக்காக நீங்கள் வாழத் தொடங்கும்போது, உங்கள் அண்டை வீட்டார் ஒவ்வொருவரும் உங்களைக் குறித்து பேசுவார்கள், எல்லாமே உங்களுக்கு தவறாக நடக்கும். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அது தேவன் உங்களைச் சோதிப்பதாகும். தேவனிடத்தில் சேரும் ஒவ்வொரு புத்திரனும் முதலில் நிரூபிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு புத்திரனைப் போல் தண்டிக்கப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது. (எபி 12:5-8) நான் தவறு செய்தபோது என் தந்தை என்னை தண்டித்தது போல் கதவில் பத்து கற்பனைகள் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும் அது இவ்வளவு நீளமான ஒரு கம்பு. திரு. பிரன்ஹாம் அவர்களுக்கு பலத்த கரம் உண்டு. அவர் எங்களை வெளியே கூட்டிச் சென்று தண்டிப்பார், தேவனும் அப்படியே செய்கிறார். அவர் சோதித்து, புத்திரசிட்சை அளித்து உங்களை வளர்க்கிறார். ஏனெனில் நீங்கள் அவருடைய பிள்ளை. உங்களுக்கு எதிர் காலத்தில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது, மகிமையின் வீடு. அவர் உங்களை சிட்சிக்கிறார். தேவனிடத்தில் சேரும் ஒவ்வொரு புத்திரனும் சோதிக்கப்பட வேண்டும். 53அவனுடைய காலத்துக்கு அடையாளமாயிருந்த நோவாவுக்கு சோதனை வந்தது. தேவன் அவனை பேழைக்குள் செல்லும்படி கூறினார். அவன் பேழையில் நுழைந்தவுடன் கதவு தானாகவே மூடிக் கொண்டது. நோவா தன் குடும்பத்தினரிடம், “நாளை கவனியுங்கள். ஓ, இன்றிரவு கதவு மூடிக் கொண்டது. நாளை காலை வானத்திலிருந்து மழை பெய்யும்'' என்று கூறியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு முன்பு மழை பெய்ததேயில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பரியாசக்காரர்; ஒருக்கால் அவர்களில் சிலர் பாதி வழி வந்த விசுவாசிகளாயிருக்கக் கூடும். அவர்கள், ''நாம் அங்கு சென்று பார்ப்போம். அந்த கிழவன் கூறினது சரியாயிருக்கலாம்?“ என்று சொல்லியிருப்பார்கள், அவர்கள் பேழையை சுற்றிலும் நின்று கொண்டு, ”ஒருக்கால் அவன் கூறினது சரியாயிருக்கலாம்'' என்று எண்ணி காத்துக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை வழக்கம் போல், சூரியன் எழும்பி பிரகாசித்தது. உங்களுக்குத் தெரியுமா. சாத்தான் பேழையின் உச்சியிலிருந்த துவாரத்தின் மேல் - ஜன்னலின் மேல் அமர்ந்து கொண்டு, “நீ சொன்னது சரியென்று இன்னுமா நினைத்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நம்மெல்லாருக்கும் பிசாசு அதையே செய்கிறான். ஆனால் தேவன் ஒன்றை கூறின வரைக்கும், அதில் நிலைத்திருங்கள். என்ன நேர்ந்தாலும், அதில் நிலைத்திருங்கள். 54இரண்டாம் நாள் கடந்தது, மூன்றாம் நாள் கடந்தது. நோவாவுக்கு பேழைக்குள் வியர்த்தது. ஆனால் முடிவில், ஏழு நாட்களுக்குப் பின்பு அவன் பேழைக்குள் சென்றது பெப்ருவரி 17ம் தேதியாயிருந்தது. ஏழு நாட்களுக்குப் பின்பு அன்று காலை அவன் உறக்கத்தினின்று எழுந்தபோது, இடிகள் முழங்கின. மழை பெருந்துகளாக விழுந்தது. “நாம் சென்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என்று கூறி புறப்பட்டு வந்து ஓரிரண்டு நாட்கள் அங்கு இருந்தவர்களுக்கு காலதாமதமாகிவிட்டது. அவர்கள் பேழையின் கதவைத் தட்டினர். கூச்சலிட்டனர். வெள்ளம் தெருக்களில் நிறைந்து, மலை பாகங்களில் உயர எழும்பத் தொடங்கினது. ஜனங்கள் மேடான பாகங்களுக்கு ஓடினர். அவர்கள் படகுகளில் ஏறிக்கொள்ள முயன்றனர். ஆனால் அது தேவனால் செய்யப்படாத படகாயிருந்ததால், பூமியில் அப்பொழுது ஏற்பட்ட பயங்கரமான குலுக்கலினால், அது தண்ணீரில் கவிழ்ந்தது. 55நீங்கள், “எந்த மார்க்கமாயிருந்தாலும் பரவாயில்லை. எனக்கு ஒரு மார்க்கம் உண்டு. அது போதும்'' என்கிறீர்கள். இல்லை, அது போதாது. அது மார்க்கத்தில் தேவனால்அளிக்கப்பட்ட அனுபவமாயிருத்தல் அவசியம் பாருங்கள்? மற்றெல்லாமே அழிந்து போகும். நான் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக இதை கூறவில்லை. நான் அன்பின் நிமித்தம் மாத்திரமே இதை கூறுகிறேன். அந்த நாளில் இதற்கு நான் பதில் கூற வேண்டும், அதற்கு நான் பொறுப்பாளி. எனவே அவர் கூறுவதையே நானும் கூறினால், அது சரியாயிருக்கும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் வேறு யாருடைய கோட்பாட்டையோ அல்லது தத்துவத்தையோ நான் நுழைக்க முயன்றால்; நான் அப்படி செய்ய மாட்டேன். அதில் எனக்கு விசுவாசமில்லை. அவர் கூறினதையே நான் விசுவாசிக்கிறேன். 56இப்பொழுது கவனியுங்கள். அது அதிக ஆழமாயிற்று. தண்ணீர் மிகவும் உயர எழும்பினது. அவர்கள் பேழையின் கதவை தட்டினர், கூச்சலிட்டனர், அழுதனர். ஆனால் எந்த பயனும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு மிருகங்கள் பேழைக்குள் சென்ற போது, பரியாசக்காரர் சிலர். “துர்நாற்றம் பிடித்த உன் மிருகங்களுடன் உள்ளே போ. உனக்கு விருப்பமானால், அங்குள்ள அந்த துர்நாற்றத்துடனே வாழு'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. இன்றைக்கும் அவர்கள் அவ்வாறே உங்களிடம் கூறுகின்றனர்: ''உனக்கு விருப்பமானால், பழமை நாகரீகம் கொண்டிரு. நாங்கள் மகிழ்ச்சியாக வாழப் போகின்றோம் என்று. அவர்கள் அவ்வாறே செய்யட்டும். ஆனால் ஓ, சகோதரனே, கதவு அடைக்கப்பட்டு பேழையில் பாதுகாப்பாக இருப்பதென்பது அதுதான் முக்கியம் வாய்ந்தது. 57ஆனால் நோவாவுக்கு, அவன் காலத்தில். அது கடினமாக இருந்தது, பாருங்கள். ஏனெனில் ஜனங்கள் அப்படிப்பட்ட ஒன்றை முன்பு கேட்டதில்லை. ஆனால் அது நிறைவேறினது. நோவாவின் மீட்பிற்குப் பிறகு - சுவாசமுள்ள யாவும் அழிந்து போன பிறகு - பூமி மறுபடியும் வளரத் தொடங்கினது. பின்பு ஒரு நேரம் வந்தது, தேவன் தமது பிள்ளைகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வருவதை நாம் காண்கிறோம். அப்பொழுது மோசே நியாயப்பிரமாணத்துடன் வருகிறான். ஜனங்களுக்கு அதை புரிந்து கொள்ள கடினமாயிருந்தது. ஆனால் யுகம் நியாயப்பிரமாண யுகத்துக்கு மாறினது. நியாயப்பிரமாணம் அளிக்கப்பட்டபின்பு, மோசே முயன்றான்... அது ஒரு உபாத்தி (கலா. 3:24) ஜனங்கள் தங்கள் விருப்பம்போல் வாழ்ந்து வந்தனர். எனவே நியாயப்பிரமாணமாகிய உபாத்தி, வேதம் கூறின விதமாக, அது தவறென்று ஜனங்கள் உணர்ந்து கொள்ளும்படி செய்தது. அதற்காகத் தான் அவர் பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அது ஒரு பெரிய மாற்றம், ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சரி. 58மோசேக்குப் பிறகு யோவான் தோன்றினான். யோவானுக்குப் பிறகு வேறொரு யுகம் தோன்றினது. அவன் இயேசுவை அறிமுகப்படுத்தினான். இயேசு நமக்கு கிருபையைக் கொண்டு வந்தார். ஆவியாகிய தேவன், ஆவியின் வழியில் தமது அன்பை வெளிப்படுத்தினார். ''தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்''. (யோவான் 3:16) இயேசு நியாயப்பிரமாணத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானவராகவும், மாறுபட்டவராகவும் இருந்தார், பாருங்கள், அது வேறொரு யுகம், வேறொரு காலம். இயேசு சென்றபோது, பரிசுத்த ஆவியின் யுகத்தைக் குறித்து குறிப்பிட்டு சென்றார். அது உள்ளே இருந்து கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாகத் திகழ்கின்றது. இங்கு அநேக வேதவாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன், ஆனால் அவைகளைக் கூற எனக்கு நேரமில்லை. நான் சுருக்கமாகக் கூறுகிறேன். யுகம் மாறும் போது - பழைய யுகத்திலிருந்து தற்போதைய செய்திக்கு மாறும் போது - அது எப்பொழுதுமே மக்களிடையே சண்டையை விளைவிக்கிறதென்பது உண்மை. அவர்கள்... அது ஒவ்வொரு முறையும் வேதப் பிரகாரமாக இருந்தாலும் கூட. அவர்கள் வாழ்வதற்கென அல்லது வேறெதாவதைச் செய்ய தேவன் அவர்களுக்கு கொடுத்துள்ள அந்த யுகத்தின் போது; அந்த யுகம் அளிக்கப்பட்ட உடனே உலகத்திலுள்ள மனிதர்கள் அதற்கு எதிரிடையாக மனிதனால் உண்டாக்கப்பட்ட விவகாரம் ஒன்றை கண்டு பிடிக்க விழைகின்றனர். 59நோவா பேழையை உண்டாக்கினவுடனே, துரோகியான நிம்ரோத் ஒருகோபுரத்தைக் கட்டி, வெள்ளம் வந்தால் நாம் ஏறி கோபுரத்தின் உச்சியையடைவோம் என்றான், பிறகு தேவன் தமது நியாயப்பிரமாணத்தை அளித்தார். பாருங்கள் அதற்கு முன்பிருந்த காலம் முடிந்து விட்டது. இயேசு நியாயப்பிரமாணத்திற்குப் பிறகு தோன்றினார். மோசே உரைத்த நியாயப்பிரமாணம்... கிறிஸ்து உலகில் தோன்றுவாரென்று மோசே முன்னுரைத்தான். அப்படியிருந்தும், அவர் உலகில் வந்த போது, அவர்கள் தங்கள் பிதாக்களின் பாரம்பரியங்களில் அதிகமாக நிலை கொண்டிருந்தனர். அவர்களுக்கு தங்கள் கோட்பாடுகள் இருந்தன, தங்கள் சபைகள் இருந்தன. தங்கள் நாகரீகம் இருந்தது. இவைகளில் அவர்கள் அதிகமாக ஊறிப் போயிருந்த காரணத்தால், கோட்பாடுகளைக் கொண்டிருந்த அவர்களுடைய இராஜ்யத்திலிருந்து (சபையில் லிருந்து) அவர்களை அசைத்து, தம்மை விசுவாசிக்கச் செய்வதென்பது இயேசுவுக்கு மிகவும் கடினமாய் இருந்தது. ஏதேன் யுகத்தில், ''உன் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்'' என்று முன்னுரைக்கப்பட்ட அன்று முதற்கொண்டு, ஒவ்வொரு யுகத்தின் போதும் இயேசு வருவாரென்று வேத வசனங்கள் முன்னுரைத்துக் கொண்டே வந்தன. ஆயினும் அவர் வந்த போது, அவர்கள் தங்கள் கோட்பாடுகளினால் கட்டப்பட்டிருந்த காரணத்தால், அவரை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. இருப்பினும், அது வேதப்பிரகாரமான உண்மையாயிருந்தது. ஒவ்வொரு செய்தியாளனும் - அந்த காலத்து செய்தியும் - அடுத்ததாக வரப்போகின்ற செய்தியாளனைக் குறித்து முன்னுரைத்தான். இது ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தது. மோசேயைக் குறித்து தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். இயேசுவின் வருகையைக் குறித்து மோசே முன்னுரைத்தான். அவன், ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்'' என்றான். வரவிருந்த மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பாரென்று நாம் எத்தனை முறை, உலகம் பூராவும் அளித்த செய்திகளில் குறிப்பிட்டுள்ளோம்! 60ஆகையால் தான் அந்த பெயர் கெட்ட ஸ்திரீ, எல்லா போதகர்களுக்கும் விரோதமாக, அந்த செய்தியை விசுவாசித்தாள். இயேசு அந்த சமாரியா ஸ்திரீயிடம், ''தாகத்துக்குத் தா'' என்றார். அவள் மொண்டு கொள்ள உம்மிடம் ஒன்றுமில்லையே. யூதனாகிய நீர் ஒரு சமாரியா ஸ்திரீயிடம் பேசுவது வழக்கமில்லையே என்றாள். இப்படியாக உரையாடல் தொடர்ந்தது. பிறகு அவர், ''உன் புருஷனை இங்கு கொண்டு வா'' என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''நீ உள்ளபடி சொன்னாய். உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருப்பது உன் புருஷன் அல்ல'' என்றார். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். யுகம் மாறப்போகிறதென்று நாங்கள் அறிவோம். மேசியா என்னப்படும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்- தேவனின் கிறிஸ்து - வருவாரென்று அறிந்திருக்கிறோம். அவர் வரும் போது, அவரே அந்த தீர்க்கதரிசியாயிருப்பார் என்றாள். அந்த காலத்து போதகர்களைக் காட்டிலும் அவள் எவ்வளவு அதிகமாக அறிந்திருந்தாள் ஆம், அவள் இருந்த அந்த நடத்தை கெட்ட நிலையிலும் கூட, பாருங்கள், அவள் வேதத்தைப் புரிந்து கொண்டாள். ஐந்து புருஷரை விவாகம் செய்து, ஆறாவது மனிதனுடன் அந்த எளிய ஸ்திரீ வாழ்ந்து கொண்டிருந்தாள். இருப்பினும் அவள் வேத வாக்கியங்களைக் குறித்து அதிகமாக அறிந்திருந்தாள். ஏனெனில் அது கூறப்பட்ட விதமாகவே அதை ஏற்றுக் கொண்டாள். ''அவர் வரும் போது, தீர்க்கதரிசியாயிருப்பார்” என்றாள். இயேசு அவளிடம் என்ன கூறினார்? ''நானே அவர்'' 61அவள் தண்ணீர் குடத்தை விட்டு பட்டினத்துக்குள் ஓடி, ''நான் செய்த காரியங்களை எனக்கு அறிவித்த அந்த மனிதனை வந்து பாருங்கள். அவரே மேசியாவல்லவா?'' என்றாள். பாருங்கள்? அது அவர் தான். பாருங்கள். அவர் வரப்போகிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஏனெனில். தீர்க்கதரிசிகளின் நாட்களிலும், மோசேயின் நாட்களிலும், ஒவ்வொரு காலத்தின் போதும், வேத வாக்கியங்கள், ''அவர் இவ்வுலகில் வருவார், அவர் இப்படியாக இருப்பார்'' என்று முன்னுரைத்தன. ஓ, என்னே! ஜனங்கள் மாத்திரம் இன்றைக்கு அதைக் காண முடிந்தால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளை அறிந்து கொள்வார்கள். அது இந்நாளுக்கென்று அளிக்கப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தம் என்பதை புரிந்து கொள்வார்கள். இப்படியாக இருக்குமென்று தேவன் உரைத்தார். அதில் வேறொன்றும் இல்லை. தேவனுடைய மகத்தான கடிகாரம் இயங்கி, சரியான நேரத்தைக் காட்டுகின்றது. விஞ்ஞானத்தின் படியும் கூட. நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன. எனவே, பாருங்கள், நள்ளிரவு மணி, கடிகாரத்தில் எந்த நேரமும் அடிக்கக்கூடும். நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன என்று அவர்கள் கூறி இரண்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. 62பாருங்கள், நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், நாம் வேறொரு யுகத்திற்கு மாறிவிட்டோம். பழைய சபையின் காலத்தில், அந்த இருட்டான நாளில், ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு உங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து கொள்ளுதல் என்பதிலிருந்து சாயங்கால வெளிச்சத்துக்கு, திரும்ப அளிக்கப்படும் காலத்துக்கு; பூமியில் பரிசுத்த ஆவி மறுபடியுமாக திரும்ப வருதல், வேறொரு பெந்தெகொஸ்தே, வேறொரு அடையாளம், வேறொரு காரியம் நடந்து கொண்டிருக்கும் காலத்துக்கு. ஆனால் ஜனங்களோ அதை விசுவாசிப்பதில்லை. ஏனெனில் இயேசுவின் நாட்களிலிருந்த ஜனங்களைப் போலவே இவர்களும் தங்கள் கோட்பாடுகளில் ஊறிப்போயுள்ளனர். பாருங்கள்? அவர் பூமியிலிருந்த போது, இந்நாளைக் குறித்து முன்னுரைத்தார், அவர் வேத வாக்கியங்களின்படியே வந்தார், பிறகு இந்த நாள் வருமென்று அவர் முன்னுரைத்தார். 63வேறொரு காரியத்தைக் குறித்து இப்பொழுது நாம் சிந்திக்கலாம். அதை நீங்கள் படிக்க விரும்பினால், மத்தேயு 24: இயேசு இந்நாளைக் குறித்து கூறியுள்ளார். கடைசி நாட்களில் யூதர்கள் ஒன்று சேருவார்களென்று அவர் உரைத்தார். “அத்திமரம் துளிர் விடுவதை நீங்கள் காணும் போது காலம் சமீபமாயுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்றார் அவர். அவர் மேலும், ”இடுக்கண்ணின் காலம் வரும். ராஜ்யங்களுக்கிடையே விரோதம் வரும், சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். மனுஷருக்கு அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் நின்றுவிடும்“ என்றார் (ஆங்கிலத்தில் men's heart failing them for fear” என்பதை “ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போம்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது லூக் 21;26. அது மாரடைப்பு என்பதாக தீர்க்கதரிசி அர்த்தம் கொள்கிறார் - தமிழாக்கியோன்) - ஸ்திரீகளுக்கல்ல, மனுஷருக்கு. அது மனிதர்களிடையே ஏற்படும். இயேசு ”ஸ்திரீகள்“ (Women) என்று கூறவில்லை. ”மனுஷருக்கு (men). அந்த கொடிய நோயாகிய மாரடைப்பை பாருங்கள் அந்த நாளில் அது நடக்கும்! அது முடிவு கால அடையாளமாயிருக்கும். இருதயங்கள் நின்று விடுதல், பயம், திகைப்பு, ''இந்நாளைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசி உரைத்த போது, கடைசி நாட்களாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில், சபை வெது வெதுப்பாயிருக்குமென்றும் அப்படிப்பட்ட ஒரு நேரம் வருமென்றும் கூறியுள்ளான். பாருங்கள்? அது என்ன? இயேசு (கடைசி காலம்) இக்காலத்தின் முடிவை முன்னறிவிக்கிறார். 64ஏதேனின் காலத்திலும், நோவாவின் காலத்திலும் மோசேயின் காலமாகிய நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், பிறகு கிருபையின் காலத்திலும், இப்பொழுது சாயங்கால நேரத்திலும் இருந்து வருகிற விதமாகவே. இன்னும் அநேகம் உண்டு. நமக்கு நேரமிருந்தால் இவைகளைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு நேரமில்லாத காரணத்தால், இவைகளை விட்டுவிடுகிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு அடுத்து வரும் காலத்தில் என்ன நேரிடும் என்றுரைத்தனர். ஆனால் - சபையோ, தங்கள் கோட்பாடுகள். தங்கள் கொள்கைகள், தங்கள் நம்பிக்கை, மனிதனால் உண்டாக்கப்பட்ட தத்துவங்கள் போன்றவைகளில் அதிகமாக ஈடுபட்டு ஸ்தாபனமாகிவிட்டபடியால், அந்த வார்த்தையை அவர்கள் காணத் தவறிவிட்டனர். இப்பொழுது சாயங்கால சுவிசேஷகம் எப்படி உள்ளது என்று நீங்கள் காணலாம். பாருங்கள்? அது என்ன? அதை சுமப்பவர்கள் பயித்தியக்காரர் என்றழைக்கப்படுவர். அவர்கள் மிகவும் வித்தியாசமாயிருப்பார்கள். நோவாவின் காலத்திலும், ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் அவ்வாறே இருந்தனர். இயேசுவை அவர்கள் விசுவாசித்த காரணத்தால், சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டனர். அவர் பேசுவதைக் கேட்ட எவருமே சபை பிரதிஷ்டம் செய்யப்பட்டனர். பாருங்கள்? ஆனால் அவருடைய யுகம் ஒன்றிருந்தது, அது அவருடைய காலம் - குமாரனின் யுகம் 65அந்த மகத்தான பரிசுத்த ஆவி, அதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாக நாம் காண்கிறோம். சில வேதவாக்கியங்களை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், மத்தேயு 24, 2 தீமோத்தேயு 3:1. கடைசி காலம் நுண்ணறிவு படைத்த காலமாயிருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்துள்ளார். அது உங்களுக்குத் தெரியுமா? ஏன் அப்படி? ஜோசப், நீங்கள் என்னுடன் இந்த தேசத்தில் அதிகமாக பயணம் செய்திருக்கிறீர்கள், வெளிநாடுகளில் நடைபெற்ற கூட்டங்களைக் குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். நான் வெளி நாடுகளுக்கு செல்லுகிறேன், அங்கு ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் ஐந்து லட்சம் ஜனங்கள்... இங்குள்ள கூடாரத்திலும் அது போன்ற கூட்டங்கள் நடை பெறுகின்றன. வெளி நாடுகளில் நடக்கும் கூட்டங்களில் பத்து, இருபது அல்லது முப்பதாயிரம் பேர் எழுந்து நின்று தேவனைத் துதிக்கின்றனர். அவர்கள் அதை புரிந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் அவ்வாறு நடக்காததன் காரணம் என்ன? இவர்கள் நுண்ணறிவு படைத்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நியாயத்தீர்ப்பு இன்னும் மற்ற காரியங்களைக் குறித்து பேசாத ஒருவரையே விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் சங்கங்கள், விடுதிகள் தேவனற்ற காரியங்கள் போன்றவைகளில் கொண்டுள்ள தங்கள் ஐக்கியத்தை அது முறித்துவிடுகிறது. எனவே அவர்களுடைய போதகர் இப்படிப்பட்டவைகளைக் குறித்து ஏதாகிலும் பேசினால், மூப்பர் நிர்வாக சங்கம் அவரை உடனே வேலை நீக்கம் செய்து வேறு யாரையாவது - வாலிப 'ரிக்கி' போன்ற ஒருவனை - அந்த இடத்தில் அமர்த்திவிடும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகின்றதா? 66அப்படி நான் கூறினதை மன்னிக்கவும். அப்படி கூற நான் நினைக்கவில்லை. சில நேரங்களில் எனக்கு உற்சாகம் மேலிடுகின்றது என்று எண்ணுகிறேன். ஆனால்... 'ரிக்கி' என்னும் சொல் சரிதான். ஆனால் எனக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை. அது உண்மை. ஆனால் நீங்கள் எண் ஜோதிடம் (Numerology) பார்த்து, உங்கள் பிள்ளைக்கு வேறு பெயர் வைக்கின்றீர்கள். ஆம் ஐயா, ரிக்கி அல்லது எல்விஸ், அல்லது அதைப் போன்ற வேறொரு பெயர், ஓ, கர்த்தர் இரக்கம் பாராட்டுவாராக எனவே, ஓ, எப்படியாயினும் அவர்கள் அப்படிப்பட்ட பெயரை வைக்க வேண்டும். அந்த பெயர்கள் போய்விடவில்லை, அவை மறுபடியும் வரவேண்டும். அந்த பெயர்கள் இருக்கவேண்டிய காலம் இதுவே. அது முற்றிலும் உண்மை . 67“ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி” இப்பொழுது கவனியுங்கள். நான் வேதத்திலிருந்து எடுத்துரைக்கிறேன்: ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள். தீமோ. 4:1 பாருங்கள் அவர்கள் எப்படியிருப்பார்கள் என்று: ''துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்'' பெரிய புள்ளிகள் (big shots) மன்னிக்கவும், பெரிய புள்ளிகள் என்று வழக்கமாக உபயோகிக்கப்படும் சொல்லின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாமெல்லோரும் அதை அறிந்துள்ளதால், அதை கூறுவது நலம். “துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகபிரியராயும்''. 68நேற்று நான் நின்று கொண்டு அந்த நீச்சல் குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஞாயிறு பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம், “இயேசு உமிழ்ந்தார் என்னும் பாகம் வேதத்தில் இருக்கக் கூடாது. இயேசு உமிழ்ந்து சேறுண்டாக்கினார் என்பது சுகாதார விதிகளுக்கு விரோதமான செயல் என்று கூறினதை எண்ணி வியந்தேன். இயேசு நின்று கொண்டு குருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். மூலகிரேக்கு வேதாகமம், “அவர் தரையில் உமிழ்ந்து கொண்டிருந்தார்” என்றுரைக்கிறது. இந்த மனிதனுடன் அவர் பேசிக் கொண்டே தரையில் உமிழ்ந்து கொண்டிருந்தார், அவர் உமிழந்து முடிந்தவுடன், குனிந்து, தரையிலுள்ள அழுக்குடன் கலந்த உமிழ்நீரை எடுத்து, அவனுடைய கண்களில் தடவி, “போய் சீலோவாம் குளத்தில் கழுவு, உன் கண்கள் திறக்கப்படும்” என்று கூறி அவனை அனுப்பினார். அவன் அந்தப்படியே சென்று கழுவி பார்வையடைந்தான். 69எனவே அந்த ஞாயிறு பள்ளி ஆசிரியர், “அது இந்த காலத்தில் நடக்காது. அது சுகாதார விதிகளுக்கு, ஆரோக்கிய விதிகளுக்கு முரணான ஒரு செயல்'' என்றார். ஆனால் அப்படி கூறின அந்த மனிதன் தன் மனைவியையும் பிள்ளைகளையும் நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு ஆண்களும் பெண்களும் நீச்சல் அடிக்கின்றனர். பெண்கள் மாதவிடாயின் போதும் நீச்சல் குளத்தில் குளிக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிக்க சிறுநீர் அறைக்குச் செல்வதில்லை. அந்த அழுக்கான உடல்களும், அங்குள்ள அழுக்கும்; அவர்கள் தண்ணீரை வாயில் கொண்டு துப்புகின்றனர் - கண்களும் மற்றவைகளும். இதை அவர்கள் செய்த பின்பும், இயேசு தரையில் உமிழ்ந்து ஒரு மனிதன் பார்வையடையச் செய்ததை குறை கூறுகின்றனர். 70அன்றொரு நாள் அந்த நீச்சல் குளத்திலிருந்து ஒரு பையனை அழைத்து வந்தேன். அவன், ''அந்த தண்ணீரை சிறிது குடித்து விட்டேன். எனக்கு வியாதி வரும்போல் உள்ளது. நான் வீட்டிற்கு செல்கிறேன்“ என்றான். அவன் ஒருக்கால் இப்பொழுது இங்கிருக்கலாம். அவன் இந்த தெருவில் இரண்டு மூன்று ''பிளாக்குகள் தள்ளி வசிக்கிறான். அவனை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அவன், ''நான் மறுபடியும் அங்கு போகவே மாட்டேன்” என்றான். ஆயினும் அதுதான் “நவீன நாகரீகம்” என்றழைக்கப்படுகின்றது. நாம் எந்நிலையை அடைந்துள்ளோம் என்று பாருங்கள். ''கொசுவில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குதல்“ என்னும் பழமொழி போன்று இதுள்ளது, இப்பொழுது அந்த ஞாயிறு பள்ளி ஆசிரியரைக் காண ஆவலாயிருக்கிறேன். பார்த்தீர்களா? இப்படிப்பட்ட காரியங்களை விட்டுவிலகுங்கள். 71“நுண்ணறிவு படைத்தவர்கள், துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்” நான் வேதவாக்கியத்தை எடுத்துரைக்கிறேன். இது கடைசி காலத்தில் உண்டாகும் என்று ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறார். ''துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து...'' நல்லது, முதலாவதாக அவர்கள் “இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள், அதாவது வார்த்தையை விசுவாசிக்கிறவர்களை அவர்கள் பகைப்பார்கள். அவர்களைப் பார்த்தீர்களா? இவர்கள் பாரம்பரிய கோட்பாடுகள் போன்றவைகளில் இணங்குவதில்லை என்னும் காரணத்தால் பகைக்கின்றனர். அந்த பரிசேயரும் சதுசேயரும் இயேசுவை வெறுத்தது போல். ஏன்? ஏனெனில் அவர் தங்களுடைய கோட்பாடுகளுக்கு எதிராக பேசினார். பாருங்கள்? அவர் வித்தியாசமாக இருக்க விரும்பினதால் அல்ல. அவர் வார்த்தையாயிருந்த படியால், அவர் வார்த்தையை வாழ்ந்து காட்ட வேண்டியவராயிருந்தார், அவர் “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், என்னை விசுவாசியாதேயுங்கள்” என்றார். பாருங்கள்? 72இன்றைக்கும் அது அவ்வாறேயுள்ளது. ஒரு மனிதன் இவைகளைப் பிரசங்கித்துவிட்டு, அது நடக்காமல் போனால். அது தவறு. ஏனெனில் அது நடக்கும் என்று வேதம் கூறியுள்ளது. அது நடந்தால், அது சரியென்று உறுதிப்படுத்துகின்றது. அந்த மனிதன் சரி என்றல்ல, வார்த்தை சரியாயுள்ளது. ஆனால் நாமோ இவ்விதமான ஒரு நிலையை அடைந்துள்ளோம். பாருங்கள். நண்பர்களே, நான் கூறுவது நியாயமானது. அதை உங்களால் காணமுடிகின்றதா? முடிவுகால சுவிசேஷத்தின் உச்சக்கட்டத்தை உங்களுக்கு காண்பிக்க, நான் படிப்படியாக கூறிக் கொண்டே செல்கிறேன். 73இப்பொழுது கவனியுங்கள், நுண்ணறிவு படைத்த இந்த காலத்தில், “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்கள்ளாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்”, ''நாங்கள் லூசியை நேசிக்கிறோம்“ போன்ற இழிவான தொலைகாட்சி நாடகங்களைக் காண புதன் இரவன்று வீட்டில் தங்கிவிடுதல். ஒரு டஜன் முறை மணம் செய்த மனிதர்களுடன் வாழ்க்கை நடத்துதல். ஓ, என்னே, அவர்கள் ஒவ்வொருவரும் மணம் செய்து, விவாகரத்து செய்து, மறுபடியும் மணம் செய்து விவாகரத்து செய்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை நீங்கள் விக்கிரங்களாக, தேவர்களைப் போல் ஆக்கிவிடுகின்றீர்கள். நீங்கள் ஜெபக்கூட்டத்திற்கு வருவதற்கு பதிலாக வீட்டில் தங்கி இந்த நாடகத்தைக் காண விரும்புகிறீர்கள். ''தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்'' பந்தாட்டம் ஒன்று பட்டினத்தில் நடந்தால் அல்லது இங்கு வேறெதாவது விளையாட்டுப் பந்தயம் நடந்தால் அங்கு போகவேண்டும் என்பதற்காக அவர்கள் சபை ஆராதனைகளை ரத்து செய்து விடுகின்றனர். எல்விஸ் பிரஸ்லி தன் கிட்டார்ருடன் (guitar) தெருவில் வந்து நடனமாடிப் பாடட்டும் அல்லது வேறெதாவது ஒருவன் புதன் இரவன்று வரட்டும், அப்பொழுது ஜெபக் கூட்டங்கள் ரத்து செய்யப்படும். ''துணிகரமுள்ளவர் களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து“. 74இவை கம்யூனிஸ்டுகளைக் குறிப்பிடுகிறது என்று நீங்கள் கூறலாம். இல்லவே இல்லை. இவர்கள் சபை அங்கத்தினர்கள். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்கள். ஆனால் என்ன? அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள் தேவபக்தி கொண்டவர்கள், ஆனால் “தேவன் இவைகளைச் செய்வதில்லை, அதில் வல்லமை எதுவுமில்லை. அதை ஏற்றுக் கொண்டு, இதை செய், அதை செய்” என்பது. பாருங்கள், வாழ்க்கையில் எவ்வித மாற்றமுமில்லை, வேறொன்றுமில்லை. சபையில் மாத்திரம் சேர்ந்திருப்பது. “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று வேதம் கூறுகின்றது. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்ட பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்''. வேதம் அதை தத்ரூபமாக உரைக்கிறது, அந்த காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ''நீயோ சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. பாருங்கள், அதுதான். 75நாம் காணும் இந்த செய்தியாளர்கள் மற்றும் சாட்சிகளின் மூலமாக, நாம் எந்த வகுப்பினர் என்பதை அறிந்து கொள்கிறோம். இன்று காலை நீங்கள் எந்த வகுப்பை சார்ந்திருக்கிறோமென்று, ஒரு வகுப்பினரை, இந்த அடையாளங்கள் தொடருமென்றும், நோவாவின் நாட்களில் நடந்தது போல் அவர்கள் பரியாசம் செய்யப்படுவார்களென்றும் அவர் கூறியுள்ளார். இங்கு மற்ற வகுப்பினர் அவர்களை கேலிசெய்து, துணிகரமுள்ளவர்களாய் இறுமாப்புள்ளவர்களாய், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அவர்கள் சார்ந்துள்ள அதையே மறுதலிப்பார்கள். எனவே நீங்கள் எந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம், பாருங்கள், இன்றைய உண்மையான செய்தியாளர்களா என்று சாத்தான் தன்னுடைய செய்தியைக் கொண்டிருப்பான் என்று இயேசு முன்னுரைத்துள்ளார். அவருடைய செய்தியாளனுக்கு இந்த முக்கியமான விஷயம் இருக்கும்; அதாவது, விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் என்பது, பாருங்கள், சாத்தானின் செய்தியாளர்களோ தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருப்பார்கள். கர்த்தருடைய செய்தியாளர்களிடம் இந்த அடையாளங்கள் காணப்படும், அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவானவைகளைக் குடிப்பார்கள். பிசாசுகளைத் துரத்துவார்கள், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நாம் இந்த வகுப்புகளில், ஒரு வகுப்பைச் சேர்ந்திருக்கிறோம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். ஓ, என்னே! 76''முழு சரீரமே காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமாயுள்ளது'' என்று ஏசாயா கூறினதில் வியப்பொன்றுமில்லை, (ஏசா. 1:6) நாம் எங்கு செல்ல முடியும்? எல்லோருமே ஒன்றாக இணைந்தால். நாம் என்ன செய்வோம்? அது முன்னைக் காட்டிலும் மோசமாயிருக்கும். பாருங்கள், எல்லா விதமான காரியங்களும் இருக்கும் - உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் அவர்கள் செய்ய முயல்வது போல். அது ஒருக்காலும் நடக்காது. அதில் நாத்திகர்கள் - அவிசுவாசிகள்- உள்ளனர். “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' என்று வேதம் உரைக்கின்றது. (ஆமோஸ் 3:3) பாருங்கள்? அங்கு இரண்டு பேர் ஒருமனப்படவே முடியாது. இரட்சிப்பு என்பது தனிப்பட்டோரின் விவகாரம் - சபையல்ல, அது தனிப்பட்ட நபருக்கும் தேவனுக்குமிடையேயுள்ள ஒன்று. வார்த்தையுடன் நடந்துசெல்லுதல்! ஆம், பார், சகோதரனே, நாம் காண்கிறபடி. நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன் என்பதை அறிவேன். 77கவனியுங்கள், அவருடைய வருகையை அறிவிக்கும் அந்த மகத்தான சிகப்பு விளக்கு இப்பொழுது எரிந்து கொண்டிருக்கிறது. அது நமக்கு தெரியும். நான் இங்கு எழுதி வைத்துள்ள அநேக வேதவாக்கியங்களைக் கொண்டு நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதை உங்களுக்குக் காண்பிக்க முடியும். யூதர்கள் பாலஸ்தீனாவுக்குத் திரும்பிவிட்டனர், அத்திமரம் துளிர்விட்டுவிட்டது. மனிதருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன. ஸ்திரீகள் இப்பொழுது கடைபிடித்துள்ள நடத்தை நான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திற்கு சென்று, இந்த தேசம் ஸ்திரீகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்க முடியும் - ஸ்திரீயின் எண்ணிக்கை, பதின்மூன்று. நாம் பதின்மூன்று குடியிருப்புகளை (colonies) கொண்டிருக்கிறோம், பதின்மூன்று கோடுகள், எல்லாமே பதின்மூன்று, பதின்மூன்று நாடுகள் டாலர் நோட்டில், பதின்மூன்று நட்சத்திரங்கள், எல்லாமே பதின்மூன்று, மற்றும் ஸ்திரீ. 78அண்மையில் நான் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றிருந்த போது நான் பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஒரு ஸ்திரீ என்னிடம், “அமெரிக்காவிலுள்ள பெண்கள் அனுபவிக்கும் சுதந்தரத்தைப் போன்று நாங்களும் அனுபவிக்க, எங்களுக்கு அமெரிக்காவுக்கு வருவதற்கு விருப்பம்'' என்றாள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நான் எடுத்துக் கூறின்போது அவள், ”அப்படியானால் நாங்கள் வரமாட்டோம்'' என்றாள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அது அமெரிக்கா. தண்ணீரில்லாத, ஜனங்களில்லாத இந்த தேசத்திலிருந்து தான் அது புறப்பட்டு வரும் என்பதை நான் வேத்திலிருந்து, காண்பிக்கமுடியும். அது ஆட்டுக்குட்டியைப் போல் எழும்பி வருகின்றது. அதற்கு இரண்டு சிறுகொம்புகள் உள்ளன - ஒன்று அரசாங்க சம்பந்தமானது. மற்றொன்று மார்க்க சம்பந்தமான வல்லமை, ஆனால் அரசியல் வல்லமையின் காரணமாக இவையிரண்டும் இணைகின்றன; நமக்குள்ள புதிய ஜனாதிபதியின் மூலமாக ரோமாபுரியை மறுபடியும் கொண்டு வருதல். 79கம்யூனிஸம் உலகை ஆளுமென்று வேதம் எங்காகிலும் முன்னுரைத்துள்ளதாக யாராகிலும் - இங்குள்ள வேதபண்டிதரோ, அல்லது வேறெங்காகிலும் உள்ளவரோ - எனக்கு காண்பிக்கும்படி விரும்புகிறேன். கம்யூனிஸத்திற்கு பயப்படவேண்டாம், அதில் ஒன்றுமில்லை. அது தேவங்களை சிட்சிக்க தேவன் கையாளும் பொலியான வேதம் ஒன்று. நிச்சயமாக ரோமாபுரி உலகை ஆளுமென்று வேதம் கூறியுள்ளது, நேபுகாத்நேச்சார் அரசன் கண்ட சொப்பனத்தையும் அதற்கு தானியேல் உரைத்த அர்த்தத்தையும் பாருங்கள். அவன் கூறினவாறே ராஜ்யங்களும் காலங்களும் பிழையின்றி தோன்றின. முடிவில் ரோமாபுரி தோன்றினது. எனவே அது ரோமாபுரியாக இருக்கும், கம்யூனிஸமாக இருக்காது. அது பெயரளவுக்கு மாத்திரமே இருக்கும், அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. இல்லை, அவர்களால் செய்ய முடியாது. ஜோசப் இப்பொழுது கூறினது போன்று, “ஆப்பிரிக்காவிலுள்ள அந்த ஏழை ஜனங்களின் மேல் யாருமே ஆளுகை செய்யக்கூடாது. அவர்கள் ஏற்கனவே அடிமைத் தனத்துக்குட்பட்டுவிட்டனர், அதுதான் இன்று அவர்களிடையேயுள்ள விஷயம், அவர்கள் அடிமைத் தனத்துக்குட்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவை அன்பு, அவர்களுக்குத் தேவை தேவன், கம்யூனிஸம் தேவனைப் புறக்கணிக்கும் ஒன்றாக உள்ள போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நிச்சயமாக இல்லை, இல்லவே இல்லை. சிகப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கைகாட்டி போடப்பட்டுவிட்டது. அவருடைய வருகை சமீபமாயுள்ளது. ஓ, “என்னே இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்'' என்று ஏசாயா 60ஆம் அதிகாரம் 2ஆம் வசனம் உரைக்கின்றது. அது முற்றிலும் உண்மை . 80முடிவு கால் செய்தியாளனும் செய்தியும் முடிவுகால சூழ்நிலைகளுக்கு ஒத்ததாயிருக்க வேண்டும். உங்கள் கருத்தும் அதுவேயல்லவா? இந்த செய்தியை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரசங்கித்திருக்க முடியாது, இல்லை, முடிவுகால செய்தியாளனும் செய்தியும் ஒத்ததாக அமைந்திருக்க வேண்டும். முன் காலங்களுக்கு இந்த செய்தி பொருந்தாது. ஆனால் முடிவுகால சூழ்நிலைகளுக்கு இது பொருந்த வேண்டும். இரட்சிக்கப்படுங்கள். சுவிசேஷ அடையாளங்களை விசுவாசியுங்கள் அதுவே இன்றைய செய்தி. உங்கள் ஆத்துமாக்களை ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தில் கழுவி சுவிசேஷத்தின் வித்து நடந்து கொண்டிருக்கிறதென்று விசுவாசியுங்கள். 81அவர்கள் சீர்திருத்தத்தைக் குறித்து அதிகமாக பேசுகின்றனர், சுவிசேஷ சீர்திருத்தம் அவசியமென்பதை நான் ஆமோதிக்கிறேன். 'சீர்திருத்தம்' என்றால் ''சுத்திகரித்தல்“ என்று அர்த்தம். நமக்கு சுத்திகரிக்கப்படுதல் அவசியமென்று எண்ணுகிறேன். நமது அவிசுவாசத்தினின்று நம்மை சுத்திகரித்துக் கொண்டு, சுவிசேஷத்தை நாம் விசுவாசிப்பது அவசியம். அது உண்மை . அதிக சந்தேகங்கள், வியப்புகள், சீர்திருத்தங்கள் மனந்திரும்புங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல கிரேக்கவார்த்தை ”சீர்திருந்துங்கள்“ என்னும் அர்த்தங்கொண்டதாயுள்ளது.சீர்திருத்தம் என்றால் ''சுத்திகரித்தல்” என்று அர்த்தம். முன்காலத்திலிருந்தது போன்று, சுவிசேஷத்தை அதன் வல்லமையோடும் கிரியைகளோடும் விசுவாசியுங்கள். இந்த அடையாளங்கள் இவர்களைத் தொடரும் . அவர்கள் “அது அந்த காலத்துக்கு மாத்திரமே'' என்கின்றனர். அவரோ, ''உலகத்தின் முடிவு பரியந்தம்“ என்றார். யாராவது ஒருவர் கூறினது சரியாயிருக்க வேண்டும். அவிசுவாசியான ஒருவன் அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே என்கிறான். ஆனால் இயேசுவோ, ''உலகத்தின் முடிவுபரியந்தம்” என்கிறார். நான் இயேசுவின் வார்த்தை உண்மையென்று ஏற்றுக்கொள்கிறேன். 82தேவன் தமது பிள்ளைகள் அவிசுவாசத்தினின்றும் அவிசுவாசிகளினின்றும் பிரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். உங்களில் அநேகர் இந்த தவறைச் செய்கின்றீர்கள். சில நேரங்களில் உங்கள் பிள்ளைகளை ஆஸ்வால்டுடன் போகவிடகின்றீர்கள். பாருங்கள்? நான் வித்தியாசமாக இருக்க வேண்டும். அல்லது அகந்தையுள்ளவனாகவோ, மூடபக்தி வைராக்கியம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ இதை கூறவில்லை. நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. ஆனால் நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இரவு நேரத்தில் உங்கள் மகள் யாருடன் செல்கின்றாள் என்பதைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். பாருங்கள்? ஒருக்கால் அவளை நீங்கள் சபைக்கு கூட்டிச் சென்று தேவபக்தியுள்ளவளாய் வளர்த்திருக்கலாம். அவள் ஆஸ்வால்டுடனோ அல்லது வேறு யாருடனோ செல்லும் போது முதலாவதாக நிகழ்வது... அவன் ஒரு நாத்தீகனாகவோ அல்லது அவிசுவாசியாகவோ இருக்க நேரிட்டால், அவளுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அவன் யாரென்று உங்களுக்குத் தெரியாது. பார்த்தீர்களா? பிறகு அவன் அவளை மணந்து கொள்வான். உங்கள் பேரப்பிள்ளைகளின் நிலையென்னவென்று யோசித்துப் பாருங்கள். ஜாக்கிரதையாயிருங்கள். தேவன் தமது ஜனங்கள் அவிசுவாசிகளை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். 83நீங்கள் யாத்திராகமம் 4:12 ஐப் படித்து தேவன் இஸ்ரவேலரிடம் என்ன கூறினாரென்று பாருங்கள்; “நீ அந்த தேசத்தில் போய் சேரும்போது அங்குள்ள எல்லாவற்றையும் அகற்றி சுத்திகரித்து விடு. அவைகளுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதே'' யோசுவா 23:12ம் கூட. யோசுவா என்ன சொன்னான் என்று கவனியுங்கள்: ”தேவன் உங்களை இந்த நல்ல தேசத்துக்கு அழைத்து வந்தார்“ - சபைக்கு அவர் செய்தது போல். ”அவர் உங்களை இந்த நல்ல தேசத்துக்கு அழைத்து வந்தார். அதை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?'' அவர்கள், ''ஆமென், நாங்கள் அனுபவிக்கிறோம்'' என்றனர். அவன், இங்கு சில மீதியாயிருக்கிற ஜாதிகள் - அவிசுவாசிகள் - உள்ளனர். அவர்களுடன் சம்பந்தங் கலவ வேண்டாம். அவர்களுடன் போக வேண்டாம் என்றான்.சகோதரியே, அப்படி செய்யாதே. அந்த பையன் நட்பு குடிக்காக (friendly drink) உன்னை எங்காவது மதுவிற்கும் ஸ்தலத்திற்கு கொண்டு சென்றால், அவனை விட்டு விலகு! பையன்களே, பெண் அப்படி செய்வாளானால் நீங்களும் அவ்வாறே அவளை விட்டு விலகுங்கள்! நீங்கள், சகோ. பிரன்ஹாம் ஒரு கிழப்பைத்தியக்காரன் என்று கூறுவீர்கள். ஆனால் இந்த நாட்களில் ஒன்றில் நீங்கள் கண்டு கொள்வீர்கள். நான் முன்பு சென்ற பாதையில் தான் நீங்கள் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறீர்கள். நான் கூறுவது சரியென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஆம், ஐயா. 84பாவ அறிக்கை செய்யும் அறைகளில் வாலிபப் பெண்கள் அவமானப்பட்டு வருவதை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன், அந்த இழுக்கான பெயர் அவள் மரிக்கும் வரைக்கும் அவளுடன் தங்கியிருக்கும் - அவள் கூறினவை. ஒரு காலத்தில் ஒரு அருமையான கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவள், அந்த பையனுடன் சென்றபோது, இதுதான் நடந்தது. அவன் மிகவும் அழகாக இருந்தான், அவனை விட்டு அவளுக்கு விலகியிருக்க முடியவில்லை - அப்படிப்பட்டவை. முதலாவதாக, அவன் சிகரெட்டு புகைப்பவனாயிருந்தான். அவனுடைய பாக்கெட்டில் மது நிறைந்த குப்பி இருந்தது. அவர்கள் குடிக்கத் தொடங்கினார்கள், பிறகு இது தான் சம்பவித்தது. பாருங்கள்? அவள் அவமானம் தாங்காமல் இருக்கிறாள். ஓ, அது மிகவும் பரிதாபகரமானது. இதை இரு சாராரிலும் நீங்கள் காணலாம். எனவே விலகி நில்லுங்கள், பிரிந்து வாருங்கள் எல்லோரிடமும் நல்லவர்களாயும் தயவாயும் நடந்து கொள்ளுங்கள், ஆனால் அவர்களுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதீர்கள். அதை விட்டு விலகுங்கள். ஆம் ஐயா. 85நண்பர்களே, யுகங்களின் மாற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சபை தலைவர்கள் தாம் ஜனங்களை குழப்பிவிட்டனர், ஜனங்கள் அவ்வளவாக அல்ல, சுவிசேஷம் மாத்திரம் அதற்கு உரியதான பிரசங்க பீடத்தில் நிலைத்திருக்குமானால் நான் பெத்தனி கல்லூரியிலுள்ள லூத்தரன்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ''சகோ. பிரன்ஹாமே எங்களுடன் என்ன உள்ளது என்று நினைக்கிறீர்?“ என்று கேட்டார். நான், ''நல்லது, இதெல்லாம் உள்ளது'' என்று கூறினேன். அவர், ''நீங்கள் குறிப்பிடும் பெந்தெகொஸ்தேயினருக்கும் லூத்தரன்களாகிய எங்களுக்குமுள்ள வேறுபாடு என்ன?“ என்று கேட்டார். நான், “பெந்தெகொஸ்தே சபை என்பது முன்னேற்றமடைந்த லூத்தரன் சபை. அது முற்றிலும் உண்மை. நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பீர்களானால், நீங்களும் பெந்தெகொஸ்தேயினராக ஆகியிருப்பீர்கள்” என்றேன். இன்று காலை ஒருவர், ''எல்லா சபைகளுமே - முதலாவது தொடங்கின மார்க்கங்கள் அனைத்துமே - எல்லா கிறிஸ்தவர்களுமே உண்மையில் ரோமாபுரியிலிருந்து தோன்றினவர் என்று கூறின கருத்தையே நாம் கொண்டிருக்கிறோம். அதை யாராகிலும் எனக்கு நிரூபிக்க வேண்டுகிறேன். எல்லா ஸ்தாபனங்களும் ரோமாபுரியிலிருந்து தோன்றின என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் கிறிஸ்தவர்களோ எருசலேமில் துவங்கினர். 86எனவே கத்தோலிக்க குருக்களாட்சி, நாமனைவரும் கிறிஸ்தவ ஸ்தாபனங்களின் தாயிடம் திரும்ப வேண்டுமென்று கூறுமானால், ஸ்தாபனங்கள் அவ்வாறு திரும்ப வேண்டுமென்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாமோ பெந்தெகொஸ்தேவுக்கு திரும்பச் சென்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோம். அது ரோமாபுரியிலிருந்து வரவில்லை. அது பெந்தெகொஸ்தே நாளன்று ஆரம்பிக்கப்பட்டது. நிச்சயமாக அவர்களுடைய கொள்கைகளின் அடிப்படையில், அல்ல, அதனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் அடிப்படையில், அதை தான் நான் விலியுறுத்த முயல்கிறேன். நாம் திரும்பிச் செல்லவேண்டுமானால், துவக்கத்திற்கு நாம் திரும்பிச் செல்வோம். ஸ்தாபனத்திற்கு நாம் திரும்பிச் செல்லக் கூடாது. அப்படி செய்வீர்களானால், நீங்கள் ரோமாபுரிக்கு திரும்பிச் செல்கிறவர்களாயிருப்பீர்கள். ஏனெனில் அங்கு தான் முதலாம் ஸ்தாபனம் நிறுவப்பட்டது. அது எல்லா ஸ்தாபனங்களுக்கும் தாய். அவள் வேசி என்றும், அவளுடைய குமாரத்திகளாகிய வேசிகளுக்கெல்லாம் தாயென்றும் வேதம் வெளிப்படுத்தல் 17ல் கூறுகின்றது. பாருங்கள்? வேதம் அப்படித்தான் கூறுகின்றது. ரோமன் கத்தோலிக்க சபை வேசியென்றும். அவளுடைய பிராடெஸ்டெண்டு குமாரத்திகள் அவளுடன் கூட வேசிகளாயுள்ளனர் என்றும் இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். அவர், ''என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உட்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளு (வெளி 18:4, 2 கொரி. 6:18) மாயிருப்பீர்கள்“ என்றார் பாருங்கள்? பார்த்தீர்களா?'' தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள்''. (2 தீமோ . 3:5) 87விலையேறப் பெற்ற மெதோடிஸ்டுகளே, நீங்கள் எவ்வளவாக தேவனுடைய வல்லமையை உங்கள் மத்தியில் பெற்றிருந்தீர்கள், நான் சென்று நின்றேன்... நான் லண்டனுக்கு ஜார்ஜ் அரசனுக்காக ஜெபிக்க சென்றிருக்கையில் ஜான் வெஸ்லியின் அங்கியை அணிந்தேன். அவர்கள் என்னை வெஸ்லி ஆலயத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜான் வெஸ்லி ஒவ்வொரு அதிகாலையிலும் ஐந்து மணிக்கு, ஜனங்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பாக, ஆயிரத்து ஐந்நூறு பேர்களுக்கு பிரசங்கம் செய்வது வழக்கம். சேவல் சண்டையிடும் இடத்தை அவர் பிரசங்க ஸ்தலமாக மாற்றின அந்த இடத்தில் அவர் அமர்ந்த ஆசனத்தில் நான் அமர்ந்தேன். அவர் பிரசங்க பீடத்தில் நான் ஏறினேன். அவர் பரலோகத்துக்கு சென்ற அந்த அறையில் நான் ஜெபம் செய்தேன். “ஓ, மெதோடிஸ்டு சபை என்ன செய்துள்ளது என்று ஜான் மாத்திரம் அறிய முடிந்தால் அவர் தமது கல்லறையில் நிம்மதியின்றி புரளுவார்” என்று எண்ணினேன். அவர் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தார். அவர் மூலம் மகத்தான அடையாளங்கள் நிகழ்ந்தன. ஜான் வெஸ்லி நின்ற ஆலயத்தில் நான் நின்றேன், அங்கு ஒரு மரம் உள்ளது. அவர் அந்த நாளில் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, இங்கிலாந்தின் உயர்வான சபையாகிய ஆங்கிலிகன் சபை அங்கு ஒரு கூட்டம் அங்கத்தினர் அங்கு சென்று நரிகளையும் ஒரு கூட்டம் வேட்டை நாய்களையும் அவிழ்த்து விட்டு ஜான் பேசுவதைக் கேட்க குழுமியிருந்தோரை சிதறடித்தனர். சிறிய உருவம் படைத்த ஜான் தன் வாழ்க்கையில் நூற்று பத்து பவுண்டு எடைக்கு மேல் சென்றதில்லை. அவர் திரும்பி தன் விரல்களை அப்படி செய்தவனுக்கு முன் நீட்டி “ஓ, மாய்மாலக்காரனே! நீ உனக்காக ஜெபிக்கும்படி என்னை கூப்பிடுவதற்கு முன்பு. சூரியன் அஸ்தமிக்காது என்றார். அன்று மாலை, அவன் உடல் முழுவதும் தசை இழுப்பு (cramps) ஏற்பட்டு ஜான் வந்து தனக்காக ஜெபிக்க வேண்டுமென்று கதறி , மரித்துப் போனான். பாருங்கள்? ஓ, மெ தோடிஸ்டுகளாகிய நீங்கள் அப்படிப்பட்ட மெதோடிஸ்டுகளாக இருப்பீர்களானால், நீங்கள் பெந்தெகொஸ்தெயினராய் இருப்பீர்கள். அது உண்மை. 88பாப்டிஸ்டுகளாகிய உங்களைக் குறித்தென்ன? நீங்கள் சபையில் சில நிமிடங்கள் கழிக்கின்றீர்கள். போதகர் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசினால், அவரை வேலை நீக்கம் செய்யப் பார்க்கிறீர்கள். பாப்டிஸ்டு சபையின் ஸ்தாபகரான ஜான் ஸ்மித் சில நேரங்களில் ஜனங்களின் பாவங்களுக்காக இரவு முழுவதும் கண்ணீரோடு ஜெபம் செய்த காரணத்தால், அவருடைய கண்கள் வீங்கி மூடிக்கொண்டன. அவருடைய மனைவி அவரைக் கைபிடித்து உணவு மேசைக்கு அழைத்து சென்று, காலை உணவை கரண்டியால் ஊட்டுவார்களாம். ஆனால் உங்களுக்கோ பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஜெபம் செய்ய முடியவில்லை. என்ன காரணம்? பாருங்கள், நீங்கள் பாரம்பரியங்களை அதனுடன் கலந்து விட்டீர்கள். ஆனால் செய்தியோ இப்பொழுதும் முன் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்தனர். அது நின்ற இடத்தில் அவர்களும் நின்றனர். அது புறப்பட்டு சென்றபோது, அவர்களும் புறப்பட்டனர். அக்கினி ஸ்தம்பம் சென்று கொண்டிருக்கிறது. ஆம். 89சபை தலைவர்கள் தாம் இவ்வாறு செய்ததாக நாம் காண்கிறோம். தலைவர்கள் தாம் எப்பொழுதுமே பல ஜாதியானவர்களை நடத்துபவர்கள். வேத காலத்தில், மோசேயின் நியாயப் பிரமாண யுகத்தில், தாத்தானைப் பாருங்கள். அவன் தான் பல ஜாதியான ஜனங்களை (mixed multitude) நடத்தினான். இல்லை, கோரா அப்படி செய்தான். தேவன் தமது தீர்க்கதரிசியாகிய மோசேயை எழுப்பினார். அவனிடம் தேவனுடைய வார்த்தை இருந்தது. வனாந்திரத்தில் அவனுக்கு இருபத்தைந்து லட்சம் பேர் இருந்தனர். யெத்ரோ அவனிடம், ''மோசே, அது உன்னை கொன்றுவிடும். நீ கொண்டுள்ள பாரம் மிகவும் பெரியது என்றான், தேவன் அவனுடைய ஆவியில் ஒரு பங்கை எடுத்து, அதை எழுபது மூப்பர்களின் மேல் வைத்தார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அது மோசேயை சிறிதேனும் பலவீனமடையச் செய்யவில்லை. எழுபது மூப்பர்கள் இருந்த போதிலும், மோசே கூறினது மாத்திரமே முடிவாயிருந்தது. ஏனெனில் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருந்தான். 90நீங்கள் ஒரு கூட்டம் மனிதரின் தலைமையில் செல்ல முடியாது. எப்பொழுதாவது அப்படி சென்றதாக காண்பிக்கும்படி சவால் விடுகிறேன். தேவன் எப்பொழுதுமே ஒரு கூட்டம் மனிதரை உபயோகித்ததில்லை. அவர் ஒரு மனிதனையே உபயோகிக்கிறார். அது முற்றிலும் உண்மை. இப்பொழுது கவனியுங்கள், ஒவ்வொரு யுகத்தின் போதும், துவக்கத்திலிருந்து இதுவரை, அவ்வாறே இருந்து வந்துள்ளது. மோசே அங்கு நின்று கொண்டிருந்தான். கோரா என்ன சொன்னான் தெரியுமா? “மோசே, தான் ஒருவன் மாத்திரமே பிரசங்கிக்க முடியும் என்பது போல் நடந்து கொள்கிறான், அவன் ஒருவனிடம் மாத்திரமே செய்தி உள்ளது போல் காண்பித்துக் கொள்கிறான். ஓ, அந்த அக்கினி ஸ்தம்பம் அவன் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதென்றும், அந்த ஒளி அவன் மேல் உள்ளதென்றும் நாங்கள் அறிவோம். அது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவன் ஒருவனிடம் மாத்திரமே செய்தி உள்ளது போல் நடந்து கொள்கிறானே” என்றான். அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. அவன் ஜனங்களைத் திருத்த முயன்றான். அநேக கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஏதாவது ஒன்றுக்கு மாத்திரமே நீங்கள் செவி கொடுக்க முடியும். என்ன நேர்ந்தது? தேவன் மோசேயிடம், “அவனை விட்டுப் பிரிந்து போ. அவனையும் அவன் சபையோரையும் பூமியைப் பிளந்து விழுங்கப் போகின்றேன்” என்றார். பூமி பிளந்து, அக்கினி வெளி வந்தது. அவர்கள் உள்ளே சென்றனர். பாருங்கள்? 91பல ஜாதிகளின் தலைவர்களே மக்களிடையே தொந்தரவு உண்டாக்குகின்றனர். இல்லையெனில், இன்று நாம் இந்நகரத்துக்கு வருவோமானால், எல்லா சபைகளும் எல்லா சபையோரும் ஒன்று கூட முடியும். இந்த இடத்திலுள்ள ஒவ்வொரு மது விற்கும் கடையும் மூடப்படும். இது அவ்வளவாக உலர்ந்து போய் மது விற்பவன் துப்புவதற்காக உமிழ்நீரை பெறுவதற்கு அரை மணி நேரம் சிரமப்பட வேண்டும். பாருங்கள். அது உலர்ந்து போகும். ஓ, என்னை மன்னிக்கவும், நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்றால், நாம் அனைவரும் சிதறியுள்ளோம். அதற்கு தலைவர்களே காரணம். தேவன் வந்து ஏதாவதொன்றைச் செய்யும் போது, இச்சிறு குழுக்களின் தலைவர்கள் தாங்கள் இழந்து விடுவார்களே என்று அஞ்சி, தேவனுடைய செய்தியை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, தங்கள் சபையோர் அங்கு செல்லாத படிக்கு அவர்களை இழுத்துவிடுகின்றனர். நோவாவின் காலத்திலும் தலைவர்களே அதற்கு காரணம் மோசேயின் காலத்திலும் தலைவர்களே காரணம் இயேசுவின் நாட்களிலும் தலைவர்களே காரணம். இன்றைய பரிசுத்த ஆவியின் நாட்களிலும் தலைவர்களே காரணம். பல ஜாதியான ஜனங்கள் அவர்கள் ''ஸ்திரீகள் அதை செய்து கொண்டு போகட்டும். அவர்களைப் பார்த்து நீர் ஏன் சத்தமிடுகின்றீர்?“ என்கின்றனர். 92நான் இங்கு உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன். ஒருவர் என்னிடம் இவ்வாறு கூறினார். நான் எப்பொழுதுமே சகோதரிகள் வார்த்தையுடன் இணையும்படி முயன்று வருகிறேன். பாருங்கள், அவர்கள் தான் இலக்காக இருக்கின்றனர். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் இலக்காக இருந்து வந்துள்ளனர். ஏதேன் தோட்டத்தில் சாத்தான் அவர்களை உபயோகித்தான். ஒவ்வொரு முறையும், அவன் அவர்களையே உபயோகித்து வருகிறான். வேதம் கடைசி நாட்களில் அமெரிக்காவையும் அதன் பெண்களின் நிலையையும் சுட்டிக் காட்டுவதனால் நான் அந்த நிலையை பலமாக கடிந்து கொள்கிறேன். ஒருவர் என்னிடம் ''சகோ. பிரன்ஹாமே, ஜனங்கள் உங்களை தீர்க்கதரிசியாக மதிக்கின்றனர்'' என்றார். ''நான் இல்லை“, என்றேன். அவர், “ஆனால் அவர்கள் அப்படி உங்களை மதிக்கின்றனர்”. ஆவிக்குரிய வரங்களைப் பெறுதல் எப்படியென்று நீங்கள் ஏன் ஜனங்களுக்கு கற்பிக்கக் கூடாது? அப்படிப்பட்டவைகளை அவர்களுக்கு கற்பியுங்கள்... தேவன் உம்முடன் ஈடுபடுகின்றார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக அவர்களுக்கு இவைகளை ஏன் கற்பித்து தரக்கூடாது? என்றார். நான், “அவர்களுக்கு முப்பத்தொன்று ஆண்டுகளாக நான் போதித்து வருகிறேன்... அவர்களுக்கு மொழியின் எழுத்துக்களே தெரியாதிருக்கும் போது அவர்களுக்கு எப்படி கணிதம் கற்றுத் தர முடியும்? அவர்கள் ஏன் பெண்கள் போல் நடந்து கொள்ளுகிறதில்லை? அவர்கள் ஏன் தாங்கள் செய்வதையே செய்து வருகின்றனர்? அவர்கள் மாம்சமான காரியங்களையே விசுவாசியாதிருக்கும் போது, அவர்களுக்கு எப்படி ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுத்தர முடியும்?'' என்று விடையளித்தேன், சபையானது அந்த ஆவிக்குரிய ஆதிக்கத்தில் வரட்டும், அப்பொழுது தேவனுடைய வரங்களைப் பெறுவது எப்படியென்றும், அவைகளை உபயோகிப்பது எப்படியென்றும் அவர்களுக்கு கற்பித்துத் தரமுடியும். அவர்களுடைய இருதயம் சரியாகி அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தப்படும் வரைக்கும், அது வருவதற்கு பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கமாட்டார். 93தேவன் ஒரு பெரிய அழுத்தத்தை (Pressure) போன்று அங்கு நின்று கொண்டிருக்கிறார். அநேகர் இருக்கின்றனரே என்று நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் தேவனை வற்றச்செய்ய (exhaust) முடியாது. இவ்வளவு நீளமான ஒரு சுண்டெலி எகிப்தின் தானியக் களஞ்சியத்துக்குள் நுழைந்து, ''நான் ஒரு நாளைக்கு ஒரு தானியம் மாத்திரமே சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் அடுத்த அறுவடைக்கு முன்பு எல்லாமே தீர்ந்துவிடும்“ என்று கூறமுடியுமா? இவ்வளவு நீளமான ஒரு, சிறு மீன் கடலில் நீந்தி ''நான் தண்ணீரை கொஞ்சமாக குடிப்பது நல்லது. இல்லையென்றால் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்'' என்று கூற முடியுமா? ஓ, என்னே, தேவன் தமது ஜனங்களுக்கு காண்பிக்கும் நன்மைகளையும் இரக்கத்தையும் வற்றச் செய்வதற்கு அது ஒப்பாயிருக்கும். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் நெருக்குகிறார். இப்பூமியின் கடல்களிலுள்ள தண்ணீர் அனைத்தையும் ஒரு நான்கு அடி குழாயில் குவித்து வைக்க உங்களால் முடியுமா? அப்பொழுது அதனடியில் அழுத்தம் ஏற்பட்டு, குழாயில் ஒரு சிறு கீறல் உண்டாகி, அதன் வழியாக தண்ணீர் ஒழுகும். பரிசுத்த ஆவியின் அழுத்தமும் ஒவ்வொருவர் மேலும் வருவது அதற்கொப்பாயுள்ளது. 94ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள். அவர்கள் தேவனைக் காட்டிலும் கோட்பாடுகளையும் மற்றவைகளையும் அதிகமாக நேசிக்கின்றனர்... நீங்கள் உலகத்தின் காரியங்களை விட்டுவிலகி, தேவனை விசுவாசிக்க வேண்டும், இதை நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒன்றன் பின் ஒன்றாக அதை கண்டு வருகின்றீர்கள். ஜோசப் ஒரு முறை ''அது தவறுவதேயில்லை. அது தேவனாயிருக்க வேண்டும்,'' என்றார். பாருங்கள்? அது இந்நாளுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. நானல்ல, நான் தேவனுடைய வாக்குத்தத்தம் அல்ல. நான் ஒரு மனிதன். நான் இங்குள்ள பரிசுத்த ஆவியை குறிப்பிடுகின்றேன். அதுவே இந்நாளுக்கான வாக்குத்தத்தமாயுள்ளது. ''எந்த இடத்திலும், எவருமே''. 95தலைவர்களே இதற்கு காரணமென்று நாம் பார்க்கிறோம். உதாரணமாக நாம் பிலேயாமை எடுத்துக் கொள்வோம். அவன் ஜனங்களுக்கு தனது உபதேசத்தைப் போதித்தான். அவன், ''பாருங்கள், நாம் அனைவருமே விசுவாசிகள். மோவாபியராகிய நீங்கள் லோத்தின் புத்திரர். நாம் எல்லோருமே ஒன்று தான்'' என்று கூறி அவர்களிடையே விவாகம் நடக்கும்படி செய்து, அவர்களைக் கலந்தான். அந்த அழகான மோவாபிய பெண்கள் தேவகுமாரரை அணுகி, ''எல்லாமே ஒன்றுதான். தேவன் எல்லா ஜாதிகளுக்கும் தேவனாயிருக்கிறார். இதெல்லாம் பரவாயில்லை.'' என்றனர். அவர்களை அவன் விவாகத்தின் மூலம் இணைத்தான். ஆனால் தேவனோ பிரிவினை கோட்டை வரைந்து. அவர்களுடைய வீடுகளையும் எல்லாவற்றையும் விட்டு வரும்படி செய்திருந்தார். அது என்ன? அந்த காரியத்தை பாருங்கள் ஜலப்பிரளயத்துக்கு முன்பு நடந்த அதே காரியம் “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களை இச்சித்து, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்''. பாருங்கள்? அதே காரியம் மறுபடியும் அங்கு சம்பவித்தது. இப்பொழுதும் அதே காரியம்! மறுபடியும் அதே காரியம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த சந்ததியில் என்ன நிகழுமென்று ஒவ்வொரு சந்ததியும் அறிவிக்கிறது. அது இதோ உள்ளது. அதை நாம் காண்கிறோம். அது அதுவே என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் முன்பிருந்தது இப்பொழுது நடக்கிறது என்று வேதம் எடுத்துரைக்கிறது. சரி. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் இவையனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். 96ஆனால் இன்றைய சபையின் கணக்கோ அங்கத்தினர்களின் எண்ணிக்கை மாத்திரமே. அது மாத்திரமே அவர்களுக்கு தேவை. 1944ல் பாப்டிஸ்டு சபையின் சுலோகம், ''நாங்கள் 1944ல் பத்து லட்சம் அதிகம் அங்கத்தினர்களைப் பெறுவோம்“ என்பதே என்று நாமெல்லாரும் அறிவோம், நமது விலையேறப் பெற்ற அருமையான சகோதரன் பில்லிகிரகாமை நாமறிவோம், அவருடைய ஸ்தானத்தை நாம் வேதத்தில் காண்கிறோம். அவர் எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்று, ஆனால் அது எப்பொழுதுமே ”தீர்மானங்கள், இத்தனை பேர் தீர்மானம் செய்தனர்“ என்பதாய் அமைந்துள்ளது. ஸ்தாபனங்கள், அது மாத்திரமே அவர்களுக்கு அவசியம். பாருங்கள்? இயேசுவின் நாட்களிலும் அது அவ்வாறே இருந்தது. அவர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் குருடர்கள் அவ்வளவு தான். அவர்கள் சத்தியத்துக்கு குருடாயிருந்தனர், இயேசு அவர்களைப் பார்த்து எவ்வாறு கூறினார். குருடரான பரிசேயரே, சதுசேயரே, நீங்கள் என்னவெல்லாம் செய்கின்றீர்கள் என்று. “வேதபாரகரே, பரிசேயரே, நீங்கள் குருடாயிருக்கின்றீர்கள்” என்றார். அவர், ''நீங்கள் பாவிகள்“ என்று கூறவில்லை, அவர்கள் பாவிகள், ஆனால் நாம் பாவமென்று அழைப்பது. விபச்சாரம் செய்தல், புகைபிடித்தல், பொய் சொல்லுதல், களவுசெய்தல் போன்றவைகளை நாம் பாவம் என்றழைக்கிறோம். இவை பாவம் அல்ல. இவை அவிசுவாசத்தின் தன்மைகள். “விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத் தீர்ப்பு அடைந்து விட்டான்” என்று வேதம் கூறுகின்றது. வார்த்தையில் அவிசுவாசம் கொள்வதே பாவம். 97அந்த மனிதரைப் பாருங்கள். அவர்கள் பரிசுத்தமுள்ளவர்கள். நன்னடத்தை விஷயத்தில் நீங்கள் விரலை சுட்டிக் காட்டி அவர்களைக் குற்றப்படுத்த முடியாது. அவர்களுடைய பாட்டனார், முப்பாட்டனார், அவருக்கும் பாட்டனார் மூதாதையர் அனைவருமே ஆசாரியர்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தையும் தங்கள் பிதாக்களின் பாரம்பரியங்களையும் சந்ததிதோறும் பிழையின்றி கைக்கொண்டு வந்தனர். அவர்களிடம் ஒரு சிறு களங்கமும் காணப்படவில்லை. அப்படி காணப்பட்டிருந்தால் அவர்களைக் கல்லெறிந்து கொன்றிருப்பார்கள். நல்லவர்கள். ஆனால் இயேசுவோ, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்'' என்றார். (யோவான் 8:44) ஏன்? ஏனெனில் அவர்கள் செய்தியை வார்த்தையை காணமுடியவில்லை. அவர் அங்கிருந்தார். அவர்களோ, “இந்த மனிதன் நமது சபைகளை உடைத்தெறியப் பார்க்கின்றார்'' என்றார்கள். அவர், “குருடரான பரிசேயரே, சதுசேயரே'' என்றார். இதைத்தான் அவர் கூறினார். ''ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும் படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றிச் திரிகிறீர்கள். ஒரு அங்கத்தினனைப் பெற நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் அவனை உங்கள் ஸ்தாபனத்துக்குள் கொண்டு வந்த பிறகு, அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாகிவிடுகிறான்'' என்றார் (மத். 23:15). அப்படி தான் இயேசு கூறினார். 98ஏதாகிலும் அநீதியாக, ஏதாகிலும் தேவ பக்தியற்றதாயிருக்குமென்றால், அது தன்னை நல்லவனென்று கருதி, அவனுடைய கண்ணாடியின் மூலமேயன்றி வேறெதன் மூலமாகவும் காணமுடியாத பாசி படிந்த சபை அங்கத்தினனே. நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை. ஆம், நானும் கூடத்தான். அது முற்றிலும் உண்மை . ''நீங்கள் தொடங்கினதைக் காட்டிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாகிவிடுவீர்கள்' என்று இயேசு கூறினார். நாம் சபைகளை எடுத்துக் கொள்வோமானால் அந்த சபையில் எத்தனை அங்கத்தினர்கள் இருந்தாலும் கவலையில்லை. அவர்கள் குதிரைப் பந்தயங்களுக்கு சென்று பந்தயம் கட்டுதலையும், ஸ்திரீகள் குட்டைகால் சட்டைகள் அணிந்து தெருக்களில் நடந்து சென்று பாடற்குழுவில் பாடுவதையும் காணும்போது, அதுவே ஒரு பாவிக்கு மிகப்பெரிய இடறலாக அமைந்துள்ளது. நிச்சயமாக. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் நாணயமான வாழ்க்கை நடத்தி, வித்தியாசமான நபர்களாயிருப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அது உதாரணமாக அமைவதற்கு பதிலாக இடறலாக அமைந்துள்ளது. மாய்மாலம். நீங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் அது பத்து மடங்கு மோசமானது. அதைக்காட்டிலும் நீங்கள் முன்பிருந்தவாறே இருப்பது நலமாயிருக்கும். 99ஒரு மனிதன் வந்து, “என்னைக் காட்டிலும் அவர்கள் வித்தியாசமான வாழ்க்கை நடத்தவில்லை, நிச்சயமாக இல்லை, நானும் அவர்களைப் போலவே நல்லவனாக இருக்கிறேன்'' என்று கூறுவானானால், அது இடறல். அது முற்றிலும் உண்மை. ஒரு பாவி வந்து, ''இயேசு இதை இங்கு கூறியுள்ளர்” என்பானானால். “ஆ, அதுவல்ல அதன் அர்த்தம். அவர் அந்த அர்த்தத்தில் அதை கூறவில்லை. அது வேறொரு காலத்துக்குரியது” என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஓ, அவிசுவாசியோ! பாருங்கள்? என்ன நேர்ந்தது? நீ இடறல் கல்லை அந்த மனிதனின் பாதையில் போடுகின்றாய். 100இயேசு - அல்ல, தாவீது - சங்கீதத்தில், ''பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே, பாவிகளுடைய வழியில் நில்லாதே'' என்கிறான். (சங்1:1) பாருங்கள்? அவ்விதமாக உன்னை பாவிகளுடைய வழியில் நிறுத்திக் கொள்ளாதே. சரியாக நடந்து கொள்பவர்களைப் பார்த்து, அது தேவபக்தியின் வேஷம் என்று பரிகாசம் செய்யும் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உடகாராதே. ஆனால் இரவும் பகலும் அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, அவருடைய வேதத்தில் தியானமாயிருப்பவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் அது அப்படியே நடக்கும். அப்படிப்பட்ட ஒரு சபைதான் தேவனுக்குத் தேவை. அவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடர்களாயிருக்கின்றனர். இந்த கடைசி நாட்களில் பரியாசக்காரர் தோன்றுகின்றனர். 101முடிவுகால சுவிசேஷகனின் செய்தி மல்கியா 4லிருந்து இருக்கும். அது திரும்ப அளிக்கும் ஒன்று. செய்தியும் செய்தியாளனுமாகிய இரண்டும் விசுவாசத்தை திரும்ப அளிக்கும் ஒன்றாக அமைந்திருக்கும் யூதாவின் புத்தகத்தில் யூதா, கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ''பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது'' என்றான். (யூதா:3) பாருங்கள்? பாருங்கள்? பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியா, கடைசி நாட்களுக்கென்று இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தான்; ''இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், அழிவுகாலத்திற்கு சற்று முன்பு, பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். அது என்ன? அது போய்க் கொண்டிருக்கும் ஒரு செய்தி. கடைசி நாட்களின் செய்தியும் செய்தியாளனும். அது அவர்களைக் கோட்பாடுகளுக்கு கொண்டுவராமல், அவர்களை கோட்பாடுகளினின்று உலுக்கி, அவர்களை பிதாக்களின் -பெந்தெகொஸ்தே பிதாக்களின் மூல விசுவாசத்திற்கு மறுபடியும் கொண்டு வரும். அங்குதான் சபை கடைசி நாட்களில் இருக்க வேண்டும்- மோசேயின் பிதாக்களினிடத்திலல்ல, ஆனால் பெந்தெகொஸ்தே பிதாக்களினிடத்தில். 102மோசேயின் பிதாக்கள் மல்கியா 3, “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகக் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்” மத்தேயு 11:6ம் அதையே உரைக்கிறது. இயேசு யோவானைக் கண்ட போது அவ்வாறு சாட்சி கொடுக்கிறார். அவர், ''எதைப் பார்க்க அங்கு போனீர்கள் சிறந்த வண்ண ஆடைகளை தரித்த மனுஷனையோ? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. அப்படி உடை உடுத்தியுள்ளவர்கள் அரசர் மாளிகைகளில் அந்த பெரிய ஸ்தாபனங்களில் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து, வாலிபர்களுக்கு விவாகம் நடத்தி வைத்து, மரித்தோரை அடக்கம் பண்ணுதல் போன்றவைகளைச் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களே அங்குள்ளனர். நீங்கள் எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? “யோவான் அப்படிப்பட்டவன் இல்லை, இல்லை, இல்லை, அவர்கள் அவனுக்கு விரோதமாய் எழும்பின போது, அவன் அசையவேயில்லை” என்றார். அவர்கள், ''நீ அங்கு சென்றால் உனக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது“ என்றனர். அது யோவானுக்கு எவ்வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. என்னவாயினும் அவன் சென்றான். பாருங்கள்? அவர், “அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதியவாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்” என்றார். அது மல்கியா: 3. 103ஆனால் சபை காலத்திற்காக அவர் மல்கியா: 4ல், “அந்த நாளுக்கு முன்னே நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன்'' என்றார். அது யோவானாக இருக்க முடியாது. ஏனெனில் உலகம் சுட்டெரிக்கப்பட்டு, நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிக்கும் காலம் அல்ல அது இல்லை. அது இந்த காலத்தில்தான். ஒரு செய்தி புறப்பட்டு செல்லும். அது என்ன செய்யும்? அது கறைபட்டு அழுகி, புண்ணாயுள்ள சரீரமாகிய வெவ்வேறு ஸ்தாபனங்களிலுள்ள மக்களை ஜீவனுள்ள விசுவாசத்திற்கும் ஜீவனுள்ள தேவனிடத்திற்கும் திருப்பும். பல ஆண்டுகளாக இந்த செய்தி சென்று கொண்டிருக்கிறது. அது உண்மை. முடிவுகால சுவிசேஷம் விசுவாசத்தை திரும்ப அளிக்கும் பணியைச் செய்யும் என்னும் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கும் நேரம் வந்துவிட்டது. யோவேலும் அதையே கூறுகிறான். ''நான் பச்சை புழுக்கள் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” (யோவேல் 2:25) 104இங்கு கவனியுங்கள். அண்மையில் மணவாட்டி மரத்தைக் குறித்து நான் அளித்த செய்தி உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர்கள் எவ்வாறு இயேசுவைக் கொண்டு சென்றார்கள் என்று? அவர் ஒரு மரம். நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு அதன் காலத்தில் அதன் கனியைத் தரும். மிகவும் பரிபூரண மரமாக தாவீது கண்டவன் இவரே. அவர்கள் அவரை மனிதனால் உண்டாக்கப்பட்ட மரத்தில் தூக்கி கொலை செய்து, அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் அவர் என்ன செய்தார்? மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார், அவர் வேறு என்ன செய்தார்? அவர் மணவாட்டி மரம் ஒன்றை நாட்டினார் - ஆணும் பெண்ணுமாக ஏதேன் தோட்டத்தில் இருந்த இரண்டு மரங்களைப் போலவே. அவைகளில் ஒன்று ஜீவ விருட்சம், மற்றொன்று மரண விருட்சம், அவர் என்ன செய்தார்? அவர் மணவாட்டி மரத்தை மீட்க வந்தார், அவர் அதை கல்வாரியில் மீட்டுக் கொண்ட காரணத்தால், அதை நடுவதற்கு அவர் ஆயத்தமானார். ஓ, என்னே அதை கூறும்போது நான் பக்திவசப்படுகிறேன். இந்த மணவாட்டிமரம் ஏதேனில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் வார்த்தையை அவிசுவாசித்ததன் விளைவாக அங்கு விழுந்து போனாள். ஆனால் இப்பொழுது அவர், வார்த்தையை விசுவாசிக்கும் ஒரு மரத்தை திரும்ப அளிக்கப் போகின்றார். அது பெந்தெகொஸ்தே நாளன்று மூல உபதேசத்துடனும் மூல விசுவாசத்துடனும் தோன்றினது. அதன் பின்பு ரோமாபுரி என்ன செய்தது? அது ஒரு பட்டுப்புழுவையும் ஒரு முசுக்கட்டை பூச்சியையும் அனுப்பினது, அவை ஒவ்வொன்றும் கனிகள், இலைகள் போன்றவைகளைக் கீழ் வரைக்கும் பட்சித்தன. 105ஆனால் தீர்க்கதரிசி அதை கண்ட போது, அவன் “இந்த மரத்தை நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” என்றான். அது சீர்திருத்தக் காலத்தின் போது மீண்டும் வளரத் தொடங்கினது. ஆனால் அது என்ன செய்தது? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது, தேவன் பரி. யோவான் 14ல் கூறியபடி, அதன் கிளைகளை நறுக்கி, எல்லா ஸ்தாபனங்களையும் அதிலிருந்து வெட்டி அகற்றிவிட்டார். அதன் பிறகு அது வெஸ்லியின் காலத்திற்கு வந்தது. அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அவர் அவளை வெட்டி அகற்றினார். “ஆனால் நான் திரும்ப அளிப்பேன்” அது இப்பொழுதும் வளர்ந்து வருகிறது, அது என்ன செய்கின்றது? சாயங்கால நேரத்தில் ஒரு ஸ்தாபனமும் இராது. ஆனால் அதற்கு உச்சி ஒன்றிருக்கும். முதலில் பழம் எங்கு பழுக்கிறது? மர உச்சியில் தான். ஏன்? சூரிய வெளிச்சம் அங்கு படுகின்றது. சாயங்கால நேரத்தில், சாயங்கால மணவாட்டி மரத்துக்காக விதைகள் இப்பொழுது விதைக்கப்படுகின்றன. அப்பொழுது ஜீவவிருட்சம் மணவாட்டி மரத்தினிடம் திரும்பும் பார்த்தீர்களா? நடப்பட்ட மரத்தில் விளைந்த கனிகளை பழுக்கச் செய்யவும், மரத்துக்கு தண்ணீர் ஊற்றவும் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது. விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன. பாருங்கள்? சாயங்கால நேரம். எனவே சாயங்கால நேர சுவிசேஷகம் மல்கியா 4ன்படி மக்களின் விசுவாசத்தை பிதாக்களின் விசுவாசத்துக்குத் திருப்பும். ஆம், ஐயா! அந்த கட்டிடக் கற்களுக்கு! ஆமென். 106இன்றைய தலைவர்கள் “எண்ணிக்கை, எண்ணிக்கை” என்றே கூறுகின்றனர். இயேசு வாழ்ந்த அந்த காலத்திலும் அவர்கள் அதையே கூறினர். இயேசு “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவனை நீங்கள் உள்ளே கொண்டு வந்த பிறகு அவன் தொடங்கினதைக் காட்டிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாகி விடுகிறான்” என்றார். இன்று சபையில் ஒரு அங்கத்தினனைச் சேர்க்க அவர்கள் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து, தங்களால் இயன்ற அனைத்தும் செய்வார்கள். ஆனால் அவன் அங்கத்தினனான பிறகு, அவன் வெளியே இருந்ததைக் காட்டிலும் அதிக மோசமாகிவிடுகிறான். அவனை நீங்கள் ஒரு மாய்மாலக்காரனாக்கி, அவன் எல்லாவற்றையும் செய்ய அனுமதித்து, அவனும் வெளியே சென்று சுவிசேஷத்தை பரிகாசம் செய்து, ஏளனமாக சிரிக்கிறான். பாருங்கள். 107இன்றைய தலைவர்கள் எண்ணிக்கை, எண்ணிக்கை, எண்ணிக்கை'' என்கின்றனர். அவர்களுக்கு எண்ணிக்கை, தீர்மானம் ஆகியவை மாத்திரமே முக்கியம் வாய்ந்ததாய் காணப்படுகின்றது. “தீர்மானம்” என்பது இன்று பெரிய சொல்லாக அமைந்துள்ளது. ஒரு சபையைச் சேர்ந்து கொள்வதற்கு பதிலாக தேவனை சேவிக்க யாராகிலும் தீர்மானம் செய்வதை நான் விரும்புகிறேன். தீர்மானம் செய்து உள்ளே வந்து, புத்தகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய கூட்டம் ஜனங்களையே அவர்கள் அங்கு அனுப்புகின்றனர். “உன் பெயர் என்ன?'' ''ஜான் ஜோன்ஸ்''. ''கிறிஸ்துவை உன் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறாயா?'', “ஆம்'' சாத்தானும் அப்படியே விசுவாசிக்கிறான். அவனும் அதையே செய்கிறான். அவன் அப்படி செய்வதாக வேதம் கூறுகின்றது. அவன் விசுவாசித்து நடுங்குகின்றான், (யாக் 2:16) ஆம், ஐயா. 108ஆனால் நீங்கள் உண்மையாக விசுவாசித்தால் நடுங்கமாட்டீர்கள். நீங்கள் களிகூருவீர்கள். ஆமென். “அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவரும்''. ஒருவர் எனக்கு தொடர்ச்சியாக ”சகோ. பிரன்ஹாமே, முடிவு காலம் வருகிறதென்று கூறி, ஜனங்களை பயமுறுத்துகின்றீர்கள்“ என்று கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நான் உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன், சபையை பயமுறுத்துவதா? என்னே, கர்த்தருடைய வருகை, முடிவு காலம் என்பது மிகவும் மகிமையான ஒரு தருணம். அது இப்பொழுதே நிகழ்ந்தால் நலமாயிருக்கும். நிச்சயமாக. என் கர்த்தரை சந்திப்பதென்பது மிகவும் மகிமையான ஒரு காரியம். இந்த வயதான மாம்ச வஸ்திரத்தை நான் களைந்து, எழும்பி மேலே சென்று நித்திய பரிசைப் பெற்றுக் கொண்டு, ஒரு வாலிபனாக மாறி, என் கர்த்தரோடும் என் ஜனங்களோடும் நித்திய காலமாய் வாழுவேன். என்னே! பூச்சி அரிக்கக்கூடிய இந்த பழைய வீட்டில் இருந்து கொண்டு, இந்த பாவம், சோதனைகள் வேதனைகள் வலிகள் இவைகளினால் கஷ்டப்பட நான் விரும்பவில்லை. இவைகளை விட்டு சென்று நீதியின் கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது நான் இதுவரை கேட்டிராத மிகவும் மகிமையான ஒரு காரியம். அப்போஸ்தலனாகிய பவுல் கூறின் விதமாக, ”நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன், இது முதல்... விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்'' (2தீமோ . 4:7-8). அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும். அவர் வருகிறார் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. நிச்சயமாக. ஆம், ஐயா. 109ஆனால் இன்றைக்கோ அது “அங்கத்தினர்கள்” “தீர்மானங்கள்'' ''சபைக்கு இத்தனை அங்கத்தினர்களைக் கொண்டு வாருங்கள்” என்பதாய் உள்ளது. அது சாயங்கால நேரம் சுவிசேஷகம் அல்ல. நான் ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டு, என் இருதயத்திலிருந்து உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன், இன்னும் எனக்கு ஏழு எட்டு நிமிடங்கள் உள்ளன. என் இருதயத்திலிருந்து உங்களிடம் சற்று பேச விரும்புகிறேன். “தீர்மானங்கள், ஒரு சபையை சேர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் மெலோடிஸ்டு சபையை விட்டு பாப்டிஸ்டுகளாகிய எங்களை சேர்த்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் பாப்டிஸ்டு சபையை விட்டு மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லுத்தரன்கள் ஆகிய எங்களை சேர்ந்து கொள்ளுங்கள்” என்பதெல்லாம் உண்மையல்லவா? கத்தோலிக்கர் எல்லோரையும் சேர்த்துக் கொள்கின்றனர் “அங்கத்தினர்கள், அங்கத்தினர்கள், அங்கத்தினர்கள், தீர்மானங்கள், தீர்மானங்கள்” இவைகளே. 110கற்களை உருவமைக்க (shape) ஒரு கொத்தன் இல்லாமற் போனால், கற்களினால் என்ன பயன்? அறிக்கைகள், கற்கள், பேதுரு அவனுடைய அறிக்கையை செய்தபோது, இயேசு “பேதுருவாகிய நீ ஒரு சிறு கல்லாய் இருக்கிறாய்'' என்றார். அவனை தேவனுடைய குமாரனாக உருவமைக்க ஒரு கொத்தன் இல்லாற்போனால் அந்த கல்லினால் என்ன பயன்? நீங்கள் பாறை கற்களை குவித்து வைக்கிறீர்கள். அவ்வளவுதான். அது சரியா? அதனால் சிறிது நன்மையும் கிடையாது. பாருங்கள்? தண்ணீர் கற்களைக் குடையும் (யோபு14:19) பாருங்கள். அது உண்மை, அது ஜனங்கள். ஒருவனை தேவனுடைய வீட்டில் பொருத்துவதற்கென அவனை உருவமைக்க, கூர்மையான கருவியைக் கொண்ட ஒரு கொத்தன் இல்லாமற் போனால் அந்த கற்களினால் என்ன பயன்? உங்களை கேட்க விரும்புகிறேன். இந்த தீர்மானங்களினாலும் உங்கள் பெயரைப் புத்தகத்தில் பதிவு செய்வதனாலும் என்ன பயன்? உருவமைத்து இதை விட்டுவிட, அதை விட்டுவிடச் செய்து, அவர்களை சரிபடுத்தி தேவனுடைய வீட்டில் அவர்கள் பொருந்தும்படியான கிறிஸ்தவர்களாக அவர்களை ஆக்கி, அடையாளங்கள் அந்த விசுவாசிகளை தொடரச் செய்வதற்காக ஒரு கொத்தன் இல்லாமற்போனால், ஒரு சபையை சும்மா சேர்ந்து கொள்வதால் என்ன பயன்? கற்களை எடுத்து அவைகளை உருவமைப்பதே முடிவுகால சுவிசேஷகத்தின் பணி. பாருங்கள்? 111கற்களைக் குவியலாக குவித்தால், அந்த கற்களினால் என்ன பயன்? அவைகளைக் குவியலாக குவிப்பதற்கு பதிலாக அவை இருந்த இடத்திலேயே இருந்தால், அவை அங்கு உபயோகமாயிருக்க வகையுண்டு. பாருங்கள், அது உண்மை. கொத்தன் இல்லாமல் கற்களால் உபயோகமே இல்லை. இயேசு நற்பண்பு படைத்தோரை (Character) கணக்கில் கொள்கிறாரேயன்றி அங்கத்தினர்களை அல்ல. அது உங்களுக்குத் தெரியுமா? அவர் நற்பண்பு படைத்தோரை கணக்கில் எடுக்கிறார். தேவன் எப்பொழுதுமே ஒரு மனிதனை தமது கரத்தில் கொள்ள முயன்று வந்திருக்கிறார். அவருக்குத் தேவையெல்லாம் ஒரு மனிதனே. அவர் தமது கிரியைகளை அநேக ஆண்டுகளாக அவ்விதம் செய்து வருகிறார். சற்று யோசித்து பாருங்கள். நோவாவின் காலத்தில் அவரால் ஒரே ஒரு நீதிமானை மாத்திரமே காணமுடிந்தது. மோசேயின் காலத்திலும் அவர் ஒரு நீதிமானை மாத்திரமே கண்டார். சிம்சோனைப் பாருங்கள். பாருங்கள், நீங்கள் தேவனிடம் சமர்ப்பிப்பதை மாத்திரமே அவரால் உபயோகிக்க முடியும். சிம்சோன் பலசாலியாயிருந்தான். அவனுக்கு நிறைய பலம் இருந்தது. அவன் தன் பலத்தை தேவனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அவனுடைய இருதயத்தையோ அவன் கொடுக்கவில்லை, அவன் தெலீலாளுக்கு தன் இருதயத்தைக் கொடுத்தான். பாருங்கள்? இன்றைய மக்களும் அவ்வாறேயுள்ளனர். ஓ, சகோதரனே, அவர்கள் உதவி செய்து கடன்களைத் தீர்ப்பார்கள், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள், ஒருபெரிய ஸ்தாபனத்தைக் கட்டுவார்கள் ஆனால் இருதயத்தை கொடுக்கும் விஷயத்தில், அவர்கள் அப்படி செய்ய மறுக்கின்றனர். அது உண்மை. அதனால் என்ன பயன்... 112பேதுருவிடம் ஒரு பட்டயம் இருந்தது. அவன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை வெட்டினான். அப்படிப்பட்ட காரியங்களை அவன் செய்தான். ஆனால் உண்மையான கிறிஸ்தவ தைரியம் என்று வரும்போது, அவன் அதை பெற்றிருக்கவில்லை. அவன் பின் வாங்கிப் போய் அவரை மறுதலித்தான். அது சரியா? அவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன் காதை தன் பட்டயத்தால் வெட்டினான். நிச்சயமாக. பட்டயத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் நெருக்கமான நிலை ஏற்பட்டு, அவன் தேவனுடைய வார்த்தைக்கு உறுதியாய் நிற்க வேண்டிய நேரம் வந்தபோது அவனுக்கு தைரியமில்லை. அவன் இயேசுவை அறியவில்லையென்று மறுதலித்தான். இன்றைக்கும் அந்நிலை தான் உள்ளது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து பெரிய கட்டிடங்களைக் கட்ட நமக்கு தைரியம் உள்ளது. அதில் 'பைப்ஆர்கனை'யும் அழகான இருக்கைகளையும் வைத்து, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு சென்று நம் மார்க்கத்தில் சேரும்படி செய்து, மெதோடிஸ்டுகளை பாப்டிஸ்டுகளாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட நமக்கு தைரியம் உள்ளது. ஆனால் வார்த்தையையும், தேவனுடைய செய்தியையும் ஏற்றுக் கொண்டு, அதில் உறுதியாக நிற்பதற்கான கிறிஸ்தவ தைரியத்தைப் பெற்றிருத்தல் என்னும் நிலைக்கு வரும்போது. நாம் கண்டனக் கோஷம் செய்கிறோம். எனவே கொத்தன் இல்லாமல் கற்களால் என்ன பயன்? நான் கூறுவது சரியல்லவா? 113தேவன் நற்பண்பு படைத்தோரை எதிர் நோக்குகிறார். அங்கத்தினர்களை அல்ல. நற்பண்பு ஈசாக்குக்குப் பெண் கொள்ள எலியேசர் சென்றபோது, அவன் நற்பண்பு கொண்ட பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் அரும்பாடுபட்டான். தேவன் நம்மை உத்திரவாதமாக்குவது போல, ஆபிரகாம் அவனை அதற்கு உத்திரவாதமாக்கினான். அது உண்மை -போதகர்களாகிய நம்மை. “என் மணவாட்டியை தேடு” தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, நான் அங்கத்தினர்களைத் தேடிக் கொண்டிருக்கவில்லை, நான் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களையே தேடிக் கொண்டிருக்கிறேன் - தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் யாராகிலும் ஒருவரை. எலியேசர், “ஓ, என்னால் இதை செய்ய முடியாது. இது அதிக பொறுப்பான ஒன்று. ஈசாக்குக்குப் பெண் தேடுவதென்பது மிகவும் பொறுப்பான ஒரு செயல்...'' என்று எண்ணினான். அது சபைக்கு அடையாளமாயுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து: ரெபேக்காள் மணவாட்டிக்கு அடையாள மாயிருக்கிறாள். எலியேசர் முழங்கால் படியிட்டு, தேவனே, நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மன்றாடினான், அவன் தேவனிடம் முறையிட்டபோது, தேவன் அவனுக்கு உதவி செய்தார், அவன் நற்பண்புள்ள பெண்ணைக் கண்டுபிடித்தான். 114சகோதரனே, தேவனுடைய வார்த்தைக்கு திரும்பு. தேவனிடத்தில் திரும்பு. நீ சார்ந்துள்ள சபையின் மீது எவ்வித கவனமும் செலுத்தாதே. உனக்கு விருப்பமானால் அங்கேயே தங்கியிரு - அவர்கள் உன்னை அனுமதிப்பார்களானால், ஆனால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம் தேவனிடத்தில் வருவதே. அது உண்மை. இது முடிவு கால சுவிசேஷம். ஆம், நற்பண்பு! எலியேசர் ஈசாக்கின் அழகுள்ள மணவாட்டியாக ரெபேக்காளிலுள்ள நற்பண்பை கண்டுகொண்ட பிறகு, அவளிடம் ஈசாக்கை குறித்து கூறினான், அவள் ஒரு கேள்வியும் கூட கேட்கவில்லை. அவள் செய்தியாளனின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டு செல்ல ஆயத்தமானாள். அவர்கள் இருவரும் அவளுடைய தந்தையிடம் வந்தனர். அவன் தந்தையைக் கேட்ட போது, அவன், ''பெண் வயது வந்தவள், அவளுடைய தீரமானம் என்னவென்று அவளையே கேளுங்கள்'' என்றான். அவள், ''நான் போகிறேன்“ என்றாள். எங்கே? அவள் அதுவரை கண்டிராத ஒரு மனிதனிடம், அவள் ஒன்றுமே அறியாத மனிதனிடம். இருப்பினும் அவள் புறப்பட ஆயத்தமானாள். ஏனெனில் அவள் அதற்கென்று முன் குறிக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தாள். முற்றிலும் உண்மை. 115இயேசுவின் பாதங்களைக் கழுவின அந்த ஸ்திரீயை கவனித்தீர்களா? அவள் ஆசீர்வாதத்தைக் கேட்கவேயில்லை, அவள் அங்கு பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மாய்மாலக்காரன் அவரை பரிகாசம் செய்து, அவளுடைய நடத்தையைக் குறைவுபடுத்தி பேசினான். அதைத்தான் அவர்கள் எப்பொழுதும் செய்து வருகின்றனர். அவர் இழிவாகக் காணும்படி செய்கின்றனர். அதை செய்வதற்கென சிலர் அவர் பின்னால் சென்றனர். அவர்கள், ''நல்ல போதகரே, நீர் மகத்தான தேவனுடைய மனிதர் என்று அறிந்திருக்கிறோம். நீர் எதற்கும் பயப்படுகிறதில்லை. நாங்கள் இராயனுக்கு வரி கொடுக்க வேண்டுமா?'' என்றனர். பாருங்கள்? இப்படிப்பட்ட காரியங்கள் அவருடைய பெயரை இழிவுபடுத்த ஏதாவதொன்றைக் கண்டுபிடிக்க முயலுதல். இந்த பரிசேயன் அவரை விருந்துக்கு அழைத்தான். அவர்கள் அவரை அழைப்பார்கள் என்று அந்த ஸ்தாபனம் அறிந்திருந்தது. ஏதோ ஒரு நோக்கத்திற்காக அங்கு அழைத்தனர். 116உங்களை கிறிஸ்துவின் நிமித்தம் வெறுப்பவர்கள் உங்களை அழைப்பதை நீங்கள் கண்டால், உங்களிடமிருந்து அதிக பணம் பிடுங்குவதற்காக அல்லது உங்களை எந்த விதத்திலும் உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே. பாருங்கள்? அவர்கள் செய்தியை விசுவாசிப்பதில்லை. எனவே ஏதோ ஒன்றிற்காக அவர்கள் உங்களை அழைத்திருப்பார்கள். அதே கிறிஸ்து. அதை இன்று பகுத்தறியமாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? அவர் நிச்சயமாக அறிந்து கொள்வார். அவரை அவர்கள் உள்ளே கொண்டுவந்து, “நாங்கள் அதை நிரூபிப்போம்” என்றனர். அவர் துர்நாற்றங் கொண்டவராய் உள்ளே வரும்படி அனுமதித்தனர். அவருடைய கால்களை அவர்கள் கழுவவில்லை, அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து நடந்து வருவது வழக்கம். குதிரைகள் செல்லும் பாதைகளிலே அவர்கள் அக்காலத்தில் நடந்து வருவார்கள். அப்பொழுது அந்த நீண்ட அங்கி அந்த துர்நாற்றத்தை கிரகித்துக் கொள்ளும். அந்த துர்நாற்றம் அவர் மேல் இருந்தது. பாதையிலிருந்த தூசும் அவர்மேல் படிந்து அவர் துர்நாற்றம் கொள்ளக் காரணமாயிருந்தது. தானியக் களஞ்சியக் கொல்லைகளில் வீசும் துர்நாற்றத்தைப் போன்றது அவர்மேல் இருந்தது. அவர்கள் விருந்துக்கு அழைப்பவரின் வீட்டுக்கு வரும்போது தரையில் விலையேறப் பெற்ற கம்பளம் விரித்திருக்கும். அவர்கள் ஒரு விதமான தைலத்தை வைத்திருந்தனர். விருந்தாளிகள் கைகளும் கால்களும் கழுவின பின்பு, அவர்களுக்கு ஒருஜதை படுக்கையறை காலணிகளைக் கொடுத்து அதை அவர்கள் கால்களில் போட்டு விடுவார்கள். அவர்கள் உடை மாற்றி, தலைசீவிக் கொண்டு விருந்துக்காக ஆயத்தமானவுடன்; விருந்து கொடுப்பவர்கள் விருந்தாளிகளை சந்தித்து ஒருவரையொவர் கட்டித் தழுவி வாழ்த்துவார்கள். பாருங்கள்? சற்று முன்பு நானும், ஜோசப்பும் எங்கள் கரங்களைப் போட்டு, ஒருவரையொருவர் கட்டிக் தழுவி கொண்டது போல, அவர்கள் ஒருவரையொருவர் கழுத்தில் முத்தமிடுவார்கள். ஆனால் அந்த பரிசேயனோ அவரை விருந்துக்கு அழைத்துவிட்டு பேசாமலிருந்தான். அவர்கள் அவருடைய பாதங்களைக் கழுவவில்லை. அவருக்கு ஒன்றுமே செய்வில்லை. அவரை அங்கு உட்கார வைத்து விட்டு அவரைக் கேலி செய்தனர். 117ஆனால் ஒரு எளிய, இழிவான வேசி , அவளுடைய நடத்தைகெட்ட வாழ்க்கையின் மூலம் சில காசுகள் சம்பாதித்து வைத்திருந்தாள். அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை அவள் கண் டாள். அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் சென்று தன்னிடமிருந்த பணத்துக்கு பரிமளத் தைலத்தை வாங்கினாள். அவள் மெல்ல அவரிருந்த இடத்தை அடைந்து, அவருடைய கால்களில் விழுந்து, அழத்தொடங்கினாள். அவளுடைய கூந்தல் அவிழ்ந்து தரையில் விழுந்தது. அவள் அழுது தன் தலைமயிரை எடுத்து... அவருடைய கால்களைக் கழுவின பிறகு துடைப்பதற்கு அவர்கள் துணியொன்றும் அங்கு வைத்திருக்கவில்லை. அவள் தன் தலைமையிரால் அவருடைய பாதங்களை துடைத்தாள். அவருடைய பாதங்களுக்கு எவ்வளவு அருமையான தண்ணீர் - மனந்திரும்பின் பாவியின் கண்ணீர் அவர் பாதத்தை அசைத்திருந்தால், அவள் குதித்தெழுந்து இருப்பாள், அவள் ஒன்றையும் கேட்கவில்லை, அப்படி செய்ய வேண்டியது அவசிமென்று அவள் உணர்ந்தாள். 118இன்றைக்கு நாம் அப்படி செய்யக் கூடாதா? நாம் ஒன்றையும் கேட்கவில்லை. அது செய்யவேண்டியது அவசியம். சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டியது அவசியம். நமக்கு ஒரு பைசா கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதனால் ஒரு வித்தியாசமும் இல்லை. என் வாழ்க்கையில் நான் காணிக்கை எடுத்ததே கிடையாது. ஆனால் இது ஒரு அவசியத்திற்காக, ஒரு நோக்கத்திற்காக. நீங்கள் பிரிந்து விடுகிறீர்கள். சபை உங்களை வெறுக்கிறது, உங்களை புறம்பாக்குகிறது. உங்களுக்குள்ள ஒரு சில நண்பர்களுடன் மாத்திரம் நீங்கள் ஒன்று கூடுகின்றீர்கள். ஆனால் இது ஒரு செய்தி என்ன நேர்ந்தாலும், இது செல்ல வேண்டும். நான் வானொலியிலும் தொலைகாட்சியிலும் பிரசங்கிப்பதில்லை, அப்படி செய்தால், ஜனங்களிடம் பணத்துக்காக யாசிக்க வேண்டிவரும். அப்படி என்னால் செய்ய முடியாது. நான் உங்கள் சகோதரனாயிருக்க விரும்புகிறேன். தேவன் என்னை எங்கு அனுப்புகிறாரோ, அங்கு செல்ல விரும்புகிறேன். அங்கு ஐந்து பேர் இருந்தாலும், அங்கு செல்ல விரும்புகிறேன். அங்கு பத்து லட்சம் பேர் இருந்தாலும், அங்கு செல்ல விரும்புகிறேன். நான் செல்வதற்கு தேவன் ஒரு வழியை உண்டு பண்ணுவார். அவ்வளவுதான். விசுவாச வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நாம் எல்லோருமே அதைத்தான் செய்யவேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரம். அநேகர் அவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். அது உண்மை. அவர்கள் அப்படி செய்கின்றனர். 119இந்த ஸ்திரீயை பாருங்கள். இயேசு தம் பாதத்தை அசைக்கவேயில்லை. அங்கு நின்று கொண்டிருந்த பரிசேயன் அவரைக் கேலி செய்வதைக் கவனியுங்கள், அவன், “இவர் தீர்க்கதரிசியாயிருந்தால், இவருடைய பாதங்களைக் கழுவும் பெண் எப்படிப்பட்டவள் என்பதை அறிந்திருப்பார். பாருங்கள்? அவர் அருகிலுள்ள பெண் எப்படிப்பட்டவள் என்பதை அறிந்திருப்பார். அவர் எப்படிப்பட்ட வகுப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை அது காண்பிக்கிறது” என்றான். அதைக் குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆம், அவர் அறிந்திருந்தார், அவருடன் இருக்கும் ஜனங்கள் எப்படிப்பட்ட வகுப்பினர் என்பதைப் பாருங்கள். நாம் கனமுள்ளவர்கள். நாம் சபை அங்கத்தினர்கள். அவருடன் கூட உள்ள அந்த பாவியான ஸ்திரீயை பாருங்கள். அவள் யாரென்று நமக்குத் தெரியும். அவள் தெருவில் செல்பவள் அவள்... நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? “அவள் அப்படிப்பட்ட ஒருஸ்திரீ. பாருங்கள், பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் தான் அவரைச் சூழ்ந்துள்ளனர்”. நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 120நானும் அப்படிப்பட்டவனாய் தான் இருந்தேன். நான் அந்த வகையை சேர்ந்தவன், நல்லவனேயில்லை, பாவி, அவரிடம் வராத நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். ஒரு சபையின் அங்கத்தினராக ஆவதற்காக நீங்கள் வருவதில்லை, ஏதோ ஒன்று செய்யப்படவேண்டும் என்பதற்காக நீங்கள் வருகின்றீர்கள். இயேசுவுக்கு பணிவிடை செய்ய வேண்டியது அவசியமாயுள்ளது. அதற்கு யாராவது இருக்கவேண்டும். அதை நாம் செய்வோம். அவள் “ஆண்டவரே, என்னை ஆசீர்வதிப்பீரா? இதை செய்வீரா?” என்று கேட்கவில்லை. இல்லை. அவள் அவருடைய பாதங்களைக் கழுவி தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். பாதங்களைத் துடைக்க போதுமான தலைமயிரைப் பெற நமது சகோதரிகளில் சிலர் தலைகீழாக நிற்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியும். அவள் அதோ இருக்கிறாள். அவளுடைய அழகான சுருண்ட தலைமயிர் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய பாதங்களை அவள் துடைத்தாள். அவள் இப்படியாக அவருடைய பாதங்களை ஓயாமல் முத்தம் செய்து கொண்டேயிருந்தாள். இயேசு உட்கார்ந்து, அவளையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு அங்குலம் கூட அசையவில்லை. சற்று கழிந்து அவள் முடித்தவுடனே அவர் திரும்பிப் பார்த்தார். 121அங்கு சீமோன் தன் போதகர் சங்கத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன், “பாருங்கள்! ஹா! ஹா! அது தான் அவர். பார்த்தீர்களா? அவர் யாரென்பதை அது காண்பிக்கின்றது. அவர் தீர்க்கதரிசியல்ல. அவரைப் பாருங்கள்'' என்று கேலிசெய்தான். அவர் திரும்பிப் பார்த்து, ''சீமோனே“ என்றார். ஓ, அவன் முகம் சிவந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர், ”உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும். நீ என்னை இங்கு அழைத்தாய். பார்? நான் உன் வீட்டில் பிரவேசித்தேன். நீ என் கால்களைக் கழுவவில்லை, நீ எனக்கு வரவேற்பு முத்தம் கொடுக்கவில்லை, நீ என் தலையில் என்ணெய் பூசவில்லை. நீ அங்கு நின்று கொண்டு என்னை கேலி செய்து கொண்டிருந்தாய். பார்? அந்த நோக்கத்துக்காகவே நீ என்னை இங்கு அழைத்து வந்தாய். ஆனால் இந்த ஸ்திரீயோ, நான் உட்பிரவேசித்தது முதல், ஓயாமல் தன் கண்ணீரினால் என் பாதங்களைக் கழுவி தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். அவள் ஓயாமல், என் கழுத்தையல்ல, என் பாதங்களை முத்தஞ் செய்தாள்'' என்றார். ''சகோதரியே, நீ ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை, இல்லையா?' “இல்லை'' “நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது'', பாருங்கள்? அவள் சரியான ஒன்றைச் செய்யவில்லை என்று ஒருக்கால் அவளுக்கு கடைசி வரை இருந்திருக்கும். ஆனால் அது செய்ய வேண்டிய அவசியம் உண்டாயிருந்தது. அவளுடைய பலனோ முடிவில் வந்தது. 122இந்த செய்தியை நான் பிரசங்கிப்பதை நீங்கள் கேட்கலாம். பரிசுத்த ஆவியானவர் சிந்தனைகளைப் பகுத்தறிந்து, பெரிய காரியங்களைச் செய்து, அற்புதங்களை செய்வதை நீங்கள் காணலாம், நீங்கள் ஜெபம் செய்யலாம். ஆனால் அது நிறைவேறாமல் இருக்கக் கூடும். சென்று கொண்டேயிருங்கள். உங்கள் பலன் முடிவில் வரும். அப்படி அங்கு வருவது நல்லதல்லவா? ஆம். பாருங்கள், இயேசுவுக்கு சேவை செய்யுங்கள். அதுவே முடிவுகால செய்தி. அவருக்கு ஒரு மணவாட்டியுண்டு. அவர் நற்பண்பை எதிர்பார்க்கிறார். எலியேசர் அந்த நற்பண்பை கண்டுபிடித்த பிறகு, அடுத்தபடியாக அவள் செல்ல அவளை ஆயத்தப்படுத்தினான். சகோதரனே. அதுவே இப்பொழுது நடக்கிறது. முடிவுகால செய்தி பாபிலோனில் கிடையாது. 123அதைத் தான் நான் உங்களிடம் கூறினேன். ஸ்வீடன் தேசத்தை சேர்ந்த இந்த என் சகோதரனாகிய ஜோசப் தன் தலையை என் தோளின் மேல் போட்டு குழந்தையைப் போல் அழுதார். அவர், “சகோ. பிரன்ஹாமே, தேவன் என்னை சிக்காகோவுக்கு அனுப்பினார். இந்நாட்களில் ஒன்றில் சிக்காகோ அசைக்கப்படுவதை நான் காண்பேன்” என்றார். அவர் இப்பொழுது அவர்கள் என்னை அனுப்பிவிடுகிறார்கள், என் பராமரிப்பிலிருந்த சிக்காகோவிலேயே சிறந்த அந்த சபையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். என்னை வோட்டு போட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை'' என்றார். நான், ''ஜோசப், தேவன் பொய் சொல்வதில்லை. சிக்காகோ அசைக்கப்படுவதை நீங்கள் கண்டீர்கள். நான் உங்களை நியூயார்க் பட்டினத்தில் கண்டபோது, அது அங்கேயே தொடங்கினது. அவர்கள் உங்களுடன் ஒத்துழைக்க மறுத்ததால் நான் சிக்காகோவுக்கு செல்ல விரும்பவில்லை'' என்றேன். அவரை அப்பொழுது எனக்குத் தெரியாது. இருப்பினும் அவரிலிருந்த ஏதோ ஒன்று என்னை அவரிடம் இழுத்தது. இன்றிரவு மிஷனரி கூட்டம் உள்ளது என்பதற்காக இதை நான் கூறவில்லை. அது உண்மை. நான் ஜோசப்பிடம் இழுக்கப்பட்டேன். நான் சிக்காகோவுக்கு செல்ல மறுத்தேன். ஏனெனில் அவர்கள் ஜோசப்பை அனுமதிக்க மறுத்தனர். அப்படியானால் நானும் போகவில்லை என்றேன். அவர்கள், “அவரை உங்களுக்குத் தெரியாது” என்றனர். நான் அவரை எனக்குத் தெரியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் தேவன் அவரை அறிவார். அவர் தேவனுடைய ஊழியக்காரன். என்னைப் பொறுத்த வரையில் அவர் நல்லவரே“ என்றேன். 124ஜோசப், “சிக்காகோ அசைக்கப்படுவதை நான் கண்டால் நலமாயிருக்கும்'' என்றார். ஓ, என்னே மிருகத்துக்கு உணவாக வைக்கப்பட்டிருக்கும் அது அசைகிறது என்று நினையாதீர்கள். அந்த குப்பை அழிந்து போகும் என்று அர்த்தமல்ல. சபை அசைந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? அசைவு உண்டான போது. லட்சக்கணக்கானவர்களில் நூற்றிருபது பேர் மாத்திரமே மேலறையில் இருந்தனர். அது உண்மை. நிச்சயமாக, அது அசைகிறது. கவனியுங்கள், அந்த பெரிய எழுப்புதல் அங்கு உண்டான போது, அப்பொல்லோ என்னும் பாப்டிஸ்டு போதகர் பரிசுத்த ஆவியையும் பெறவில்லை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானமும் பெறவில்லை. பவுல் மேடான தேசங்கள் வழியாய் நடந்து எபேசுவுக்கு வந்தான். அங்கு வேதம் கூறும் இந்த மகத்தான சபையைக் கண்டான். அவன் அவர்களுக்கு கர்த்தருடைய வழியைப் போதித்தான். அவர்கள் சொன்னார்கள்... அவன், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?“ என்று கேட்டான். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு, அற்புதமான தருணத்தைப் பெற்றிருந்தனர். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “அப்படி ஒன்று இருப்பதாக நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றனர். அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்றான். அவர்கள், ''யோவான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்“ என்றனர். அவன், ''அதனால் இப்பொழுது எந்த பயனுமில்லை. நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டும்“ என்றான். அவன் மறுபடியும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அங்கு எட்டு அல்லது பத்து பேர் மாத்திரமே இருந்தனர். அது உண்மை. 125அசைத்தல் பாருங்கள், தேவன் அதை அசைப்பதில்லை. பாதாளம் அதைப் பெற்றுக் கொள்ளும் போது அதை அசைக்கும். ஆனால் தேவனோ தமது சபையை அசைக்கிறார். ஒரு தூதன் மலையிலுள்ள ஆபிரகாமிடமும் அவனுடைய குழுவினிடமும் வந்து, இருதயத்திலுள்ள சிந்தனைகளை அறிந்து ஒரு அற்புதத்தை செய்தார். அது சரியா? சாராள் உள்ளே இருந்தாள். ஆனால் தூதர்கள், சோதோமுக்கு சென்ற போது, அங்கு ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். பாருங்கள், அசைவு சிறு குழுவுக்குத் தான் வருகிறது. ஜோசப், அதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். சிக்காகோ அதன் கடைசி அழைப்பை பெறுவதை நீங்கள் கண்டீர்கள். அது உண்மை. தேவன் உங்களை கனப்படுத்தினார். அவர் சொன்னதை அப்படியே செய்தார். . 126அவர் மணவாட்டியை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுதான் அது. இதை கூறி நாம் முடிக்கப் போகின்றோம், முடிவுகால செய்தியானது மணவாட்டியை எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று ஆயத்தப்படுத்துவதற்கே. அது என்ன செய்யும்? மல்கியா 4ன்படி, அது பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்பு கொடுக்கப்பட்ட விசுவாசத்துக்கு அவர்களைத் திரும்பக் கொண்டு திரும்ப அளிக்கப்படும் இந்த காலத்தில், அது அவர்களை பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்துக்கு திருப்பும். நான் திரும்ப அளிப்பேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்''. அது தான் உண்மையான முடிவு கால சுவிசேஷகம். நான் முடிக்கும் முன்பு இந்த இரண்டு வார்த்தைகளை கூற விரும்புகிறேன். நான் மற்ற வேதவாக்கியங்களை கூறாமல் விட்டுவிட்டேன். வேறொரு சமயம் அவைகளுக்கு நாம் வரலாம். ஆனால் இதை கூற விரும்புகிறேன். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறோம். அதை நாம் விசுவாசிக்கிறோம். முடிவுகாலம் என்னும் இந்த நேரத்தில் செய்தியும் செய்தியாளனும் தளர்ந்துவிட்டதாக காணப்பட்டாலும் - சாத்தான் நம்மை தவிடு பொடியாக்க அவனால் இயன்றவரையில் முயன்று வருகிறான் என்று தோன்றுகின்றது. சகோ. நெவிலுக்கு விபத்து; அங்கு சகோ. க்ரேஸுக்கு (Bro. Crase) துப்பாக்கி வெடித்தது, பாருங்கள், அப்படி தோன்றுகின்றது. இப்பொழுது எல்லா சபைகளுமே என்னை விரோதிக்கின்றன. பாருங்கள், பாருங்கள், நாம் தளர்ந்து போனதைப்போல் காணப்படுகின்றது. நாம் தோல்வியடைந்தது போல் உள்ளது. கவலைப்படாதீர்கள். வழக்கமாக இப்படிப்பட்ட நேரத்தில் தான், தேவன் காட்சிக்குள் வருகிறார். நீண்ட காலமாக அவர் இதை கவனித்துக் கொண்டு வருகிறார். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? 127ஒரு முறை சில பிள்ளைகள் எரிகிற அக்கினி சூளையில் போடப்பட்டனர். அவர்கள் வார்த்தையை உறுதியாய் பற்றியிருந்தனர். எல்லாமே தவறாக நடந்து வந்தது. அவர்கள் அவர்களை சிறையில் அதற்கு முந்தின இரவு அடைத்தனர். அடுத்த நாள் காலையில் அவர்களை அவர்கள் எரித்துவிடப் போகின்றனர். முடிவு நெருங்கிவிட்டது போல் காணப்பட்டது. அவர்கள் சூளை வரைக்கும் நடந்து சென்றனர். ஆனால் அவர் வேகமாக இறங்கி வந்து மாற்றினார். ஒரு நொடியில் அந்த காட்சியே முழுவதுமாக மாறினது. அப்படிப்பட்ட பலவீனமான நேரங்களில் தான் உண்மையான செய்தி தோல்வியடையும் என்று தோன்றும்போது, தேவன் உள்ளே வருகிறார். செய்தியும் செய்தியாளனும் பாதையின் முடிவை அடைவதற்கு அவர் விட்டு விட்டு, அதன் பிறகு அவர் வெற்றியுடன் வருகிறார். அது உண்மை. 128ஞாபகம் கொள்ளுங்கள், இயேசுவை தோற்கடித்துவிட்டதாக அவருடைய சத்துருக்கள் கருதினர். அவிசுவாசி, “அவரை சிலுவையில் அறைந்துவிட்டோம்'' என்று களிகூர்ந்தான். அவரை விரோதித்து, அவரை சிலுவையிலறைந்த சதுசேயர்களும் பரிசேயர்களும், அவன் பிடியில் அகப்பட்டுக் கொண்டான்” என்று கூறி மகிழ்ந்தனர். ஆனால் அந்த நேரத்தில்தான் தேவன் காட்சியில் நுழைந்து, ஈஸ்டர் காலையன்று அவரை உயிரோடெழுப்பி, சாத்தானின் இராஜ்யத்தை உடைத்து போட்டு, பாதாளத்தை காலியாக்கினார். அவர் மரணத்துக்கும் பாதாளத்துக்குரிய திறவுகோலை எடுத்துக் கொண்டு சென்றபோது, அவர்களும் அவருடன் கூட எழும்பி சென்றனர். நிச்சயமாக, அப்படிப்பட்ட பலவீனமான நேரத்தின் போது, அவருடைய செய்தி - அவர் வார்த்தையைப் பிரசங்கித்தார். அவர் உறுதியாய் நின்றார். அதன் பின்பு பலவீனமான நேரத்தில் வெற்றி வந்தது. அவரால் முடிந்த அனைத்தும் அவர் செய்த பிறகு, தேவன் உள்ளே வந்து காட்சியை மாற்றினார். 129யாக்கோபு ஏசாவுக்குப் பயந்து ஓடிப்போனான். அவன் இங்குமங்கும் ஏமாற்றி, ஏசாவிடமிருந்து மறைந்து கொள்ள முயன்றான். பிறகு அவனுடைய இருதயம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வாஞ்சித்தது. அவன் வீடு செல்லும் வழியில் ஏசாவின் கோபத்தை தணிக்க, ஆட்களையும் வெகுமதிகளையும் எல்லாவற்றையும் அனுப்பினான். ஆனால் யாக்கோபு தன் முடிவுக்கு வந்து, எந்த பக்கம் போவதென்று தெரியாமல் திகைத்தான். அவன் தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் தண்ணீரைக் கடக்கக் செய்து, அவனும் ஆற்றைக் கடந்தான். அவன் இரவு முழுவதும் போராடி, அவனுடைய பெலன் குன்றிப் போய் ஊனமாகி, பெலவீனமாகி அவனுடைய சரீரம் தளர்ந்து போனது. அந்த நேரத்தில் தேவன் காட்சியில் வந்தார். அடுத்த நாள் காலை, நாம் என்ன காண்கிறோம்? அவன் பலவீனமடைந்த பிறகு, பயமில்லாத ஒரு ராஜகுமாரன், அவன் தோல்வியடைந்தது போல் காணப்பட்டது. ஆனால் அவனை பயமில்லாத ஒரு ராஜகுமாரனாக நாம் காண்கிறோம். செய்தி போய்க் கொண்டேயிருந்தது. செய்தியாளனும் அதனுடன் கூட இருந்தான். அது முற்றிலும் உண்மை. அன்றொரு நாள் அவன் பயமில்லாத ராஜகுமாரனாக மாறினான். 130ஏசாவுக்கு அவன் மிகவும் அவசியமாயிருந்த போது... கவனியுங்கள் அதே சமயத்தில் தேவன் ஏசாவின் இருதயத்திலும் கிரியை செய்தார். அது உண்மை. ஏசா அவனிடம் வந்த போது, என்னிடம் போர் வீரர்கள் இருக்கின்றனர். யாக்கோபே நீ பலவீனமாயிருக்கிறாய். உன் சரீரம் பலம் குன்றி, தளர்ந்துபோயுள்ளது. உன்னைப் பாதுகாக்க நான் போர் வீரர்களை அனுப்புவேன்“ என்றான் -அவனுக்குத் தேவையாயிருந்த அந்த நேரத்தில். ஆனால் யாக்கோபோ வேறொன்றைக் கண்டு கொண்டான். ''நான் தனியே போகிறேன்“ என்றான். ஆமென். அப்பொழுது அவனுடைய பலவீனம் மறைந்தது, அந்த அதிர்ச்சியும் மறைந்தது. 131இயேசு மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து விடுதலையான போது, அவர் மிகவும் பெலசாலியாயிருந்தார். கட்டிடத்தின் ஒரு கல்லையும் கூட நகர்த்தாமல், அவரால் கட்டிடத்துக்குள் செல்ல முடிந்தது. அவரால் மீனையும் அப்பத்தையும் புசிக்க முடிந்தது. ஆமென். ஓ, ஆமாம். பலவீனம் வந்த பிறகு, அவர் தம்மை பலசாலியாகக் கண்டார் -பலவீனம் வந்த பிறகு. இப்பொழுது செய்தியும் செய்தியாளனும் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக காணப்படுகின்றது. ஆனால் கவலைப்படாதீர்கள் எங்காவது - எனக்கு எப்படியென்று தெரியாது அவரை நான் நம்பியிருக்கிறேன் - என்றாவது ஒரு நாளில் அவர் சவாரி செய்து காட்சிக்கு வருவார். கவலைப்படாதீர்கள். நாம் ஒன்றாகச் செல்வோம். இப்பொழுது நாம் எல்லோரும் தலை வணங்குவோம். சாயங்கால நேரம் சுவிசேஷகம். 132ஓ, தேவனே, சிறிது காலமாக மகத்தான சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள பக்க வரிசைகளில், புற்று நோயால் தின்னப்பட்டு நிழலாக மாத்திரம் காட்சியளித்த ஆண்களையும், பெண்களையும், குருடரையும், வியாதியஸ்தரையும், துன்பப்படுகிறவர்களையும் நீர் தேடிக் கண்டுபிடித்தீர். மேயோ மருத்துவமனையின் மருத்துவர்களும் மற்ற இடங்களில் உள்ளவர்களும் கூட அவர்களை கைவிட்டனர். ஆனால் இன்று காலை அவர்களில் அநேகர் ஆரோக்கியமுள்ளவர்களாயும், திடகாத்திரமுள்ளவர்களாயும் இங்கு அமர்ந்துள்ளனர் -இங்கு மாத்திரமல்ல உலகின் எல்லா பாகங்களிலும், மரித்து அநேக மணி நேரமான தங்கள் பிள்ளைகளை ஸ்திரீகள் உயிருடன் பெற்றனர். வாகனங்களினால் சாலையில் விபத்துக்குள்ளாகி மரித்துப்போன, பிள்ளைகள் அவர்கள் 'மரித்துவிட்டார்கள்' என்று மருத்துவர் பிரகடனம் செய்து கிடத்தப்பட்டிருந்தனர், ஒரு எலும்பும் கூட முறியாமல் இல்லை. ஆனால் ஒரு நிமிடத்துக்குள் அவர்கள் வீதியில் தேவனைத் துதித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஆம் கர்த்தாவே, நீர் தேவனாயிருக்கிறீர். சாயங்கால நேரம் இங்குள்ளது. சாயங்கால சுவிசேஷக விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன. பிதாவே, இப்பொழுது இது தளர்ந்த நேரம் போல் காணப்படுகின்றது. உம்முடைய காலத்தில், முதலில் நீர் காட்சிக்கு வந்த போது எல்லோருமே, “கலிலேயாவைச் சேர்ந்த அந்த வாலிப தீர்க்கதரிசி” என்று ஆர்ப்பரித்தனர். ஓ, அவர்கள் அனைவரும் உம்மை சூழ்ந்து கொண்டனர். ஆனால் நீர் அவர்களுடைய கோட்பாடுகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்ட போது, அவர்கள் உம்மை விட்டுச் சென்றார்கள். நீர் தனியாக நிற்க வேண்டியதாயிருந்தது. முடிவில் அவர்கள் உம்மை கல்வாரிக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் வெற்றியடைந்தது போல் காணப்பட்டது. அந்த பெரிய நுண்ணறிவு படைத்த கூட்டம் தேவனுடைய நோக்கத்தை தோற்கடித்தது போல் காணப்பட்டது. ஆனால் ஓ, இல்லவே இல்லை. ஈஸ்டர் காலையன்று பூமிக்கு நடுக்கம் ஏற்பட்டது. கல்லறை திறந்தது, தேவனுடைய குமாரன் உயிரோடெழுந்தார். அவர் மரணத்துக்கும் பாதாளத்துக்குமுரிய திறவுகோலை உடையவராயிருந்தார், அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையளிக்க அவருக்கு உரிமையிருந்தது. அவர் சபையிடம், ''நீங்கள் எருசலேமுக்குச் சென்று அங்கு காத்திருங்கள். அதை நான் உங்கள் மேல் அனுப்புவேன். அதன் பிறகு நான் மறுபடியும் வரும் வரைக்கும் நீங்கள் என்னைக் குறித்து சாட்சி கூறுங்கள்'' என்றார். 133பின்பு நீர் அவர்களிடம் காலம் எவ்விதமாக இருக்குமென்று கூறினீர். கர்த்தாவே, இதோ நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோம். நீர் மறுபடியும் சவாரி செய்து வாரும். பிதாவே வரமாட்டீரா? நாங்கள் களைத்து தளர்ந்து போயிருக்கிறோம். எல்லாவிடங்களிலுமுள்ள மனிதர் எங்களை புறக்கணித்துவிட்டனர். ஸ்தாபனங்கள் அனைத்தும் எங்களுக்கு விரோதமாய் உள்ளன. கலிபோர்னியாவில் நாற்பது சபைகளிலுள்ள விலையேறப்பெற்ற பரிசுத்தவான்கள் அழுது கொண்டிருக்கின்றனர். அந்த தலைவர் எழுந்து நின்று, “அவர் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுப்பாரானால், அவர் எங்களுக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டார். அவர் பசி கொண்டுள்ள அந்த எளிய ஜனங்களிடமிருந்து சுவிசேஷத்தை அகற்றிவிட்டார். பிதாவே நான், ''வேதாகமத்துடன் என்னை சந்தியுங்கள்'' என்று கூறினேன். அவர் மறுத்துவிட்டார். ஏன்? அவருக்கு நன்றாக தெரியும். ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? நீர் உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் கரத்தை நீட்டி, வியாதியஸ்தரை சுகப்படுத்தி அடையாளங்களையும், அற்புதங்களையும் மறுபடியும் காண்பிப்பதால் தான், அது மறுபடியும் நிகழ்கின்றது. அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். தேவனே, அவர்களைப் புறக்கணியாதேயும், அநேக நல்லவர்கள் இன்னும் அதில் இருக்கின்றனர். கர்த்தாவே அவர்கள் கண்டு வெளிவர அருள் புரியும். 134பிதாவே, இன்று காலை இங்குள்ள இந்த சிறு சபையோர்; ஜனங்களின் இருதயங்களை நாங்கள் அறியோம். நீர் அறிவீர், இந்த சிறு குழுவை விட்டு நான் அங்கு செல்லப் போகின்றேன். கர்த்தாவே, சபையை விட்டு நான் செல்லும் முன்பு, இங்கு சஞ்சரிக்கும் இந்த சிறு குழு; அவர்கள் பரதேசிகள். கர்த்தாவே, அவர்கள் இவ்வுலகத்தை சேர்ந்தவரென்று கூறிக் கொள்வதில்லை. அவர்கள் அந்நியர்கள். அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள், அவர்கள் புது சிருஷ்டிகள். அவர்கள் உலகத்தின் காரியங்களை விட்டகன்று, உம்மை சேவிக்க வந்துள்ளனர். “வேகமாக அழிந்து போகும் மாயையான இவ்வுலகின் ஐசுவரியங்களை, இச்சியாதேயுங்கள், நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளை கட்டுங்கள், அவை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை” என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். பரலோகப் பிதாவே, இன்று காலை இங்கு ஒருவர் அல்லது அதற்கதிகமானவர்கள், அப்படிப்பட்ட திருப்பத்தை செய்ய வேண்டும் என்னும் உணர்வை ஒருக்கால் பெறாமல் இருப்பார்களானால், இப்பொழுது அவர்களுடைய இருதயங்களில் நீர் பேசவேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் இனிமையாயும் தாழ்மையாயும், தங்கள் இருதயங்களில், எல்லாவற்றையும் உமக்கு ஒப்புவித்து, ''கர்த்தராகிய இயேசுவே. பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், இப்பொழுதுள்ள என் நிலையில் நான் மரிக்க விரும்பவில்லை. இந்த நாள் முழுவதும் நான் உயிரோடிருப்பேன் என்னும் நிச்சயம் இல்லாதிருக்கும் போது, உலக காரியங்களில் ஏன் நேரத்தை வீணாக்குவது மூடத்தனமல்லவா?'' என்று கூற அருள் புரியும். இங்குள்ள எல்லாமே அழிந்துபோம், ஜனங்களும் உலகத்துடன் கூட அழிந்து போவார்கள். ஆனால் தேவன், நித்திய பிதா, அழிந்து போகமுடியாது. அவருடைய ஜனங்களும் அழிந்து போக முடியாது. எங்கள் பரலோகப் பிதாவே, அவர்கள் இதை இப்பொழுது ஏற்றுக் கொள்வார்களாக. 135வியாதியஸ்தர்களுக்காகவும், துன்பப்படுகிறவர்களுக்காகவும் இங்கு வைக்கப்பட்டுள்ள உறுமால்களை பரிசுத்தப்படுத்துவீராக. பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்துப் போட்ட போது, பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டுச் சென்றன, என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும். எங்கள் மத்தியில் பலவீனமான ஒருவராவது இருக்கவேண்டாம். இப்பொழுது மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே கூட்டத்தில் அசைவாடுவாராக. ஒவ்வொருவரும் அவருடைய பிரசன்னத்தை உணரட்டும். நான் துவக்கத்தில் கூறினது போன்று, உலர்ந்த கோடை காலத்தில் வறண்ட, உஷ்ணமான காற்று வீசுகின்றது. தூசு பறக்கிறது. ஆனால் திடீரென்று இடி முழக்கம் நமக்கு கேட்கின்றது, மேகம் மேலே எழும்புவதை நாம் காண்கிறோம். சிகப்பு கைகாட்டி இறங்கிவிட்டது என்று நான் கூறினேன். அவர் வருகிறார். பரிசுத்த ஆவியானவர் வறண்ட நிலங்களில் அசையும்போது, குளிர்ந்த காற்றை நாங்கள் உணர்ந்து அதை வரவேற்கிறோம். இன்றைக்கு எங்களுக்குதவி செய்யும். 136இழந்து போனவர்களை இரட்சியும். கர்த்தாவே, விளக்குகள் அணையும் முன்பே, வேகமாக பரிசுத்த ஆவியால் நிரப்பும். ஏனெனில் கைகாட்டி கீழே இறங்கிவிட்டது. சீயோனின் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் அது துறைமுகத்தை அடையும். திடீரென்று செய்தித்தாள்கள், “என்ன நேர்ந்தது?” தேசத்தில் நூற்றுக்கணக்கானவர் காணாமற்போய்விட்டனர் என்னும் செய்தியை வெளியிடும். ஓ தேவனே, அப்பொழுது மற்றவர்களுக்கு காலதாமதமாயிருக்கும், எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்துவிட்டது. நியாயத்தீர்ப்பு பூமியின் மேல் விழும். அப்பொழுது நீதிமான்கள் ஏற்கனவே சென்றிருப்பார்கள். அவர்கள் கல்லறை தோட்டங்களுக்குச் சென்று, அவர்கள் இந்த கல்லறையைத் திறந்தார்களா? இங்கு என்ன நடந்தது?'' என்று கேட்பார்கள். ஓ, இழக்கப்பட்டவர்கள் தங்கள் கதியை அறியும்போது, எப்படிப்பட்ட அழுகையும் கதறலும் உண்டாயிருக்கும் அவர்கள் மலைகளையும் குன்றுகளையும் பார்த்து அழுவார்கள் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் ஜெபிப்பார்கள். ஆனால் அவர்களுடைய ஜெபம் தாமதமாகிவிட்டது. இங்குள்ள ஒருவருக்காவது அப்படி நேராதிருப்பதாக. 137நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், நமது இருதயங்களும் கூட வணங்கியிருக்கும் இந்நேரத்தில். ஜனங்களை பீடத்துக்கு அழைக்கும் விஷயத்தில் நான் வினோதமானவன். அது அப்போஸ்தல உபதேசமல்ல என்பது என் கருத்து. நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே, நீங்கள் வாழ அல்லது சாக விரும்புகின்றீர்களா, என்னும் தீர்மானத்தை செய்யலாம். அது உங்களைப் பொறுத்தது. அந்த விதமாக அதை இதுவரை காணாமல், நாம் வாழும் நேரத்தை இதுவரை உணராதவர்கள் இங்கு யாராகிலும் இருந்து, நீங்கள் கிறிஸ்தவர்களாக வேண்டுமென்றும், உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவைப் போல் இருந்து அவருடைய வருகைக்கு ஆயத்தமாக வேண்டுமென்று விரும்பி, உங்களை என் ஜெபத்தில் நான் நினைவு கூர வேண்டுமென்று விரும்பினால் கட்டிடத்திலுள்ளவர்கள் உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னையும் உன்னையும். பின்னால் உள்ள உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக, அங்குள்ள உன்னையும் அது நல்லது, வாலிபப் பெண்ணே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாழ்க்கையின் தெருச் சந்தியில் உள்ள சகோதரியே, அது ஒரு பெரிய தீர்மானம். நீங்கள் பெரிய தகப்பனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம் தாயே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அநேக நாட்கள் கடினமாக உழைத்து, உங்கள் பிள்ளைகளை வளர்த்திருக்கலாம். ஓ, தேவனே நீங்கள் ஒருக்கால் உங்கள் குடும்பத்தை வளர்த்து, அநேக பெரிய காரியங்களைச் செய்து. சிறு குழந்தை அழுத போது அதன் கன்னங்களைத் தட்டிக்கொடுத்து, உங்கள் சிறு கரங்களைக் கொண்டு தொட்டிலை ஆட்டியிருக்கலாம். இப்பொழுது உங்களுக்கு வயதாகி பெலவீனமாயிருக்கிறீர்கள். குழந்தையைத் தொட்டிலில் ஆட்டி. அநேக நன்மையான காரியங்களைச் செய்திருக்கலாம். ஆனால் நீங்கள் செய்த எல்லாவற்றிலும் மிகச் சிறந்த செயல். உங்கள் கையை சற்று முன்பு உயர்த்தினதே. தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள். 138எங்கள் பரலோகப் பிதாவே. நீர் கைகளைக் கண்டீர் அவைகளுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் இந்தக் கூட்டத்தில் கிடைக்கப் பெற்ற விருதுகள், ''என் பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னடத்தில் வரமாட்டான்“ என்று நீர் கூறியுள்ளீர். நீர் இந்த ஜனங்களிடம் பேசினர். அவர்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். விஞ்ஞானத்தின் படி அவர்களுடைய கரங்கள் கீழே இருக்கவேண்டும். ஏனெனில் புவிஈர்ப்பு சக்தி அவைகளைக் கீழே வைத்துள்ளது. ஆனால் அவர்கள் அந்த விஞ்ஞானத்தின் விதிகளை எதிர்த்து மேற்கொண்டனர். அவர்களுக்குள் இருக்கும் ஆவி அவர்களுடைய கையையுயர்த்தினது. அது விஞ்ஞானத்துக்கு முரணான செயல். அங்கிருந்த ஆவிக்கு விஞ்ஞானத்தை மேற்கொள்ள முடியும். அவர்களைச் சுற்றியிருந்த தேவனுடைய ஆவி. ”உனக்கு கிறிஸ்து அவசியம்'' என்று கூறினதால், அவர்கள் கையுயர்த்தினர். “ஓ, கர்த்தாவே, என்னை நினைத்தருளும்” என்று கூறி அவர்கள் கையுயர்த்தினர். சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளன், “ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றான். அப்பொழுது அவனிடம் நீர் என்ன கூறினீர்? ''இன்றைக்கு நீ என்னுடன் கூட பரதீசியிலிருப்பாய்.'' 139பிதாவே, இன்றைக்கே இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியினர் மீதும் நீர் தயவு கொண்டு, அவர்களை உமது ராஜ்யத்தில் - இவ்வுலகில், உமது ஐக்கியத்தில் - சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஜெபிக்கிறேன், இயேசுவே நீர் பூமியில் இருந்த போது, ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நியாயத்தீர்ப்பு பூமியின் மேல் விழும்போது, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்“ என்று நீர் யோவான் 5:24ல் கூறினீர். அதை நீர் வாக்கருளியிருக்கிறீர். அவைகளை நான் உரிமையுடன் கேட்கிறேன் பிதாவே. இங்கு கைகளை உயர்த்தினவர்களையும், தங்கள் இருதயங்களில் அவ்வாறு செய்யவேண்டுமென்று, நினைத்து, ஆனால் செய்யாதவர்களையும், இயேசுகிறிஸ்துவின் கிருபைக்கும் இன்று காலை நாங்கள் பிரசங்கித்த அவருடைய வார்த்தைக்கும் கிடைக்கப்பெற்ற விருதுகளாக உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்கள். கர்த்தாவே, அந்த நாள் வரைக்கும் அவர்களை பத்திரமாக காத்துக் கொள்ளும். குழந்தைகளாகிய அவர்கள் வளரட்டும். இந்த குளத்திலுள்ள தண்ணீர் அவர்களை இழுத்துக் கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உலகத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் அடக்கம் பண்ணப்பட்டு, புதிய ஜீவனுடன் எழும்பி ஒரு புது உலகத்தில் புது கூட்டாளிகளுடனும், தேவ தூதர்களுடனும், இயற்கைக்கு மேம்பட்டவைகளின் பிரசன்னத்திலும் நடக்க விரும்புகின்றனர். இவைகளை அவர்களைச் சுற்றிலும் அவர்கள் காண முடியாவிட்டாலும், அவை அங்குள்ளன என்பதை உணர்ந்து அறிந்துள்ளனர். அவைகளே என்றென்றும் உள்ளவை. இயற்கைக்கு மேம்பட்டதே என்றென்றும் உள்ளது. பிதாவே, இவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென். 140சற்று அதிக நேரமாக உங்களை அசைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். எனக்கு நிச்சயமாக தெரியும்... நீங்கள் நல்லுணர்வு பெற்றிருக்கிறீர்களா? சில சமயங்களில் இப்படிப்பட்ட கூட்டங்களில் வெட்டி பொருத்த வேண்டியதாயுள்ளது. கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து கைகளையுயர்த்தினவர்களே, இன்று மாலை ஞானஸ்நான ஆராதனை இருக்குமென்று நினைக்கிறேன். அல்லது ஆமாம், குளம் நிறைந்துள்ளது. இப்பொழுது நீங்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினால். ஞானஸ்நான அங்கிகள் ஆயத்தமாயுள்ளன. இப்பொழுதே அதை பெற விரும்பினால், எப்பொழுது வேண்டுமானாலும், நாங்கள் அதை கொடுப்பதற்கே இங்குள்ளோம். எங்கள் வாசல்களுக்குள் வந்து, இன்று காலை எங்களுடன் தேவனுடைய வார்த்தையில் ஐக்கியங் கொண்ட அந்நியர்களாகிய உங்களுக்கு நன்றி சொல்லுகிறோம். நீங்கள் வந்ததைக் குறித்து எங்கள் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இங்குள்ளதைக் குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 141என் நண்பர் ஒருவர் இந்த கட்டிடத்தில் பின்னால் அமர்ந்துள்ளதைக் காண்கிறேன். அவரை நான் நீண்ட காலம் காணவில்லை. அவருடைய பெயரையும் கூட மறந்துவிட்டேன். அவர் என் நல் நண்பர். நான் முன்பு சென்று கொண்டிருந்த மேரி பிரான்ஸிஸ்கோ என்னும் பெண்ணுக்கு அவர் ஒன்றுவிட்ட சகோதரன். அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. உங்கள் கையையுயர்த்துவீர்களா? நீங்கள் இங்கு வந்து அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அநேக ஆண்டுகளாக கிறிஸ்தவராயிருக்கிறார். இங்குள்ள என் நண்பர் ஜிம்பூல் என் பால்ய நண்பர். ஜிம்பூலைக் குறித்து நான் கூறியுள்ளதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? அவருடைய மகனும் மனைவியும் கூட வந்துள்ளனர். டானி (Donny) அவருடைய குடும்பப் பெயர். ஞாபகம் வரவில்லை. கார்ட் (Gard) டானி கார்டும் அவருடைய அழகிய மனைவியும் இங்குள்ளனர். என்னை சந்திக்க நேற்று அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். இன்று காலை அவர்கள் இங்கிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இங்கு சகோ. வேவுக்கு அடுத்தாற் போல் ஒரு அந்நிய சகோதரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஓ, இந்த இடத்தில். ஒருக்கால் நான் தவறாயிருக்கலாம். சில நேரங்களில் நான் முகங்களை மறந்துவிடுகிறேன். நீங்கள் அனைவரும் இன்று காலை வந்ததைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 142இந்த உருவமைப்புக்குப் பிறகு, நாம் இந்த இடத்தை விட்டு போகும்முன்பு... உங்களுக்குத் தெரியும், தேவனுடைய வார்த்தையானது. அந்த தீர்மானத்தைப் போன்று ஒரு கல்லை வெட்டி, உருவமைப்பதற்கு ஒரு கொத்தன் அவசியம். பாருங்கள்? எபிரெயர் 4ம் அதிகாரம் தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது'' என்கின்றது. அது வெட்டி, விருத்தசேதனம் செய்து அதிகமாயுள்ளதை வெட்டி, விருத்தசேதனம் செய்து அதிகமாயுள்ளதை வெட்டி நீக்கி விடுகின்றது. ''அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது''. தேவனுடைய வார்த்தை, அது வெட்டுகிறது. இப்பொழுது ஆராதிக்க. எனக்கு விருப்பமான “நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் அந்த பழமையான பாடலைப் பாடுவோம் -எனக்கு விருப்பமான பாடல்களில் ஒன்று. எத்தனை பேர் அவரை உண்மையாக நேசிக்கிறீர்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும் இல்லாமற் போனாலும் எனக்கு கவலையில்லை. ''அவர் என்னை முந்தி நேசித்ததால், நான் அவரை நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைப் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 143அதை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? நாம் மறுபடியும் அதைப் பாடுவோம். நாம் பாடும்போது, உங்கள் பக்கத்திலுள்ள ஒருவருடன் கை குலுக்குங்கள். எழுந்து நிற்க வேண்டாம். “சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று மாத்திரம் கூறுங்கள். உங்கள் அருகிலுள்ள ஒருவருடன். அப்பொழுது எல்லோருக்குமே வரவேற்பு பெற்ற உணர்ச்சியிருக்கும். உங்கள் ஒவ்வொருவரையும் நான் இந்த கூடாரத்துக்கு வரவேற்கிறேன். சரி. நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன். முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இதை நாம் மெளனமாக இசைக்கும் போது நமது தலைகளை வணங்குவோம், (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் “நான் அவரை நேசிக்கிறேன்” என்னும் பாடலை மெளனமாக இசைக்கின்றனர் - ஆசி) உங்கள் கரத்தை அவரிடம் உயர்த்துங்கள் (''நான் அவரை நேசிக்கிறேன்“ என்னும் பாடலை தொடர்ந்து மெளனமாக இசைக்கிறார் - ஆசி ) அவர் அற்புதமானவர் அல்லவா? ஆம். 144(ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். சகோ. பிரன்ஹாம் அமைதியாயிருக்கிறார் - ஆசி). சற்று நேரம் மிகவும் பயபக்தியாயிருங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், விபத்து நேர்ந்தாலும், துப்பாக்கி வெடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று இயேசு கூறினார். ஒரு நிமிடம் பொறுத்திருந்து. இதற்கு அர்த்தம் உரைக்கப்படுகின்றதா என்று கவனிப்போம், நமது வாசல்களில் அந்நியர்கள் இருப்பார்களானால்; இந்த செய்தியின் மூலம் தேவன் எங்களிடம் என்ன கூறப் போகிறாரென்று காத்திருக்கிறோம். (ஒரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி ) அர்த்தம் உரைத்தல். எனவே அந்த மனிதன் பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்பட்டுவிட்டது. அது என்னவென்று அறியாத யாராகிலும் இங்கிருந்தால், அது ஆவி. அது அனைத்தும் இக்கூடாரத்துக்குள் சம்பவித்து, ஜனங்களுக்கு ஒரு செய்தியை அளிக்கிறது. நாம் ஜெபம் செய்வோம். 145பரலோகப் பிதாவே, இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த நபர் எங்குள்ளார் என்று அறியவில்லை. எங்கேயோயுள்ள யாருடைய இருதயத்திலோ நீர் பேசினீர். அது அவர்களை மறுபடியும் அழைக்கின்றது. முடிக்கும் செய்திலும் அது “பிள்ளைகள்” என்று அவர்களை அழைத்தது. அவர்களை நீர் அழைத்தீர். உம்மை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் ஒருக்கால் நடந்து செல்ல எத்தனித்திருப்பார்கள். எனவே பரலோகப் பிதாவே, அது யாராயிருப்பினும், உமது ஆவியின் பெரிய பங்கை அந்த நபருக்கு அருள வேண்டுமாய் ஜெபிக்கிறோம். அவர்களுடைய பெயரை நீர் கூறவில்லை. அவர்களிடம் நீர் பேசினீர். பிதாவே அப்படித்தான் நீர் செய்ய விரும்பினீர் போலும்! பிதாவே உம்முடைய சித்தம் இந்த நபரில் அல்லது நபர்களில் அருளப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஒருக்கால் இது அவர்களுக்கு கடைசி அழைப்பாக இருக்கக்கூடும். பிதாவே அப்படி இல்லாமலிருக்கும்படி ஜெபிக்கிறேன். ஆண்டவரே, நீர் பேசின இந்த செய்தியை அவர்கள் கேட்டபிறகு, இன்று காலையே அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்யும். ஆவியைப் பெற்றுக்கொள்ள அவர்களுடைய பாத்திரத்தை உயர்த்தி பிடிக்கட்டும். அவர்கள் எழுந்து, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, இனிமையாக பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பணிவிடையும் மகிழ்ச்சியுமுள்ள ஒரு வாழ்க்கைக்கு நடத்தப்படுவார்களாக. இதையும் சபையோரையும் இப்பொழுது உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென். 146இப்படிப்பட்ட செய்திகள் யாராவது ஒருவருக்காக பேசப்படுகின்றன. அது யாரென்று நமக்குத் தெரியாது. சில நேரங்களில் அது யாரென்றும் கூறிவிடும், ஒருக்கால் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இங்கிருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கின ஒருவருக்காக இச்செய்தி அளிக்கப்பட்டிருக்கும். அப்படி நீங்கள் செய்யும்போது, இது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் பேசப்பட்ட அந்நிய பாஷை என்பதை நினைவு கூறுங்கள், அதை உரைத்த அதே பரிசுத்த ஆவியானவர் தாமே அதற்கு அர்த்தமும் உரைக்க வேண்டும். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று சற்று முன்பு படித்ததை நினைவு கூருங்கள். பாருங்கள், விசுவாசிகளின் மத்தியில் இது நடக்கிறது. எல்லோரும் அப்படி செய்வார்கள் என்று நாங்கள் நினைப்பதில்லை. இப்படிப்பட்டவைகளை கேள்விப்படாத ஜனங்கள் சில நேரங்களில் இங்கு வருகின்றனர். அப்பொழுது பரிசுத்த ஆவி யார் மேலாகிலும் விழுந்து, செய்தியையளித்து, புற்று நோயினாலும் இன்னும் மற்ற நோய்களினாலும் மரித்துக் கொண்டிருப்பவர்களை சுகப்படுத்திவிட்டு சென்று விடுகிறது. அது அவருடைய ஜனங்களின் மத்தியிலுள்ள பரிசுத்த ஆவி. அவரை நீங்கள் நேசிக்கின்றீர்களா? ஆமென். நானும் அவரை நேசிக்கிறேன். இன்றிரவு உங்களைக் காண்போமென்று நம்புகிறோம். இப்பொழுது சகோ. நெவில். இந்த ஆராதனையை நமது போதகராகிய சகோ. நெவிலிடம் ஒப்படைக்கிறேன். சரி.